புதிய கெனான் கேமரா... துல்லியம்னா அப்படியொரு துல்லியம்!

Posted By: Karthikeyan
புதிய கெனான் கேமரா... துல்லியம்னா அப்படியொரு துல்லியம்!

குறிப்பாக இந்த எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியும் உள்ளதால் இந்த கேமரா விடுமுறை கால பயணத்தின் போது உற்ற தோழனாக இருக்கும் என்பது நிச்சயம். இந்த கேமரா 4 வண்ணங்களில் வருகிறது. இது ஒரு கெனானின் மிக மெல்லிய 20எக்ஸ் சூம் கேமரா ஆகும். மேலும் இது ஆடம்பரமாகத் தோன்றும்.

இதில் நவீன டிஜிக் 5 பவர்டு எச்எஸ் சிஸ்டம் மற்றும் ஐஎஸ் தொழில் நுட்பம் உள்ளதால் இந்த கேமரா எடுக்கும் படங்கள் மிகத் துல்லியமாக இருக்கும். இந்த பவர் ஷாட் கேமராவில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளதால் பயணத்தின் போது செல்ல வேண்டிய இடங்களை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த கேமரா 20எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் 25 மிமீ அகல ஆங்கிள் வசதியுடன் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் லென்ஸ் 4 ஸ்டாப் இமேஜ் ஸ்டெபிலைசரைக் கொண்டுள்ளது. இதன் உயர் ரிசலூசன் கொண்ட சென்சார் டிஜிட்டல் சூமை வழங்கும்.

இந்த பவர் ஷாட் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது 12.1 மெகா பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதன் சென்சார் சிஎம்ஒஎஸ் ஆகும். இந்த கேமரா 20 மடங்கு அதிகமான சூமைக் கொண்டிருக்கிறது. இது 25 முதல் 500 மிமீ நீளம் அளவிற்கு போக்கஸ் செய்யும் திறன் கொண்டது.

இந்த பவர்ஷாட் கேமராவில் உள்ள அட்டோ போக்கசில் பேஸ் டிடெக்சன், கான்ட்ராஸ்ட் சென்சார் மற்றும் மேனுவல் போக்கஸ் போன்ற வசதிகளும் உண்டு. அதுபோல் இதன் மேக்ரோ போக்கஸ் ரேஞ்ச் 5 செமீ (1.97) வரை இருக்கும். இதன் ப்ளாஷ் மோட் ஆட்டோ ஆன், ஆப், ரெட் ஐ, ஸ்லோ சின்க் போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த கேமரா எப்3.5 முதல் எப்6.8 வரை அபர்சரைக் கொண்டிருக்கிறது.

இந்த கேமராவின் ஷட்டரின் குறைந்த வேகம் 15 செகண்டுகளாகும். அதே நேரத்தில் அதன் அதிக வேகம் 1/3200 செகண்டுகளாகும். இதில் பில்ட் இன் ப்ளாஷும் உள்ளது. மேலும் இந்த கேமரா ஆட்டோ, க்ளவ்டி மற்றும் டேலைட் போன்ற அத்தனை வசதிகள் கொண்டும் வருகின்றன. இந்த கேமராவின் விலை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot