ஆற்றல் வாய்ந்த புதிய கெனான் கேமரா!

Posted By: Karthikeyan
 ஆற்றல் வாய்ந்த புதிய கெனான் கேமரா!

கெனான் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கேமராவிற்கு இஒஎஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 18 எம்பியுடன் வரும் இந்த கேமரா சிஎம்ஒஎஸ் சென்சார் கொண்டிருப்பதால் இது எடுக்கும் போட்டோக்கள் மிகத் துல்லியமாக தெளிவாக இருக்கும். இந்த கேமரா கெனானில் இஒஎஸ் 600டி கேமராவிற்கு அடுத்தபடியாக வருகிறது.

இந்த கேமராவில் டிஜிக் 5 இமேஜிங் ப்ராசஸர் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட ஒரு டிஸ்ப்ளே ஆகியவை இதன் சிறப்பு அம்சமாக விளங்குகின்றன.

3.0 இன்ச் கொண்ட இதன் எல்சிடி தொடுதிரை மிகத் துல்லியமாக இருக்கும். கெனானில் இஎப் லென்ஸ் இந்த டிஸ்ப்ளேயில் தெளிவான படங்களைக் காட்டும். மேலு்ம இந்த கேமரா தூரமான இடத்தில் இருப்பவற்றையும் மிகத் தெளிவாக போட்டோ எடுக்கும்.

இந்த புதிய கேமரா அபாரமான வேகத்தில் இயங்கக்கூடியது. இந்த கேமராவில் ஸ்டீரியோ மைக் உள்ளதால் இதன் ஆடியோவும் பக்காவாக இருக்கும். அதோடு இதில் இருக்கும் எச்டிஎம்ஐ மினி அவுட் மூலம் இந்த கேமராவை மிக எளிதாக டிவியோடும் இணைக்க முடியும்.

இந்த இஒஎஸ் கேமரா வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை ரூ.70,000 ஆகும். லென்ஸ் இல்லாமல் இந்த கேமரா ரூ.60,000க்கு விற்கப்படும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot