கெனான் களமிறக்கும் முதல் மிரர்லெஸ் கேமரா!

Posted By: Karthikeyan
கெனான் களமிறக்கும் முதல் மிரர்லெஸ் கேமரா!

கெனான் நிறுவனம் ஒரு புதிய மிரர்லெஸ் கேமராவைக் களமிறக்க இருக்கிறது. இதுவரை கெனான் மிரர்லெஸ் கேமராவைக் களமிறக்கியதில்லை. அதனால் இந்த புதிய கெனான் மிரர்லெஸ் கேமராவிற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த கெனானின் புதிய மிரர்லெஸ் கேமராவிற்கு இஒஎஸ்எம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவின் படங்களையும் இணைய தளங்கள் கசியவிட்டிருக்கின்றன.

இணைய தளங்களில் இருக்கும் இந்த கேமராவின் படங்கள் மிக அட்டகாசமாக இருக்கின்றன. இந்த கேமரா பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக எபிஎஸ்-சி சிஎம்ஒஸ் சென்சார், 18எம்பி ரிசலூடன் மற்றும் டிஜிக் 5 ப்ராசஸர் ஆகிவற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் இது எடுக்கு படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் துல்லியமாகவும் இருக்கும்.

இந்த கேமராவின் வேகமும் மிக அபாரமாக இருக்கும். இந்த கேமரா டச் போக்கசிங் மற்றும் கான்ட்ராஸ்ட் மற்றும் எஎப் வசதியுடன் வருகிறது. இதன் பின்பக்கம் இருக்கும் 3 இன்ச் தொடுதிரை மிகத் துல்லியமாக இருக்கிறது. மேலும் இந்த கேமரா பில்டர்ஸ், எச்டிஆர் மற்றும் நைட் மோட் போன்ற நவீன் வீடியோ எடுக்கும் மோடுகளைக் கொண்டு வருகிறது.

இந்த கேமராவை மிக எளிதாக இயக்குவதற்கு ஏற்ப இதன் பட்டன்களும் வரிசையாக உள்ளன. இந்த கேமரா சோனியன் நெக்ஸ் மாடல் கேமராக்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்