Home
Camera

கெனான் வழங்கும் அட்டகாசமான 2 புதிய கேமராக்கள்!

By Karthikeyan
கெனான் வழங்கும் அட்டகாசமான 2 புதிய கேமராக்கள்!

கெனான் சமீபத்தில் இரண்டு புதிய கேமராக்களை களமிறக்கி இருக்கிறது. இந்த கேமராக்களுக்கு கெனான் இஒஎஸ் 1டி டிஎஸ்எல்ஆர் மற்றும் கெனான் இஒஎஸ் சி500 என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேமராக்களுக்கும் 4கே ரிசலூசன் மானிட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேமராக்களும் மிக சூப்பரான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

கெனான் இஒஎஸ் 1டி சி டிஎஸ்எல்ஆர் கேமரா 18 எம்பி முழு ப்ரேம் சென்சார், எச்டி பதிவு, எச்டிஎம்ஐ போர்ட், டூவல் சிஎப் ஸ்லாட்டுகள் மற்றும் 25600 ஐஎஸ்ஒ சென்சிட்டிவிட்டி ஆகிய வசதிகளை வழங்குகின்றன.

இந்த கேமரா மிகத் தெளிவாக படம் எடுக்கும் வகையில் உயர்தரமாக வருகிறது. மேலும் இது உறுதிவாய்ந்த கேமரா ஆகும். நல்ல அஸ்பக்ஸ் ரேசியோ உள்ளதால் இதன் செயல்திறனும் பக்காவாக இருக்கும்.

அடுத்ததாக கெனான் சினிமா இஒஎஸ் சி500 கேமரா இஎப் மற்றும் பிஎல் மவுண்டுகள், 2கே பூட்டேஜ், 2,048 x 1,080 பிக்சல் ரிசலூசன் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளை வழங்குகிறது.

இந்த புதிய கேமரா மிகத் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும். குறிப்பாக டிஜிட்டல் தயாரிப்புத் துறையில் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம். மேலும் திரைப்படம் எடுக்கவும் இந்த கேமராவைப் பயன்படுத்த முடியும்.

இந்த இரண்டு கேமராக்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் திரைப்படத் துறையில் இந்த கேமராக்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X