Home
Camera

மோடியின் "பட்டேல் சிலை"யை மிஞ்சும் சீனாவின் "அடேங்கப்பா" திட்டம்!

நீங்கள் ஆற்றல் பற்றிய பொதுவான அறிவை கொண்டு இருக்கும் பட்சத்தில், சீனா சோலார் பேனல்கள் வழியாக சூரிய சக்தியை பயன்படுத்த உள்ளது என்பதை கணித்து இருக்க முடியும்.

மனிதர்கள் ஆகிய நாம் பெரிய அளவிலான மின்சார சக்தியைப் பயன்படுத்துகிறோம். அதற்கு போதுமான அளவில் நிலக்கரிகளை எரிக்கிறோம், அணு ஆற்றலையும் எடுத்து கொள்கிறோம், பற்றாக்குறைக்கு ஹைட்ரோ மின்சக்தி மற்றும் காற்றாலைகளையும் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் கூட நாம் ஒரு ஆற்றல் நெருக்கடியை சந்திப்போம் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.

மோடியின்

இந்த சிக்கலை சாதாரணமாக கிடப்பில் விட்டு விட கூடாது, வருங்கால பூமி வாசிகள் சந்திக்க உள்ள ஒரு பிரதான பிரச்சனையாக கருதி, போதுமான நடவடிக்கைகளை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சீனா நிரூபித்து உள்ளது.

சீனா அதை

சீனா அதை "வேற லெவலில்" செய்ய போகிறது!

நீங்கள் ஆற்றல் பற்றிய பொதுவான அறிவை கொண்டு இருக்கும் பட்சத்தில், சீனா சோலார் பேனல்கள் வழியாக சூரிய சக்தியை பயன்படுத்த உள்ளது என்பதை கணித்து இருக்க முடியும். அந்த கணிப்பு சரிதான், ஆனால் சீனா அதை "வேற லெவலில்" செய்ய போகிறது - அதாவது சோலார் பேனல்களை விண்வெளியில் கட்டமைக்க உள்ளது.

தடைகள் நிறைய உள்ளன!

தடைகள் நிறைய உள்ளன!

விண்வெளியில் மாபெரும் அளவிலான சோலார் பேனல்கள் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் ஆற்றல் பற்றாக்குறை பிரச்சினையை சரிசெய்ய - சரி செய்து விடலாம் - என்று சீனா விரும்புகிறது, நம்புகிறது. பூமியில் (அதாவது நிலத்தில்) சூரிய சக்தியைக் கட்டுப்படுத்துவதில், தடைகள் நிறைய உள்ளன. குறிப்பாக மேக மூட்டம், புகை மற்றும் பூமியின் இயற்கையான சாய்வு போன்ற காரணங்களினால் ஆண்டு முழுவதுமனா சோலார் சக்தி சேமிப்பு செயல்முறைகள் தடுக்கப்படுகின்றன. சுருக்கமான சொல்ல வேண்டுமானால், சூரியனைக் கட்டுப்படுத்தக்கூடிய வெகுஜன உற்பத்தி தொழில்நுட்பத்தை நாம் இன்னும் பெறமுடியவில்லை.

ஒரு தடையற்ற சக்தி!

ஒரு தடையற்ற சக்தி!

அந்தப் பிரச்சினையை தீர்க்கும் ஒரு அசாத்தியமான வழியை தான் தற்போது சீனா முன்மொழிந்து உள்ளது. சோலார் பேனல்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம், அவைகள் எந்த விதமான வளிமண்டல தடைகளையும் சந்திக்காது, சூரிய சக்தியை முழுமையாக அனுபவிக்கும் ஒரு தடையற்ற சக்தியாக திகழும் என்று சீனா நம்புகிறது.

சரி இந்த விண்வெளி சோழர் பேனல்களின் கட்டமைப்பு அளவு தான் என்ன?

சரி இந்த விண்வெளி சோழர் பேனல்களின் கட்டமைப்பு அளவு தான் என்ன?

