Home
Camera

கேமரா உலகில் புதுமையை ஏற்படுத்தும் பென்க்யுவின் புதிய கேமராக்கள்

By Karthikeyan
 கேமரா உலகில் புதுமையை ஏற்படுத்தும் பென்க்யுவின் புதிய கேமராக்கள்

சமீபத்தில் பென்க்யு நிறுவனம் தனது புதிய கேமராக்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த கேமராக்களுக்கு ஜிஎச்600 மற்றும் ஜிஎச்700 என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த கேமராக்கள் 21எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் 16எம்பி இமேஜ் சென்சார் ஆகிய வசதிகளுடன் வருகின்றன.

அதோடு இந்த கேமராக்களில் எண்ணற்ற தொழில் நுட்ப வசதிகளைக் காணலாம். குறிப்பாக இந்த கேமராக்களில் இருக்கும் 3 இன்ச் எல்சிடி திரையில் இது எடுக்கும் போட்டோக்கள் மிகத் துல்லியமாக இருக்கும்.

ஜிஎச்600 கேமரா எச்டி 720பி வீடியோக்களை மிக அருமையாக எடுக்கும் சக்தி கொண்டது. ஜிஎச்700 கேமரா உயர் தரம் கொண்ட ஆப்டிக்கல் சூம் லென்ஸ், பிஎஸ்ஐ சிஎம்ஒஎஸ் சான்சார் மற்றும் உயர் வேகம் கொண்ட டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸர் ஆகிய வசதிகளுடன் வருகிறது.

இந்த கேமராக்களில் இருக்கும் 1செமீ மோட் மிக நெருங்கிய தூரத்தில் இருப்பவற்றை மிகத் தெளிவாக போட்டோ எடுக்கும் திறன் கொண்டது. இந்த கேமராக்கள் கேமரா உலகில் ஒரு புதுமையைக் கொண்டு வரும் என்று பென்க்யு நிறுவனத்தின் இந்திய தலைவர் ராஜீவ் சிங் கூறுகிறார்.

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் ஜிஎச்600 கேமரா ரூ.10,999க்கும், வெள்ளை நிறத்தில் வரும் ஜிஎச்700 கேமரா ரூ.15,999க்கும் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X