ஆற்றல் வாய்ந்த புதிய கேஸியோ கேமரா!

By Karthikeyan
|
ஆற்றல் வாய்ந்த புதிய கேஸியோ கேமரா!

கேசியோ நிறுவனம் அதிவேக கேமரா ஒன்றை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கேமராவிற்கு எக்ஸீலிம் இஎக்ஸ் ஸட்ஆர்300 மினி டிவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா மிகவும் அகலமான 24எம்எம் ஆங்கிள் லென்ஸைக் கொண்டிருக்கிறது. அதோடு இதில் ஒரு 12.5எக்ஸ் சூம் மற்றும் ரேபிட் சட்டரும் இருக்கின்றன.

இந்த கேமராவில் கன்டினியுவஸ் ரிலீஸ் தொழில் நுட்பம் உள்ளதால், இடைவெளியில்லாமல் இந்த கேமராவில் போட்டோ எடுக்க முடியும். இந்த பேட்டரி 500 போட்டோக்களை எடுக்கும் அளவிற்கு மின் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த பேட்டரியில் ஐ-பை மற்றும் ப்ளாஷ் ஏர் போன்ற தொழில் நுட்பங்கள் உள்ளதால் இது எடுக்கும் போட்டோக்களை வயர்லஸ் வழியாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்த கேமரா அதிவேகமாக பதிவு செய்யும் திறன் கொண்டது. அதோடு இதில் ப்ரீமியம் ஆட்டோ மூவி பங்சன் மற்றும் எச்டிஆர் தொழில் நுட்பம் ஆகியவை உள்ளதால் இது எடுக்கும் போட்டோக்களை மிக எளிதாக எடிட் செய்ய முடியும். மேலும் இந்த கேமரா எச்எஸ் நைட் சீன் தொழி்ல் நுட்பம் கொண்டிருப்பதால் இருட்டிலும் மிகத் தெளிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

குறிப்பாக வெகு தூரத்தில் உள்ளவற்றைக் கூட இந்த கேமரா மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கும். மேலும் இது ஸ்லைட் பனோரமா கொண்டிருப்பதால் 360 டிகிரி ஆங்கிளில் படங்களை எடுக்க முடியும். இந்த கேமராவி்ல எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியும் உண்டு. மேலும் இந்த கேமரா கருப்பு, வெள்ளை, தங்கம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது.

இந்த கேமார ரூ,24,000க்கு விற்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X