பூமியின் மேற்பரப்புக்கு மேல் சுமார் 36,000 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு விண்மீன் மின்நிலையத்தை உருவாக்கும் மிகப்பெரிய திட்டங்களை சீனா சமீபத்தில் அறிவித்து உள்ளது. வருகிற 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சிறிய சூரிய மின்சக்தி நிலையங்களை உருவாக்கவும் மற்றும் தொடங்கவும் சீனா திட்டமிட்டு உள்ளது. அவைகள் வருகிற 2030 ஆம் ஆண்டிற்குள் மெகாவாட் நிலையமாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் ஜிகாவாட் நிலையமாகவும் மேம்படுத்தப்படும்.

மேக மூட்டம் அல்லது இரவு நேர இடைவெளிகள்!

மேக மூட்டம் அல்லது இரவு நேர இடைவெளிகள்!

இது சாத்தியமாகும் பட்சத்தில், மேக மூட்டம் அல்லது இரவு நேர இடைவெளிகள் போன்ற எந்த விதமான தலையீடுகளும் இல்லாமல் தொடர்ச்சியான முறையில் சூரிய ஒளியினால் உருவாக்கம் பெரும் ஆற்றல் சீனாவிற்கு கிடக்கம். இந்த அசாத்தியமான திட்டம் ஒரு சக்தி வாய்ந்த மின்சக்தி திட்டமாகவும், தொடர்ச்சியான மின் விநியோகம் அளிக்கும் ஒரு திட்டமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

6 மடங்கு அதிகமான தீவிரம்!

6 மடங்கு அதிகமான தீவிரம்!

சீனாவின் அகாடெமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி கார்ப்பரேஷன் கூறுகையில், "இதுபோன்ற அமைப்பானது பூமியின் சூரிய ஆற்றல் ஆலைகளை விட 6 மடங்கு அதிகமான தீவிரத்தையும், 99 சதவிகிதத்தை நம்பகமான நேரத்தையும் வழங்க முடியும். இந்த நிலையங்களின் செயல்பாடு மிகவும் எளிமையானது - விண்வெளியில் கிடைக்கும் சூரிய ஒளியானது மின்சக்தி ஆற்றலாக மாற்றியமைக்கப்படும். பின்னர் ஒரு மைக்ரோவேவ் அல்லது லேசரைப் பயன்படுத்தி பூமிக்கு "பீம்" (ஒளிக்கோடு) செய்யப்படும்.

சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா!

சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா!

உண்மையில், இது சொல்லும் அளவிற்கு மிகவும் எளிமையான ஒரு விடயமாக இருக்க போவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு சிறிய அளவிலான சோலார் மின் நிலையத்தின் எடையானது சுமார் 1000 டன் என்கிற அளவை தொடும், நிலைமை இப்படி இருக்க பூமியின் சுற்றுப்பாதைக்குள் ஒரு சோலார் மின் நிலையத்தை கட்டமைக்க அல்லது நிலைநிறுத்த, மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவைப்படும். இந்த சிக்கலை தீர்க்கவும் சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு யோசனையை கைவசம் வைத்துள்ளனர் (சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா!)

பொருட்களை அனுப்பினால் தானேபிரச்சனை!

பொருட்களை அனுப்பினால் தானேபிரச்சனை!

அதாவது, விண்வெளியில் சோலார் மின் நிலையத்தை உருவாக்க தேவையான ரோபோக்கள் மற்றும் பொருட்களை அனுப்பினால் தானேபிரச்சனை, மின் நிலையத்தையே 3டி பிரிண்டிங் செய்து விட்டால் என்ன? என்று சாதாரணமாக கூறுகின்றன. இந்த அனைத்தையும் செய்ய சீனர்கள் ஒரு மிக குறுகிய நேரத்தை தங்களுக்கு தானே அமைத்து கொண்டுள்ளனர். ஆக அடுத்த 50 ஆண்டுகளில், சீனா உண்மையில் இந்த எதிர்கால கனவை ஒரு யதார்த்தமாக மாற்றலாம், மாற்றும்.

Best Mobiles in India

English summary
China Will Have A Solar Power Plant 36,000 Km In Space For Limitless Energy Supply By 2030 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X