Home
Camera

9 புதிய கேமராக்களை வரிசை கட்டிய கெனான்!

By Karthikeyan
9 புதிய கேமராக்களை வரிசை கட்டிய கெனான்!

புதி9 புதிய கேமரா மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய மாடல்கள் 7 பவர் ஷாட் மாடல்களையும் மற்றும் 2 இக்சூஸ் மாடல்களையும் கொண்டிருக்கின்றன.

இந்த கேமராக்களின் பெயர்கள் முறையே எஸ்510 மற்றும் 240 எச்எஸ் மேலும் பவர்ஷாட் மாடல்களான எ810, எ2300, எ2400 ஐஎஸ், எஸ்எக்ஸ் 260எச்எக்ஸ், எ4000 ஐஎஸ், எஸ்எக்ஸ்240 எச்எஸ் மற்றும் எ3400 ஐஎஸ் ஆகும். இந்த கேமராக்களோடு கேனன் தனது புதிய நவீன டிஜிக் 5ஜி ப்ராசஸரையும் சந்தையில் களமிறக்குகிறது.

எச்எஸ் சிஸ்டம் டிஜிக் 5 ப்ராசஸருடன் வருவதால் இந்த கேமராக்கள் மிக பிரமாதமாக இருக்கும். இதன் மூலம் மிகத் துல்லியமாக படம் எடுக்க முடியும். இருட்டான இடத்திலும் கூட மிகத் தெளிவாக படம் எடுக்க முடியும்.

இக்சுஸ் 510 எச்எஸ் மற்றும் பவர்புள்ஷாட் 240 எச்எஸ் கேமராக்கள் நவீன வைஃபை வசதிகளுடன் வருகின்றன. இதன் மூலம் லேப்டாப், மொபைல்கள் மற்றும் வைபை சாதனங்களுக்கு இந்த கேமராக்கள் மூலம் படங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். அதுபோல் சோஷியல் நெட்வொர்க்குகளான பேஸ்புக் மற்றும் யுடியூப் போன்றவற்றில் நேரடியாக படங்களை அப்லோட் செய்ய முடியும். அதுபோல் வைஃபை மூலம் கேமராவிலிருந்து கேமராவிற்கு படங்களை அனுப்பவும் முடியும்.

இந்த கேமராக்களில் டச் சட்டர் வசதியும் உண்டு. மேலும் இவற்றில் பேஸ் டிடெக்சன் தொழில் நுட்பமும் உண்டு. முகத்தை எடுத்துவிட்டு பெயர் மற்றும் வயதைச் சேர்த்து கொள்ளலாம். இந்த கேமராக்களில் பயன்படுத்தப்படும் லென்சுக்கள் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் உள்ளன. அதனால் இவை எடுக்கும் படங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும். மேலும் இந்த கேமராக்கள் அடக்கமாகவும் இருக்கின்றன. இவற்றின் விலை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X