வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. பட்ஜெட் விலை செக்யூரிட்டி கேமராக்கள்.. AI அம்சம்.. 2K ரெசல்யூஷன்.. இதோ லிஸ்ட்..
வீடுகளில் செக்யூரிட்டி கேமராக்கள் இருப்பதால் தான் திருட்டு பயம் குறைந்துள்ளது. அதேபோல் இப்போது வரும் அதிநவீன கேமராக்கள் மூலம் உயர் தெளிவுத் திறனுடன் வீடியோக்களை நம்மால் பதிவு செய்ய முடியும். மேலும் சில செக்யூரிட்டி கேமராக்கள் மூலம் நீங்கள் துல்லியமான ஆடியோ ஆதரவையும் பெற முடியும்.
குறிப்பாக இந்தியாவில் பல முன்னணி நிறுவனம் தொடர்ந்து செக்யூரிட்டி கேமராக்களை அறிமுகம் செய்கின்றன. அதில் சியோமி நிறுவனத்தின் கேமராக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் கம்மி விலையில் வாங்கச் சிறந்த சியோமி செக்யூரிட்டி சியோமி கேமராக்களை பார்க்கலாம்.

சியோமி எம்ஐ 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே (Xiaomi Mi 360° Home Security Camera 2K): இந்த கேமரா ஏ.ஐ (AI) தொழில்நுட்ப வசதியுடன் மனிதர்களைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளது. 360 டிகிரி பானரோமா வியூ மூலம் அறையின் ஒவ்வொரு மூலைகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யும் வசதி சியோமி எம்ஐ 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே மாடல்.
256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்டோரேஜ்-ஐ ஆதரிக்கிறது இந்த கேமரா. மேலும் குறிப்பாக 2கே ரெசல்யூஷன் மற்றும் 2,304 x 1,296 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்தது சியோமி எம்ஐ 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே மாடல். சியோமி ஹோம் ஆப் மூலம் இந்த கேமராவைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அமேசானில் சியோமி எம்ஐ 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே மாடல் ஆனது ரூ.2999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யபட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கேமராவை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த கேமராவை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே ப்ரோ(Xiaomi 360 Home Security Wireless Camera 2K Pro): 1296 பிக்சல்ஸ் மற்றும் 2கே ரெசல்யூஷன் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேமரா. அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் மனிதர்களைக் கண்டறியும் திறன், புளூடூத் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே ப்ரோ மாடல்.
அதேபோல் டூயல் மைக்ரோபோன் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே ப்ரோ மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக .சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே ப்ரோ மாடலை ரூ.4,447 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கேமராவை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது.
சியோமி எம்ஐ வயர்லெஸ் ஹோம் செக்யூரிட்டி கேமரா 2ஐ (Xiaomi MI Wireless Home Security Camera 2i): இது முழு 360° வியூவில் நேராகவும் 108° செங்குத்தாகவும் திரும்பக் கூடியது. இந்த புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா யுஐ ஹியூமன் ரெகக்னிஷன் அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக 1080 பிக்சல்ஸ் ஆதரவுடன் இந்த சியோமி எம்ஐ வயர்லெஸ் ஹோம் செக்யூரிட்டி கேமரா 2ஐ கேமரா வெளிவந்துள்ளது.
IR LED உடன் கூடிய நைட் மோட் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தையும் வழங்குகிறது சியோமி எம்ஐ வயர்லெஸ் ஹோம் செக்யூரிட்டி கேமரா 2ஐ. பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இதில் உள்ளது. 64ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த முடியும். அமேசான் தளத்தில் இந்த சியோமி எம்ஐ வயர்லெஸ் ஹோம் செக்யூரிட்டி கேமரா 2ஐ மாடலை ரூ.2,299 விலையில் வாங்கலாம்.

சியோமி எம்ஐ 360 ஹோம் செக்யூரிட்டி வயர்லெஸ் கேமரா 2கே ப்ரோ (Xiaomi Mi 360 Home Security Wireless Camera 2K Pro): புளூடூத் கேட்வே BLE 4.2 மற்றும் டூயல் பேண்ட் வைஃபை கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் 1296 பிக்சல்ஸ் மற்றும் 2கே ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான வயர்லெஸ் கேமரா.
ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் மனிதர்களைக் கண்டறியும் திறன், டூயல் மைக்ரோபோன் நாய்ஸ் ரிடக்ஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேமரா. அமேசானில் சியோமி எம்ஐ 360 ஹோம் செக்யூரிட்டி வயர்லெஸ் கேமரா 2கே ப்ரோ மாடலின் விலை ரூ.8,998-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கேமராக்களை வாங்கினால் ரூ.890 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








