24.1 மெகாபிக்சல் சென்சார் வசதியுடன் இஓஎஸ் எம்50 கேமரா அறிமுகம்.!

இந்த இஓஎஸ் எம்50-ல் ஒரு 24.1-மெகாபிக்சல் ஏபிஎஸ்-சி சிஎம்ஓஎஸ் சென்ஸர் உடன் கேனானின் புதிய டிஜிக் 8 பட செயலி ஆகியவை காணப்படுகின்றன.

|

துவக்க நிலை பயனர்களைக் கருத்தில் கொண்டு, தனது சமீபகால பரஸ்பரம் மாற்றிக் கொள்ளக்கூடிய லென்ஸ் மிரர்லெஸ் கேமராவான இஓஎஸ் எம்50-யை கேனான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இது, 4கே வீடியோ பதிவை கொண்ட கேனானின் முதல் எம் சீரிஸ் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதத்தில் $780 (ஏறக்குறைய ரூ.50,600) என்ற விலை நிர்ணயத்தில் இந்த கேமரா விற்பனைக்கு வரும்.

24.1 மெகாபிக்சல் சென்சார் வசதியுடன் இஓஎஸ் எம்50 கேமரா அறிமுகம்.!

இது தவிர, அதனுடன் இஎஃப்-எம் 15-45எம்எம் எஃப்/3.5-6.3 ஐஎஸ் எஸ்டிஎம் லென்ஸ் கொண்டதாக $900 (ஏறக்குறைய ரூ.58,400) என்ற விலை நிர்ணயத்திலும், இஎஃப்-எம் 15-45எம்எம் எஃப்/3.5-6.3 ஐஎஸ் எஸ்டிஎம் மற்றும் இஎஃப்-எம் 55-200எம்எம் எஃப்/4.5-6.3 ஐஎஸ் எஸ்டிஎம் பெற்றதாக $1,249 (ஏறக்குறைய ரூ.81 ஆயிரம்) என்ற விலை நிர்ணயத்திலும் நீங்கள் பெற முடியும்.

இந்த இஓஎஸ் எம்50-ல் ஒரு 24.1-மெகாபிக்சல் ஏபிஎஸ்-சி சிஎம்ஓஎஸ் சென்சார் உடன் கேனானின் புதிய டிஜிக் 8 பட செயலி ஆகியவை காணப்படுகின்றன. இதில் 4கே பகுப்பாய்வில் அமைந்த படப்பிடிப்பை நடத்த முடியும் என்பதை தவிர, 120எஃப்பிஎஸ் என்ற ஹெச்டி உயர்தர ப்ரேம் விகிதத்தில் அமைந்த வீடியோவை இந்த கேமராவில் படம் பிடிக்க முடிகிறது.

24.1 மெகாபிக்சல் சென்சார் வசதியுடன் இஓஎஸ் எம்50 கேமரா அறிமுகம்.!

இந்த கேமராவில் ஒரு உள்கட்டமைப்பு ஓஎல்இடி எலக்ட்ரானிக் வியூஃபைன்டர் (இவிஎஃப்) உடன் தொடுதல் மற்றும் இழுத்தல் ஆட்டோஃபோக்கஸ் அமைப்பு காணப்படுகிறது. மேலும் இதில் ஒரு முழுமையான புகுத்துவதற்கான தொடுதிரை எல்சிடி டிஸ்ப்ளே, இரட்டை பிக்சல் ஆட்டோஃபோக்கஸ் அமைப்பு மற்றும் ஒரு புதிய சைலண்ட் மோடு ஆகியவை காணப்படுகின்றன. இந்த கேனான் இஓஎஸ் எம்50-ல் வைஃபை, என்எஃப்சி மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு தேர்வுகளும் இருப்பதால், இதை ஒரு ஸ்மார்ட்போனுடன் இணைத்து, ரிமோட் படப்பிடிப்பு நடத்துதல் மற்றும் படங்களைப் பகிர்தல் ஆகியவற்றை செய்ய முடியும்.

24.1 மெகாபிக்சல் சென்சார் வசதியுடன் இஓஎஸ் எம்50 கேமரா அறிமுகம்.!

மேலும் இஓஎஸ் ரிபேல் டி7 (இஓஎஸ் 2000டி) என்ற துவக்க நிலை டிஎஸ்எல்ஆர் கேமராவை, கேனான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏபிஎஸ்-சி சென்சார், ஆப்டிக்கல் வியூஃபைன்டர் மற்றும் உள்கட்டமைப்பு கொண்ட வயர்லெஸ் இணைப்பு தேர்வுகள் ஆகியவை உள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அமெரிக்காவில் கிடைக்கப் பெறும் இந்த கேமரா, இஎஃப்-எஸ் 18-55எம்எம் எஃப்3.5-5.6 ஐஎஸ் II லென்ஸ் கொண்ட நிலையில் $550 (ஏறக்குறைய ரூ.35,700) என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கப் பெறும்.

24.1 மெகாபிக்சல் சென்சார் வசதியுடன் இஓஎஸ் எம்50 கேமரா அறிமுகம்.!
How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

இது குறித்து கேனான் யூஎஸ்ஏ தலைவர் மற்றும் சிஓஓ-வான யுட்சி இஷிசுகா கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதிய துவக்க நிலை பரஸ்பரம் மாற்றக்கூடிய லென்ஸ் கேமராக்களை உருவாக்கியதன் முக்கிய இலக்கு என்னவென்றால், உயர்தர அம்சங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கே அளிக்க வேண்டும் என்பதாகும். எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளில் இருந்து, இஓஎஸ் எம்50 மற்றும் இஓஎஸ் ரிபேல் டி7 ஆகியவை மூலம் மேற்கூறிய இலக்கை நாங்கள் அடைந்துவிட்டோம் என்று நம்புகிறோம். எல்லா நிலையிலும் உள்ள போட்டோகிராஃபர்களின் திறன்களுக்கும் ஏற்ப மேம்பட்ட அம்சங்களை அளித்து, மேற்கூறிய இரண்டு கேமராக்களின் மூலம் இருப்பதில் சிறந்த தரத்தில் அமைந்த இமேஜிங் தீர்வுகளைத் தயாரிப்பது மற்றும் மேம்படுத்துவதில் உள்ள தனது அர்ப்பணிப்பை கேனான் நிறுவனம் நிரூபித்துள்ளது" என்றார்.

Best Mobiles in India

English summary
Canon EOS M50 Entry-Level Mirrorless Camera Launched With 24.1-Megapixel Sensor ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X