Home
Camera

இஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா! பின்னணி என்ன?

அம்மாதிரியான ஆட்களுக்கு சொந்த நாட்டின் மக்கள் தொகை பற்றியோ, நாட்டின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி, அவ்வளவு ஏன் நிதி என்றால் என்னவென்று கூட தெரியாது.

சிலர் இருக்கிறார்கள்! சொந்த நாட்டை குறை சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது; வேறொரு நாட்டுடன் சொந்த நாட்டை ஒப்பீடு செய்து மட்டம் தட்டவில்லை என்றால் அவர்களுக்கு சோறு தொண்டைக்குள் இறங்காது.

இஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா! பின்னணி என்ன?

அம்மாதிரியான ஆட்களுக்கு சொந்த நாட்டின் மக்கள் தொகை பற்றியோ, நாட்டின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி, அவ்வளவு ஏன் நிதி என்றால் என்னவென்று கூட தெரியாது.

ஆன்டி-இந்தியன்ஸ்களுக்கு!

ஆன்டி-இந்தியன்ஸ்களுக்கு!

அது அமெரிக்காவோ, அல்லது ஜப்பானோ அல்லது சீனாவோ, யார் என்ன செய்தாலும் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும், செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் - இந்தியா இஸ் வேஸ்ட்! அப்படியான ஆன்டி-இந்தியன்ஸ்களுக்கு இஸ்ரோஸின் வாயிலாக ஒரு தகவலை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

பேலோட் விவரம் வெளியாகியுள்ளது!

பேலோட் விவரம் வெளியாகியுள்ளது!

விண்வெளிக்குள் செல்ல காத்திருக்கும் இஸ்ரோவின் சந்திரயான் -2 பற்றிய புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது, அதாவது அதன் பேலோட் (சுமந்து செல்லும் பொருட்கள்) விவரம் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தொகுதிக்கும் இடம் பெற்றுள்ளது.

வரிசையில் நாசாவும் நின்றுள்ளது!

வரிசையில் நாசாவும் நின்றுள்ளது!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனை நோக்கி செல்ல இந்தியா தயாராக உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கருத்துப்படி, சந்திராயன் 2-வில் 13 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேலோட்களும், ஒரு ரோவரும், ஒரு லேண்டரும் மற்றும் ஒரு ஆர்பிட்டரும் மட்டுமில்லாமல் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு செயலூக்க சோதனை தொகுதி ஒன்றையும் சுமந்து செல்ல உள்ளது.

"ஆமாம்" சொல்லாமல் இழுத்தடித்து இஸ்ரோ

நாசாவின் இந்த தொகுதி (மாட்யூல் ) பூமி மற்றும் அதன் ஒரே இயற்கை செயற்கைக்கோள் (நிலவு) ஆகியவற்றுக்கு இடையேயான தூரத்தை அளவிடும் இலக்கை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே இஸ்ரோ உடனான ஒத்துழைப்பை பற்றி நாசா உறுதிப்படுத்தியிருந்த போதிலும் கூட, அதுசார்ந்த எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் இஸ்ரோ செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் தற்போது அதை நிகழ்த்தி உள்ளது

பல்பு வாங்கிய நாசா!

பல்பு வாங்கிய நாசா!

இதற்கு முன்னதாக நாசா இதேபோன்றதொரு நடவடிக்கையை இஸ்ரேலின் விண்கலம் ஒன்றில் நிகழ்த்தியதும், அந்த விண்கலம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு பதிலாக, மோதி உடைந்தும் இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் கொடுத்த அந்த "அடி"க்கு இஸ்ரோ மருந்து போட்டும் என்பதில் எந்த சந்தேகமும் நாசாவிற்கு இல்லை என்பது வெளிப்படை.

வெளிநாட்டு பேலோட்களை கொண்டு செல்வது இஸ்ரோவிற்கு புதிதா?

வெளிநாட்டு பேலோட்களை கொண்டு செல்வது இஸ்ரோவிற்கு புதிதா?

