ரூ.20,000ல் ஆற்றல் வாய்ந்த புதிய கெனான் கேமரா!

Posted By: Karthikeyan
ரூ.20,000ல் ஆற்றல் வாய்ந்த புதிய கெனான் கேமரா!

சமீபத்தில் கேனன் நிறுவனம் தனது இக்சுஸ் 1100 எச்எஸ் என்ற புதிய கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய கேமரா பலருடைய உள்ளங்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேமராவின் முக்கிய சிறப்பு என்னவென்றால் குறைந்த வெளிச்சத்திலும் மிகத் துல்லியமாக பிரகாசமான படங்களை எடுக்கும் எச்எஸ் சிஸ்டம் கொண்டதாகும். இந்த புதிய கேமரா கைக்கு அடக்கமாக அதே நேரத்தில் படு ஸ்டைலாக இருக்கிறது. அதுபோல் இந்த கேமராவில் நவீன தொழில் நுட்பமும் உண்டு.

இந்த இக்சுஸ் 1100 எச்எஸ் கேமராவின் முக்கிய சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இந்த கேமரா 99 x 59 x 22 மிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எடை 206 கிராம் மட்டுமே. இந்த கேமராவில் க்ரியேட்டிவ் மோடுகள் மற்றும் ஐப்ரேம் மூவி போன்ற வசதிகள் உள்ளன. இந்த கேமரா தொடு வசதி கொண்ட ஒரு எல்சிடி திரையாக் கொண்டிருக்கிறது. இந்த திரை தூய்மையான தெளிவான வண்ணம் II கொண்டிருக்கிறது. அதுபோல் சூப்பர் ஸ்லோ மோஷன் மூவி வசதியையும் இந்த கேமரா கொண்டிருக்கிறது.

இந்த கேனன் புதிய கேமராவின் செயல்திறனைப் பார்த்தால் இது அதிவேகம் கொண்ட அதாவது 7.8எப்பிஎஸ் வேகத்தில் இயங்கக்கூடியது. இதன் தொடுதிரை 3.2 இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேமராவில் மூவி டைஜஸ்ட் மற்றும் ஐஎஸ்ஒ 100-3200 போன்ற வசதிகள் உண்டு.

அடுத்ததாக இந்த கேமராவில் இருக்கும் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இந்த கேமரா 12.1 எம்பி சிமோஸ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் 32 சீன்களை எடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஐஎஸ் ஸ்மார்ட் ஆட்டோ வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் அவட்புட் ரிசலூசன் 12 எம்பி ஆகும். இதன் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த கேமராவில் யுஎஸ்பி கேபிளும் உண்டு. அதுபோல் இந்த கேமரா இடுப்பு கச்சையையும் வழங்ககிறது. அதனால் இந்த கேமராவை இடுப்பைச் சுற்றி மிக அழகாக அணிந்து கொள்ளலாம். அதனால் இந்த கேமரா மிக பாதுகாப்பாக இருக்கும்.

இந்த புதிய இக்சுஸ் கேமரா மெமரி கார்டை வழங்குகிறது. அதுபோல் இதில் டிஎப்டி வண்ணமும் உண்டு. அதோடு இந்த கேமரா 5 லெவல் வெளிச்ச அளவைக் கொண்டிருக்கிறது. இதன் லென்ஸ் சிப்ட் டைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா ஆட்டோ போக்கஸ், பிக்ஸ்டு ப்ரேமுடன் கூடிய பேஸ் டிடெக்ட் மற்றும் பலவகையான மோடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த கேமராவில் டிஜிக் 4 இமேஜிங் ப்ராசஸரும் உண்டு. இந்த கேமரா உண்மையிலேயே மிகவும் எளிமையான கேமரா ஆகும். இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். இதன் விலை ரூ.20000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot