பெண்ணின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் வீட்டை கொள்ளையிட்ட திருடர்கள்.!

சமூக இணையதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவை, நம் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு அனுபவங்களை உடனுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு தளங்களை அளிக்கின்றன.

|

பெங்களூரில் உள்ள ஆர்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது வெளியூர் பயணம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு சென்றார். வெளியூரில் இருந்து வீடு திரும்பிய போது, தனது வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெண்ணின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் வீட்டை கொள்ளையிட்ட திருடர்கள்.!

சமூக இணையதளங்களில் லைவ் அப்டேட்ஸ் பதிவிடுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் உங்களின் விடுமுறை கால பயணங்களைக் குறித்து பேஸ்புக்கில் லைவ் அப்டேட்களைப் பதிவிடும் முன், இந்தப் பதிவை யாரெல்லாம் பார்க்க முடியும் என்பதை குறித்து ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து விட்டு பதிவிடுவது நல்லது. ஏனெனில் பெங்களூரில் உள்ள ஆர்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது வெளியூர் பயணம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். வெளியூரில் இருந்து வீடு திரும்பிய போது, தனது வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெண்ணின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் வீட்டை கொள்ளையிட்ட திருடர்கள்.!

பெங்களூர் ஆர்டி நகர் பகுதியில் உள்ள தனது சகோதரன் லோஹித் என்பவர் வீட்டில் வசித்து வருபவர் பிரேமலதா. கடந்த வாரம் ஆர்டி நகர் போலீஸ் நிலையத்தில் இவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு குடும்பமாக சுற்றுலா சென்றதாகவும், அது குறித்து பேஸ்புக்கில் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திற்கு சென்று கொண்டிருப்பதாகப் பதிவிட்டுள்ளார். சுற்றுலாவை முடித்து கொண்டு, காலை 2 மணிக்கு வீடு திரும்பினர். இந்நிலையில், அந்த குடும்பத்தை அதிர்ச்சி அளிக்கும் வகையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் இங்கும் அங்குமாக சிதறி கிடந்தன.

இதையடுத்து, உள்ளே நுழைந்த குடும்பத்தினர், வீட்டிலுள்ள பொருட்களை பரிசோதித்து பார்த்ததில், தங்களின் ஒரு இரு சக்கர வாகனம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 57 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவித்து இருந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேஸ்புக்கில் தான் போட்ட ஸ்டேட்டஸை பார்த்த திருடர்கள், மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று பிரேமலதா சந்தேகப்படுவதாக தெரிகிறது. பக்கத்து வீட்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா செயல்படாமல் இருந்தது திருடர்களுக்கு கூடுதல் வசதியாகிவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேமலதாவின் சகோதரர் லோஹித், ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தில் ஒரு விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்" என்றார்.

பெண்ணின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் வீட்டை கொள்ளையிட்ட திருடர்கள்.!

ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள்
சமூக இணையதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவை, நம் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு அனுபவங்களை உடனுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு தளங்களை அளிக்கின்றன. அதே நேரத்தில் பதிவிடும் இந்தத் தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, சமூக இணையதளங்களில் தகவல்களை பதிவிடும் போது, சற்று கவனமாக செயல்பட்டால், உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
பெண்ணின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் வீட்டை கொள்ளையிட்ட திருடர்கள்.!

எந்த மாதிரியான தளங்களில், நமது தனிப்பட்ட தகவல்களைப் பகிரலாம் என்பதை நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, டிவிட்டர் என்பது எல்லாராலும் பொதுவாக பார்க்கப்படும் ஒரு தளமாக இருக்கிறது. ஆனால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அதிக தனிப்பட்ட தன்மை கொண்டதாக உள்ளது. அதே நேரத்தில், பேஸ்புக்கில் ஒரு பகிர்வை நாம் பகிரும் போது, அது பொதுவாக பகிராமல், நண்பர்களுக்கு மட்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். பேஸ்புக்கை பொறுத்த வரை, உங்கள் இடுகையை பார்க்கும் பார்வையாளர்களின் தன்மை, ஒவ்வொரு இடுகைக்கும் வேறுபட்டதாக உள்ளது என்பது குறிப்பிட்டதக்கது.

Best Mobiles in India

English summary
Bengaluru Womans travel update on Facebook invited burglars home: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X