இல்லவே இல்லை! மிகவும் பழக்கப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் சந்திரனின் மேற்பரப்பில் நீரின் இருப்பை கண்டுபிடித்து பெரும் வெற்றியாக அறிவிக்கப்பட்ட சந்திரயான் -1 திட்டமானது கூட மொத்தம் ஐந்து வெளிநாட்டு பேலோட்களைக் கொண்டு சென்றது. அதில் மூன்று ஐரோப்பாவிலிருந்தும் மற்றும் இரண்டு பேலோட்கள் அமெரிக்காவில் இருந்தும் வந்தன.

சொல்லியடிக்கும் கில்லி!

சொல்லியடிக்கும் கில்லி!

சந்திராயன் 2-ன் தொழில்நுட்ப மேம்பாடு ஆனது ஜூலை 9 முதல் 16 என்கிற தற்காலிக கால இடைவெளியில் நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் விண்ணிற்குள் செலுத்தப்பட்டு, சுமார் 3.8 டன் எடையை சுமந்தபடி, சரியாக செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரை இரக்கத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் மற்றும் ப்ரயான்?

விக்ரம் மற்றும் ப்ரயான்?

சந்திராயன் சுமந்து செல்லும் லேண்டர் விக்ரம் ஆனது பத்திரமாக நிலவில் தரை இறங்கிய பின், ரோவர் ப்ரயான் ஆனது நிலவின் மேற்பரப்பில் சுமார் 300-400 மீட்டர் தொலைவிலான சுழற்சியை மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்து உள்ளார்.

ஆழமான ஆய்வுகள்!

ஆழமான ஆய்வுகள்!

மேலும் ரோவர் ப்ரயான் ஆனது நிலவில் மொத்தம் 14 புவி நாட்களை கழிக்கவும், பல்வேறு விஞ்ஞான சோதனைகள் நடத்தவும் உள்ளது. குறிப்பாக அது சந்திர மேற்பரப்பின் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்து, தரவரிசை செய்யும். எல்லாவற்றை விடவும் சிறப்பாக தரை இறங்கிய 15 நிமிடங்களுக்குள் நிலவை படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகில் ஏறி!

முதுகில் ஏறி!

ரோவர், லேண்டர் மற்றும் நாசாவின் மாட்யூல் உடன் சேர்ந்து, பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் தரவு சேகரிப்பு நோக்கத்திற்காக நாட்டிலுள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பேலோட்களும் சந்திராயன் 2-வின் முதுகில் ஏறி விண்வெளிக்குள் செல்கின்றன.

பேலோட்களின் விவரங்கள்:

பேலோட்களின் விவரங்கள்:

இஸ்ரோ சாட்டிலைட் சென்டரின் லார்ஜ் ஏரியா சாப்ட் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (லாஸ்) மற்றும் அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட பிஸிக்கல் ரிசர்ச்லேப்பின் சோலார் எக்ஸ்ரே மானிட்டர், அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரின் இமேஜிங் ஐஆர் ஸ்பெக்ட்ரோமீட்டர், எஸ்ஏசி-ஐ சேர்ந்த சின்தடிக் அப்பெஷர் ரேடார் மற்றும் டெர்ரெயின் மேப்பிங் கேமரா 2, திருவனந்தபுரம் சென்டரை சேர்ந்த நியூட்ரல் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர், விக்ரம் லேண்டர், ராம்பா எனப்படும் ரேடியோ அனடாமி ஆப் மூன் பவுண்ட் ஹைப்பர்சென்சிடிவ் அண்ட் அட்மாஸ்பியர், சந்திராவின் சர்பேஸ் தெர்மோ பிஸிக்கல் சோதனையின் (ChaSTE), சந்திரனின் நிலக்கரிச் செயற்பாட்டுக்கான கருவி (ILSA), லேசர் ரெஃப்லக்ட்டிவ் அர்ரே (LRA), ரோவர் சென்சார் காம்ப்ளிமென்ட் (APXS, LIBS) மற்றும் லேசர் இன்டியூசிட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS).

Best Mobiles in India

English summary
Chandrayaan-2 Will Carry 13 Indian Payloads, One Passive Experiment Module from NASA, Says ISRO : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X