வீட்டுக்கு 1 வாங்கலாம்.. கம்மி பட்ஜெட்ல 360 டிகிரி வியூ, 256ஜிபி மெமரி, நைட் விஷன்.. சிறந்த CCTV கேமராக்கள்..
அலுவலகங்கள், வங்கி, போக்குவரத்து நிறைந்த இடங்கள் மற்றம் மக்கள் அதிக கூடும் இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சிசிடிவி கேமராக்கள் (CCTV Cameras) தற்போது அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எங்கு பார்த்தாலும் வீட்டின் முன் ஒரு கேமரா தொங்கி கொண்டிருக்கிறது. அதுவும் வீட்டில் யாராவது ஒருவர் இருந்து பார்த்துக் கொள்ளும் நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த சிசிடிவி கேமராக்கள்.
குறிப்பாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களையும் இந்த சிசிடிவி மூலம எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். அதேபோல் இப்போது வரும் சிசிடிவி கேமராக்களில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள், நைட் விஷன், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இதுபோன்ற கேமரக்களை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் சிறந்த சிசிடிவி கேமராக்களை இங்கே பார்க்கலாம்.

1.சிபி பிளஸ் சிபி-இ28ஏ ஃபுல் எச்டி வைஃபை பிடி கேமரா (CP PLUS CP-E28A Full HD Wi-Fi PT Camera) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1789 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிபப்பாக இந்த கேமரா 360 டிகிரி வியூ (360 degree View), 2-வே டாக் (2-Way Talk), நைட் விஷன் (Night Vision)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
அதேபோல 256ஜிபி வரை எஸ்டி கார்டு ஆதரவை வழங்குகிறது இந்த சிபி பிளஸ் சிபி-இ28ஏ ஃபுல் எச்டி வைஃபை பிடி கேமரா. மேலும் பிரைவசி மோட், மோஷன் டிடெக்ஷன், வைஃபை, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன், 1080P ரெசொலூஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த அசத்தலான சிசிடிவி கேமரா வெளிவந்தது.
2. டிடிஎல்சி டூயல் லென்ஸ் வைஃபை ஐபி 360 டிகிரி கேமரா (DDLC Dual Lens WiFi IP 360° Camera) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1703 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 2-வே ஆடியோ, 4எம்பி டூயல் லென்ஸ் ஜூம், இன்பிராரெட் லைட் (infrared light), ஐஆர் கலர் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.

3.Qubo ஸ்மார்ட் கேம் 360 கியூ100 (Qubo Smart Cam 360 Q100) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1690 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இதில் வைஃபை கனெக்டிவிட்டி, 3எம்பி கேமரா, 2 வே டாக், நைட் விஷன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் இந்த சிசிடிவி கேமராவில் உள்ள ஏஐ அம்சம் அசாதாரண சூழ்நிலைகளைப் புத்திசாலித்தனமாகக் கண்டறிந்து, நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே இருக்கும்போது கூட உங்களுக்கு எச்சரிக்கைகளை வழங்குகிறது.
கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் எஸ்டி கார்டு ஆதரவை வழங்குகிறது இந்த கிளவுட் ஸ்டோரேஜ் Qubo ஸ்மார்ட் கேம் 360 கியூ100 (Qubo Smart Cam 360 Q100) மாடல். இதுதவிர ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோல், 360 டிகிரி வியூ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த அசத்தலான சிசிடிவி கேமரா வெளிவந்தது.
4.பிலிப்ஸ் எச்டிஎஸ்பி 3800 சிசிடிவி அவுட்டோர் செக்யூரிட்டி கேமரா (PHILIPS HSP 3800 CCTV Outdoor Security Camera) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கேமராவை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக இது ஒரு வாட்டர் ப்ரூஃப் வைஃபை சிசிடிவி கேமரா ஆகும்.

மேலும் கலர் நைட் விஷன், 2-வே டாக்,360 டிகிரி பான்-டில்ட் ஆதரவு, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன், ரியல்டைம் அலெர்ட்ஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த பிலிப்ஸ் எச்டிஎஸ்பி 3800 சிசிடிவி அவுட்டோர் செக்யூரிட்டி கேமரா. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்கள் இந்த கேமராவில் இருப்பதால் நம்பி வாங்கலாம்.
5. சியோமி எம்ஐ 3எம்பி ஸ்மார்ட் ஹோம் செக்யூரிட்டி கேமரா (Mi 3MP Smart Home Security Camera) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த செக்யூரிட்டி கேமரா யுஐ ஹியூமன் ரெகக்னிஷன் அம்சத்துடன் வருகிறது. 2 வே ஆடியோ, 360 டிகிரி வியூ, 360 டிகிரி பான்-டில்ட் ஆதரவு, 2கே வீடியோ சப்போர்ட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி கேமரா வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








