கெனான் வழங்கும் ஒரு புதிய ஆடம்பர கேமரா!

தனது முதல் இஒஎஸ் எல்ஆர் கேமரா வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கெனான் வெள்ளி விழாவாக கொண்டாட இருக்கிறது. இந்த வெள்ளிவிழாவை சிறப்பிக்கும் வகையில் ஒரு புதிய டிஎஸ்எல்ஆர் வரிசை கேமராவையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கேமராவின் பெயர் இஒஎஸ் 5டி மார்க் III ஆகும். இது மார்க் II கேமராவின் அப்க்ரேட் மட்டும் அல்ல. மாறகா புதிதாக அறிவிக்கப்பட இருக்கும் இஒஎஸ்-ஐடிஎக்ஸ் கேமராவின் இணையாகவும் இந்த புதிய கேமரா வரவிருக்கிறது.
இநத புதிய இஒஎஸ் 5டி மார்க் III கேமரா பல நல்ல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது இது 3.2 இன்ச் அளவில் ஒரு எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் டூவல் மெமரி கொண்ட எஸ்டி மற்றும் ஒரு கம்பாக்ட்டான ப்ளாஷையும் கொண்டிருக்கிறது. இந்த கேமராவின் ப்ராசஸரைப் பார்த்தால் அது 14 பிட் டிஜிக் 5+ ஆகும்.
அடுத்ததாக இந்த கேமரா ஆட்டோ போக்கஸ் கொண்ட 22.3 எம்பி முழு ப்ரேம் சிஎம்ஒஎஸ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 61 பாயின்ட் ரெட்டிகுளர் ஆட்டோ போக்கசும் உண்டு. இதன் ஐஎஸ்ஒ ரேஞ் 50 முதல் 102400 வரை ஆகும். இதன் வேகம் வினாடிக்கும் 6 ப்ரேம்களாகும். இதன் 1080பி எச்264 வீடியோ பதிவு 24/25/20 எப்பிஎஸ் ஆகும். அதுபோல் இதன் 702பி வீடியோ பதிவு @ 50/60 எப்பிஎஸ் ஆகும்.
இந்த புதிய கேமராவின் மற்ற அம்சங்களைப் பார்த்தால் இது ஆடியோ ஹெட்போன் ஜாக்கைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த கேமராவை குளிர், தூசி மற்றும் தண்ணீர் போன்ற இயற்கை கூறுகள் மிக எளிதாக தாக்க முடியாது. அந்த அளவிற்கு தரமான பாதுகாப்பு வசதிகளை இந்த கேமரா கொண்டிருக்கிறது. மேலும் இதில் மிக சிறப்பாக படம் பிடிக்க முடியும். அதோடு இந்த கேமரா 5 டன் மேப்புகள் வரை எச்டிஆர் எபக்டை வழங்குகிறது.
மேலும் இந்த கேமராவில் குறைக்கப்பட்ட லென்ஸ் க்ரோமேட்டிக் அபரேசன், உயர் ஐஎஸ்ஒ சென்சிட்டிவிட்டி, வெளிப்புற இரைச்சல் தடுப்பு போன்ற வசதிகளும் உண்டு. அதோடு இந்த கேமரா பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. மேலும் அமைதியான சூட்டிங் மோட் மற்றும் தொடர் சூட்டிங் மோடும் இந்த கேமராவில் உண்டு. இதன் எஸ்டி மற்றும் சிஎப் மெமரிகளுக்கு இடையில் ஆட்டோ சுவிட்சிங்கும் உள்ளது.
இந்த கேனன் கேமராவின் விலை ரூ.175000 ஆகும். இதன் விலை அதிகமாக இருப்பதால் இது ஒரு ஆடம்பர கேமராவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications