ஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது?

ஏர்டெல் நிறுவனம் போலவே வோடோபோன் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளீக்க இந்த ரூ.509 திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வந்த பின்னர் தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரிய விலைகுறைப்பு போர் நடந்து வருவது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் வருகையால் அதுவரை அதிக கட்டணங்களை பெற்று வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலைகுறைப்பு மற்றும் அதிக சர்வீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.

ஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது?

குறிப்பாக ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேறு வழியின்றி ஒவ்வொரு வாரமும் புதுப்புது திட்டங்களை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. தினசரி மற்றும் வார அளவில் இருந்த பேக்கேஜ்கள், இந்த போரின் காரணமாக அதிகபட்ச நாட்களுக்கு தள்ளப்பட்டது.

பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள்

பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் தற்போது 90 முதல் 91 நாட்களுக்கு வேலிடிட்டி தரும் அளவில் தங்களுடைய பேக்கேஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனவே பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள் அதிக நாட்கள் கொண்ட பேக்கேஜ்களை பெற விரும்பினால் அவர்களுக்கு இந்த கட்டுரை உதவியாக இருக்கும். இந்த கட்டுரையில் அதிக அளவு வேலிடிட்டியுடன் டேட்டா மற்றும் அதிகபட்ச அழைப்புகள் சலுகை குறித்த பேக்கேஜ்களை தற்போது பார்ப்போம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509 திட்டம்

ஏர்டெல் நிறுவனம் இந்த ரூ.509 திட்டத்தில் 1.4ஜிபி டேட்டாவை தருவது மட்டுமின்றி தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசமாக அனுப்பவும் அனுமதிக்கின்றது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் லோக்கல் கால் அழைப்புகளையும் அழைத்து கொள்ளலாம். அதேபோல் அன்லிமிடெட் எஸ்.டி.டி. கால் அழைப்புகள் வசதியும் உண்டு. மேலும் இந்த திட்டத்தில் 90 வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.449 திட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 திட்டம்:

ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே 91 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.449 திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக வழங்கிக் வருகிறது. இந்த திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் தினமும் 100 எஸ்.எம்.எஸ்களை இலவசமாக அழைத்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி தினமும் 1.5ஜிபி டேட்டாவும் அவர்களுக்கு உண்டு. டேட்டா, எஸ்.எம்.எஸ் வசதிகள் மட்டுமின்றி அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வசதியும் இந்த திட்டத்தில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

வோடோபோன் நிறுவனத்தின் ரூ.509 திட்டம்

வோடோபோன் நிறுவனத்தின் ரூ.509 திட்டம்

ஏர்டெல் நிறுவனம் போலவே வோடோபோன் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளீக்க இந்த ரூ.509 திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி இந்த திட்டத்தில் தினமும் 1.4ஜிபி டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் வசதி உண்டு. அதேபோல் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் லோக்கல், எஸ்.டிடி அழைப்புகள் அன்லிமிடெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best plans from Reliance Jio Vodafone and Airtel with 90 days validity: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X