குறைந்த விலையில் கிடைக்கும் சிசிடிவி கேமராக்கள்.. கலர் நைட் விஷன்.. ஐபி66 ரேட்டிங்.. இதோ பட்டியல்..
நாட்டில் வங்கி, அலுவலகங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சிசிடிவி செக்யூரிட்டி கேமராக்கள் இப்போது அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எங்குப் பார்த்தாலும் வீட்டின் முன் ஒரு கேமரா தொங்கி கொண்டிருக்கிறது. அதுவும் வீட்டில் யாராவது ஒருவர் இருந்து பார்த்துக் கொள்ளும் நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த சிசிடிவி கேமராக்கள்.
குறிப்பாக செக்யூரிட்டி கேமரா மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த சிசிடிவி கேமராக்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.சிபி பிளஸ் 3எம்பி ஸ்மார்ட் வைஃபை சிசிடிவி கேமரா (CP PLUS 3MP Smart Wi-Fi CCTV Camera) மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் ரூ.2,199 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த கேமரா நைட் விஷன், 2-வே டாக், 360 டிகிரி பான்-டில்ட் ஆதரவு, ஒகே கூகுள் சப்போர்ட், கிளவுட் ஸ்டேரேஜ், 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
2. ட்ரூவியூ 5எம்பி ஸ்மார்ட் சிசிடிவி கேமரா (Trueview 5 Mp Smart CCTV Camera) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1799 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த கேமராவில் வைஃபை ஆதரவு, பான்-டில்ட் வசதி, ஐஆர் நைட் விஷன் சப்போர்ட், ஹியூமன் ரெகக்னிஷன், 2-வே ஆடியோ, 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த கேமரா மாடலில் உள்ளன.
3.டிடிஎல்சி டூயல் லென்ஸ் மினி பிடிஇசட் வைஃபை செக்யூரிட்டி கேமரா (DDLC Dual Lens Mini PTZ WiFi Security Camera) மாடல் அமேசானில் ரூ.1699 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த கேமரா 1080 பிக்சல் ஃபுல் எச்டி வீடியோ சப்போர்ட், 2-வே டாக், நைட் விஷன், 4எம்பி கேமரா, டிஜிட்டல் ஜூம், ஏஐ ஹியூமன் ரெகக்னிஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.
4.மைஜிக் ஸ்மார்ட்ஹோம் டிரைகாம் ஷார்க் (Maizic Smarthome Tricam Shark) மாடல் ஆனது 3 வியூ மற்றும் 5 +5எம்பி எச்டி கேமரா உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் 4ஜி சிம் சப்போர்ட் உள்ளது. மோஷன் டிடெக்ஷன் (motion detection), ஐபி66 ரேட்டிங், கலர் நைட் விஷன் போன்ற பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. தற்போது இந்த கேமரா பிளிப்கார்ட்டில் ரூ.2937 விலையில் வாங்க கிடைக்கிறது.
5.டிபி பிளஸ் 4+4எம்பி ஸ்மார்ட் பிடிஇசட் சிசிடிவி கேமரா ((TP PLUS 4+4MP WiFi Smart PTZ CCTV Camera) மாடல் ரூ.1889 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த கேமரா 360 டிகிரி வியூ, மோஷன் டிடெக்ஷன் (motion detection), கலர் நைட் விஷன், 2-வே ஆடியோ, டூயல் லென்ஸ், 128ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட், கிளவுட் ஸ்டோரேஜ், ஐபி66 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

6.CANRON ஸ்மார்ட் வைஃபை டூயல் லென்ஸ் சிசிடிவி கேமரா மாடல் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1635 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் கேமரா ஆனது 360 டிகிரி பான்-டில்ட் ஆதரவு, 2-வே ஆடியோ, ஃபுல் கலர் நைட் விஷன், 4ஜி கனெக்ஷன், ஹியூமன் ரெகக்னிஷன், டபுள் சைடு வியூ, பிலட்-இன் மைக்ரோபோன்கள், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிற்பபான வசதிகளுடன் இந்த சிசிடிவி கேமரா வெளிவந்துள்ளது.
7.Qubo ஸ்மார்ட் அவுட்டோர் 3எம்பி சிசிடிவி கேமரா மாடல் இப்போது அமேசான் தளத்தில் ரூ.3,490 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த கேமரா மாடல் ஐபி66 ரேட்டிங், கலர் நைட் பல்ஸ் விஷன், ஏஐ ஹியூமன் ரெகக்னிஷன், 1டிபி எஸ்டி கார்டு சப்போர்ட், 2-வே டாக் போன்ற மேம்பட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த கேமரா வெளிவந்தது.


Click it and Unblock the Notifications








