Home
Camera

சத்தமில்லாமல் கிளிக்கித் தள்ளும் புதிய கெனான் கேமரா!

By Karthikeyan
சத்தமில்லாமல் கிளிக்கித் தள்ளும் புதிய கெனான் கேமரா!

இஒஎஸ் 20டிஎ டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமராவைத் தொடர்ந்து இப்போது கெனான் இஒஎஸ் 60டிஎ டிஎஸ்எல்ஆர் என்ற புதிய கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. குறிப்பாக புகைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த கேமரா பேருதவியாக இருக்கும். மேலும் ஆஸ்ட்ரோக்ராபியில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்த கேமரா பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புதிய கேமரா பல மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக மிகத் துல்லியமாக படங்களை எடுக்கக்கூடிய சக்தியை இந்த கேமரா கொண்டுள்ளது. குறிப்பாக கெனானின் சாதாரண டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமராவை விட இந்த புதிய கேமரா 3 மடங்கு அதிக சக்தி கொண்டது.

குறிப்பாக இந்த கேமராவில் 18 மெகா பிக்சல் எபிஎஸ்-சி சிஎம்ஒஎஸ் சென்சார் உள்ளது. 3 இன்ச் அளவில் வேரி-ஆன்கிள் க்ளியர் வியூவ் எல்சிடி திரையும் உள்ளது. அதுபோல் 63 சோன் டூவல் லேயர் மீட்டரிங் சிஸ்டம், முழு மேனுவல் கட்டுப்பாடுகள், எச்டிஎம்ஐ போர்ட், ஹைட்ரஜன் அல்பா லைட் சென்சிட்டிவிட்டி, இன்ப்ரேர்டு ப்ளாக்கிங் பில்டர், ஐஎஸ்ஒ சென்சிட்டிவிட்டி, குறைந்த ஒலியுடைய சென்சார் மற்றும் ஸ்டீரியோ எவி வீடியோ கேபிள் அவுட்புட் போன்ற சூப்பரான அம்சங்கள் உள்ளன.

இந்த புதிய கேமரா ஆர்எடபுள்யு, ஜேபிஇஜி, மற்றும் ஆர்எடபுள்யு+ஜேபிஇஜி பார்மட்டுகளில் வரும் படங்களை சப்போர்ட் செய்யும். மேலும் லைவ் வியூவ் மோடும் இந்த கேமராவில் உள்ளது. அதனால் படத்தை எடுக்கும் போது கேமராவில் இருந்து சத்தம் வராது.

இதில் உள்ள எவி வீடியோ கேபிள் மூலம் இந்த கேமராவை டிவியில் இணைக்க முடியும். அதன் மூலம் எடுத்த படங்களை டிவியில் பார்க்க முடியும். மேலும் இந்த கேமராவில் 9 வகையான வெவ்வேறு ஆட்டோ போக்கஸ் பாயிண்டுகள் உள்ளன.

இவ்வளவு அருமையான வசதிகளுடன் வரும் இந்த கேமரா ரூ.75000க்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X