ரூ.1,10,495 மதிப்பில் கேனான் அறிமுகம் செய்துள்ள புதிய வகை கேமிரா

|

கேனான் நிறுவனம் இந்தியாவில் ரூ.1,10,495 மதிப்புள்ள அதிநவீன ஃபுல் பிரேம் மிர்ரர் இல்லாத கேமிரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு மிர்ரர் இல்லாத மாடல் EOS R ரக கேமிராவை அறிமுகம் செய்த கேனான், தற்போது இந்த புதிய லேட்டஸ்ட் DSLR ரக கேமிராவை அறிமுகம் செய்துள்ளது. கேனான் EOS RP ரக கேமிராவான இதில் புதிய 26.2 எம்பி புல் பிரேம் மிர்ரர் இல்லாத சென்சார் உள்ளது. மேலும் இதன் பாடியின் மதிப்பு ரூ.1,10,495 எனவும் பாடியும் கிட்டும் சேர்ந்து ரூ.1,99,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த கேமிரா இந்திய சந்தைக்கு வந்துள்ளதால் உடனே விருப்பமுள்ளவர்கள் வாங்கி கொள்ளலாம்

ரூ.1,10,495 மதிப்பில் கேனான் அறிமுகம் செய்துள்ள புதிய வகை கேமிரா

கேனான் EOS RP மிர்ரர் இல்லா DSLR கேமிராவின் சிறப்பு அம்சங்கள்:

கேனான் EOS RP என்பது மிகவும் எடை குறைவான இதுவரை வெளிவந்த DSLR கேமிராக்களில் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த கேமிராவில் 26.2 எம்பி மிர்ரர் இல்லாத சென்சார் இருப்பதும், லேட்டஸ்ட் டிஜிக் 8 இமேஜ் பிராசஸர் இருப்பதும் தனித்தன்மை ஆகும். இதனால் இதனால் பிடிக்கப்படும் இமேஜ்கள் உயர் ரக தரத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்ட புதிய கேனான் EOS RP மிர்ரர் இல்லாத கேமிராவில் டி.எல்.ஓ என்று கூறப்படும் டிஜிட்டல் லென்ஸ் ஆப்டிமிசைர் இருப்பதால் இதனால் எடுக்கப்படும் புகைப்படத்தில் எந்தவித பிசிரும் இருக்க வாய்ப்பே இல்லை

ஆட்டோ போகஸ்

ஆட்டோ போகஸ்

இந்த மாடல் கேமிராவில் ஆட்டோ போகஸ் இருப்பதும், அட்வான்ஸ் ஏஎஃப் சிஸ்டம் இருப்பதும் கூடுதல் சிறப்பு அம்சங்கள் ஆகும். மேலும் இந்த மாடலில் ஏஃஎப் பாயிண்ட் பொசிஷன் 4779 வரை உள்ளது. டூயல் பிக்சல் CMOS AF டெக்னாலஜி, மிக வேகமான அதே நேரத்தில் மிகச்சரியான போகஸை தரும்.

ஏஎஃப் டெக்னாலஜி

ஏஎஃப் டெக்னாலஜி

மேலும் கேனான் EOS RP மாடல் புதிய கேமிராவில் மிகவும் குறைந்த வெளிச்சம் இருந்தாலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கலாம். குறைந்த வெளிச்சம் இருக்கும் போது இதில் உள்ள ஏஎஃப் டெக்னாலஜி ஆட்டோமெட்டிக்காக ஆக்டிவேட் ஆகும்.

கேனான் EOS RP மாடல்

கேனான் EOS RP மாடல்

மேலும் இந்த கேனான் EOS RP மாடல் கேமிராவின் உள்ளேயே ஸ்டெபிலிசேஷன் வசதி இருப்பதால் காம்பினேஷன் ஐஎஸ், மூவி டிஜிட்டல் ஐஎஸ் ஆகிய அம்சங்களுக்கு உதவியாக உள்ளது. மேலும் இந்த மாடலின் வியூஃபைண்டர் மற்றும் எல்.சி.டி டிஸ்ப்ளே குறித்து பார்ப்போம் என்றால் OLED எலக்ட்ரானிக் வியூ ஃபைண்டர் உள்ளது. மேலும் இதில் 7.62 செமீ டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

செயலி

செயலி

இந்த மாடல் கனெக்டிவிட்டி குறித்து பார்த்தோம் என்றால் இதில் வைபை, புளூடூத், ஆகியவை உண்டு. எனவே டேட்டாவை ஸ்மார்ட்போன், செயலி ஆகியவற்றுக்கு மாற்றுவதும் பெறுவதும் எளிது. மேலும் இந்த மாடல் கேமிராவை தவிர கேனான் நிறுவனம், ஆறு புதிய லென்ஸ் வகைகளையும் அறிமுகம் செய்துள்ளது. அவை 15-35மிமீ f/2.8L IS யூஎஸ்.எம் 24-70மிமீ f/2.8 IS யூஎஸ்.எம் , 70-200 f/2.8L IS யூஎஸ்.எம் , 85மிமீ f/1.2L USM, 85மிமீ f/1.2l யூஎஸ்.எம் DS and 24-240மிமீ f.4-6.3 IS யூஎஸ்.எம் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Canon launches EOS RP full-frame mirrorless camera in India at a starting price of Rs 110495 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X