கெனான் கேமராக்களில் வைஃபை இன்டர்நெட் இணைப்பு வசதி!

Posted By: Karthikeyan
 கெனான் கேமராக்களில் வைஃபை இன்டர்நெட் இணைப்பு வசதி!

சமீபத்தில் யோக்கோஹாமாவில் நடந்த போட்டோ இமேஜிங் விழாவில் கேனன் நிறுவனம் 6 புதிய கேமரா மாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய மாடல்கள் லெக்ரியா மற்றும் எச்எப்ஆர் வரிசையில் வருகின்றன. இந்த 6 கேமரா மாடல்களிலும் வைஃபை வசதியை கொண்டிருக்கின்றன. இந்த கேமராக்களில் இருந்து போட்டோக்களை நேரடியாக சமூக இணைய தளங்களுக்கு மிக எளிதாக அனுப்ப முடியும்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்றவை கேமராக்களைத் தாங்கி வருவதால் கேமரா தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையான போட்டியையும் அதே நேரத்தில் கடும் நெருக்கடியையும் சந்தித்து வருகின்றன. மேலும் இன்பில்ட் கேமரா கொண்ட மொபைல் மற்றும் டேப்லெட்டுகள் ஏராளமாகப் படையெடுத்து வருகின்றன.

மேலும் இவை 3ஜி வசதி கொண்டு வருவதால் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் இருக்கும் கேமராக்கள் மூலம் படம் எடுத்து அதை மிக எளிதாக மக்கள் இணையதளங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் தனியான கேமராவிற்கான தேவை குறைந்து வருகிறது.

இதை உணர்ந்த கேனன் இப்போது தனது 6 புதிய கேமரா மாடல்களில் வைபை வசதியை வழங்குகிறது. அதனால் இந்த கேமராக்களால் எடுக்கும் படங்கள் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள கேமராக்களைவிட மிகத் துல்லியமாகவும் அதே நேரத்தில் மிகத் தெளிவாகவும் இருக்கும்.

மேலும் வைபை இணைப்பு உள்ளதால் இதன் மூலம் அனுப்பப்படும் படங்களும் மிகத் தரமாக இருக்கும். இந்த புதிய கேமரா மாடல்களின் பெயர்களைப் பார்த்தால் எல்எக்சுஸ் 240 எச்எஸ் மற்றும் 510 எச்எஸ், லெக்ரியா வரிசையில் எம் 56 மற்றும் எம் 52 மற்றும் எச்எப்ஆர் 38 போன்றவை ஆகும். கேனனின் இந்தியாவிற்கான துணை மேலாளர் திரு. அத்துல் பராத்வாஜ் கூறும் போது இந்த புதிய கேமராக்கள் மிகத் தரமான வீடியோ பதிவை வழங்கும். மேலும் இவை குறைந்த எடையுடன் இருக்கும் என்று கூறுகிறார்.

இந்த புதிய கேமராக்கள் பல கட்டிங் எட்ஜ் வீடியோ பதிவு மற்றும் போட்டோ சூட்டிங் வசதி போன்றவற்றைக் கொண்டுள்ளன. அதனால் புகைப்படத் துறையில் புதிதாக நுழைபவர்களுக்கும் அதே நேரத்தில் ஏற்கனவே புகைப்படத் துறையில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த கேமரா மிக வரப்பிரசாதமாக இருக்கும். இந்த கேமராக்கள் எடுக்கும் போட்டோக்கள் மிகத் தரமாக இருக்கும் என்று கேனன் உத்திரவாதம் வழங்குகிறது.

இந்த நேரத்தில் கெனான் நிறுவனம் இந்தியாவில் டிஎஸ்எல்ஆர் கேமரா துறையிலும் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. ஏனெனில் இந்த கேமரா துறை இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதுபோல் வரும் காலத்தில் இவற்றின் விற்பனையும் அதிகமாக இருக்கும் என்று கேனன் நம்புகிறது. இவற்றின் விலை ரூ.25,000ற்கு மேல் இருந்தாலும் தரமான படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய கேமராக்களையே மக்கள் விரும்புகின்றனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்