Home
Camera

பொளந்து கட்டும் அட்வென்ச்சர் கேமரா.. அல்ட்ரா ஷேக்கிங் ப்ரூஃப்.. குவாலிட்டி பிச்சியெடுக்கும்.. எந்த மாடல்?

பைக்கிங், சைக்கிளிங், கிளம்பிங், அவுட்டோர் விலாக்கிங் போன்ற அட்வென்ச்சர் பிரியர்களுக்காகவே டிஜி (DJI) நிறுவனத்தின் டிஜி ஓஸ்மோ ஆக்‌ஷன் 4 (DJI Osmo Action 4) கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை விட குறைவான எடையில் பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

நம்மிடையே கேமரா மீதான ஆர்வத்தை பற்றி சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. ஏன்னென்றால், இப்போதெல்லாம், மகிழ்ச்சியான தருணங்களை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்வது மட்டுமல்லாமல், சைக்கிள் ஓட்டும்போதும், பைக் ஓட்டும்போதும், ஸ்விம்மிங் செய்யும் போதும், மலையேறும் போதும் கேமராவை பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.

பொளந்து கட்டும் அட்வென்ச்சர் கேமரா.. குவாலிட்டி பிச்சியெடுக்கும்!

ஆனால், ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு அந்த தருணங்களை போட்டோ, வீடியோ எடுப்பது பாதுகாப்பானது கிடையாது. இதற்காகவே பிரத்யேக கேமராக்கள் இருக்கின்றன. இவை ஸ்மார்ட்போனை விட சிறியதாகவும், ஹெல்மெட், சைக்கிள் மற்றும் பைக்கில் மாட்டி வைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட கேமராக்களின் வரிசையில், வாட்டர் ப்ரூஃப், ஃபாஸ்ட் சார்ஜிங், ஷேக் ப்ஃரூப், 4K வீடியோ சப்போர்ட் போன்ற பிம்மாண்ட அம்சங்களுடன் டிஜி ஓஸ்மோ ஆக்‌ஷன் 4 கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராவின் முழு அம்சங்கள், விலை, விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

டிஜி ஓஸ்மோ ஆக்‌ஷன் 4 அம்சங்கள் (DJI Osmo Action 4 Specifications): இந்த கேமரா 1.4 இன்ச் (320×320 பிக்சல்கள்) ஃபிரண்ட் டிஸ்பிளே மற்றும் 2.25 இன்ச் (360×640 பிக்சல்கள்) பேக் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த கேமராவை 16 மீட்டர்கள் ஆழம் வரையில் தண்ணீரில் பயன்படுத்தலாம்.

பொளந்து கட்டும் அட்வென்ச்சர் கேமரா.. குவாலிட்டி பிச்சியெடுக்கும்!

இதற்கு வாட்டர் ப்ரூஃப் கேஸ் (Waterproof Case) தேவையில்லை. அதேபோல 60 மீட்டர்கள் ஆழம் வரையில் வாட்டர் ப்ரூஃப் கேஸ் கொண்டு பயன்படுத்தலாம். இந்த கேமராவில் 3 மைக்ரோபோன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 512 ஜிபி வரையில் எஸ்டிகார்டு சப்போர்ட் வருகிறது. 1/1.3 இன்ச் சிமொஸ் (CMOS) சென்சார், F/2.8 அபெக்சர் (Aperture), 155° ஃபொவ் (FOV) வருகிறது.

இந்த கேமரா மூலம் 3648×2736 பிக்சல்கள், மேக்ஸ் போட்டோ ரெசொலூஷன் கிடைக்கும். 4x போட்டோ டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 2x வீடியோ டிஜிட்டல் ஜூமிங் செய்துகொள்ள முடியும். 10 எம்பி சிங்கிள் ஸ்டில் போட்டோகிராபி மோட் (Still Photography Modes) வருகிறது. இந்த கேமரா மூலம் 4K (4:3) வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

ஸ்லோவ் மோஷன் (Slow motion), ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), டைம்லேப்ஸ் (Timelapse) சப்போர்ட் உள்ளது. இந்த கேமராவின் பிரம்மாண்ட அம்சங்களாக இஐஎஸ் (EIS), ராக்கிஸ்டெடி 3.0 (RockSteady 3.0) மற்றும் ராக்கிஸ்டெடி 3.0+ (RockSteady 3.0+) உள்ளிட்ட ஸ்டெபிலைசேஷன் (Stabilization) மற்றும் அரிசோன்பேலன்சிங் (HorizonBalancing) மற்றும் அரிசோன்ஸ்ரெடி (HorizonSready) வருகிறது.

இதன் மூலம் பைக்கிங், சைக்கிளிங் போன்ற ஆக்டிவிட்டிகளின் போதுகூட வீடியோவின் தரம் ஷேக்காகாமல் ஸ்டெபிலிட்டியாக இருக்கும். இந்த கேமரா ஜேபிஇஜி (JPEG), ராவ் (RAW), எம்பி4 (MP4) ஆடியோ மற்றும் வீடியோ பார்மெட் கொண்டிருக்கிறது. 6.8W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 1770mAh பேட்டரி வருகிறது. வெறும் 18 நிமிடங்களில் 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 160 நிமிடங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வருகிறது. மொத்தமாக இந்த கேமரா 145 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளது. இந்த கேமராவை வாட்ச் ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்யலாம். இந்த ரிமோட் அட்வென்ச்சர் காம்போ மாடலில் கிடைக்கும்.

இந்த டிஜி ஓஸ்மோ ஆக்‌ஷன் 4 கேமராவின் விலையை பொறுத்தவரையில், ரூ.33,050ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல அட்வென்ச்சர் காம்போ மாடலின் விலை ரூ.41,335 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவை ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இந்தியாவில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கூடுதல் கட்டணம் மற்றும் நாட்கள் செலவாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
DJI Osmo Action 4 Camera With Waterproof, Adventure Combo Announced Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X