நவீன தொழில் நுட்பங்களுடன் தோஷிபாவின் புதிய கேமரா!

Posted By: Karthikeyan
 நவீன தொழில் நுட்பங்களுடன் தோஷிபாவின் புதிய கேமரா!

சமீபத்தில் தோஷிபா தனது புதிய கமிலியோ ஏர்10 முழு எச்டி 1080பி வைபை கம்கார்டரை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் உள்ள புதிய கம் மூலம் இதை வயர்லஸ் தொழில் நுட்பத்தில் வைபையோடு இணைக்க முடியும். அதன் மூலம் போட்டோக்களை நேரடியாக கணினி மற்றும் வெப் போன்றவற்றிற்கு அனுப்ப முடியும்.

மேலும் இதில் இருக்கும் முழு எச்டி வைபை கம்கார்டர் மூலம் படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை சூப்பராக பார்க்க முடியும். இந்த கேமரா மேலும் பல சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளன.

அதாவது இந்த கேமரா 128 எம்பி மெமரி, 1ஜிபி ஹார்ட் ட்ரைவ், 2 எல்சிடி மானிட்டர், 2.4 ஜிஹெர்ட்ஸ் இன்டல் பென்டியம் ப்ராசஸர், வைபை, சூப்பரான ஆப்டிக்கல் ட்ரைவ், 512 எம்பி ரேம், 5 எம்பி பிஎஸ்ஐ சிஎம்ஒஎஸ் சென்சார், 5 எக்ஸ் டிஜிட்டல் சூம், ஆட்டோ எக்ஸ்போசர் கண்ட்ரோல், 64 ஜிபி விரை விரிவுபடுத்தக்கூடிய மெமரி, யுஎஸ்பி போர்ட், மினி எச்டிஎம்ஐ, எஸ்டி கார்டுகள் மற்றும் விண்டோஸ் 7, விஸ்டா போன்றவற்றை சப்போர்ட் செய்யும் வசதி என இந்த கேமராவில் ஏராளமான வசதிகள் உள்ளன.

இந்த கேமராவில் பல்வகையான் சூட்டிங் மோடுகள் உள்ளன. அதனால் பலவகையான மோடுகளில் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இந்த கேமராவின் விலை ரூ.11000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot