துல்லியமான புகைப்படத்திற்கு புதிய கெனான் கேமரா!

Posted By: Karthikeyan
துல்லியமான புகைப்படத்திற்கு புதிய கெனான் கேமரா!

கெனான் சமீபத்தில் ஒரு புதிய பவர் ஷாட் கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு கெனான் பவர்ஷாட் எஸ்எக்ஸ்260 எச்எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு கையடக்க கேமரா ஆகும். ஆனால் இதன் சூம் அளவு 25 முதல் 500 மிமீ ஆகும்.

இந்த கேமரா பல நல்ல புதிய தொழில் நுட்பங்களுடன் வருகிறது. இது குறைந்த எடையுடன் கையடக்க அளவில் வருவதால் இதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். அதே நேரத்தில் இதை மிக அழகாக இயக்கவும் முடியும்.

இந்த கேமரா 12.10 மெகா பிக்சல் ரிசலூசன் கொண்ட எல்சிடி வியூவ்பைண்டரைக் கொண்டிருக்கிறது. இது எல்சிடி வசதியுடன் 3.0 இன்ச் அளவில் வருகிறது. மேலும் மிக வெளிச்சமான வேகமான டிஎப்டி எல்சிடி மானிட்டரையும் கொண்டிருக்கிறது.

மேலும் இன்டலிஜென்ட் ஐஎஸ், அதி வேகம் கொண்ட யுஎஸ்பி, அனலாக் ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட், மேனுவல் போக்கஸ் மற்றும் ஐரிஸ் அபர்சர் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்த கேமரா 20எக்ஸ் ஆப்டிக்கல் சூமுடன் கூடிய உயர் சென்சிட்டிவிட்டி கொண்ட சிஎம்ஒஎஸ் சென்சார் கொண்டிருப்பதால் வெளிச்சம் இல்லாத இடத்திலும் இந்த கேமரா துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும்.

மேலும் இந்த கேமராவில் ஜிபிஎஸ் சப்போர்ட், ஐப்ரேம் சப்போர்ட், எச்டிஎம்ஐ அவுட்புட், அனலாக் வீடியோ அவுட்புட், டிஜிக் 5 இமேஜிங் ப்ராசஸர், தொடர்ச்சியான செர்வோ எஎப் போன்ற அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளன.

இந்த புதிய கெனான் கேமரா 1080பி கொண்ட முழு எச்டி படங்களையும் பதிவு செய்யும் வசதி கொண்டது. மேலும் எஸ்டி கார்டு உள்ளதால் சேமிப்பு வசதிகளும் இந்த கேமராவில் பிரமாதமாக உள்ளன.

இந்த கெனான் கேமரா கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ.23000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot