பூமியை பாதுகாக்கப் போகும் ஆஸ்ட்ராய்டு பில்லியர்ட்ஸ் யோசனை.!

"இது போன்ற செயல்களை செய்யும் முன்பு சில காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது"

|

மிகவும் ஆபத்தான விண்வெளி கற்களில் இருந்து பூமியை பாதுகாக்க சிறிய அளவில் சிறுகோள் மீதான சிறுகோள்களின் வன்முறை அவசியமாகிறது.

நமது கோளின் பாதுகாப்பு அரணில் புதிய அம்பை இணைக்க ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர். சிறிய தீங்குவிளைவிக்காத பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களை(near-Earth asteroids), பில்லியர்ட்ஸ் விளையாட்டில் செய்வது போல, பெரிய மற்றும் ஆபத்தான விண்வெளி கற்களின் மீது திசைத்திருப்பி விடுவது தான் அந்த திட்டம்.இத்திட்டம் பைத்தியகாரத்தனமாக தோன்றினாலும், அவ்வாறு இல்லை என்கின்றனர் இத்திட்டத்தினை வடிவமைத்தவர்கள்.

பூமியை பாதுகாக்கப் போகும் ஆஸ்ட்ராய்டு பில்லியர்ட்ஸ் யோசனை.!

"இது போன்ற செயல்களை செய்யும் முன்பு சில காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என கடந்த மாதம் நடைபெற்ற நாசாவின் எதிர்கால விண்வெளி செயல்பாடுகள்(FISO) என்ற கருத்தரங்கில் கினெட்எக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை திட்ட வடிவமைப்பு பொறியாளர் டேவிட் டன்ஹம் தெரிவித்தார்.

 காஸ்மிக் சூட்டிங் கேலரி

காஸ்மிக் சூட்டிங் கேலரி

சூட்டிங் கேலரியில் சூரியனை சுற்றிவரும் பூமி,பல மில்லியன் சிறுகோள்களுடன் விண்வெளியை பகிர்ந்துள்ளது. இந்த விண்வெளி கற்கள் தொடர்ந்து நம் கிரகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. 2013 பிப்ரவரி 15 அன்று நடந்ததை இந்த உலகம் இன்னும் மறக்கவில்லை.

அன்று விண்கல் ஒன்று ரஷ்ய நகரமான செல்யாபின்ஸ்க் மீது வானில் வெடித்து, அதிசக்தி வாய்ந்த அதிர்வலை உருவாக்கியதன் விளைவாக, கீழே இருத்த கட்டிடங்களின் ஆயிரக்கணக்கான ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. 1500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்த நிலையில், அதில் பெரும்பாலானோர் உடைந்த கண்ணாடிகள் பறந்து வந்ததால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள்.


செல்யாபின்ஸ்க் மீது விழுந்த விண்கல்லானது வெறும்65 அடி அல்லது அதைவிட சற்றே அகலமானது என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அதைவிட மிகப்பெரிய மிகவும் ஆபத்தான விண்கற்கள் விண்வெளியின் ஆழமான இருட்டில் சுற்றி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் பார்த்ததும் அறிந்ததும் கூட இல்லை.

எடுத்துக்காட்டாக

எடுத்துக்காட்டாக

எடுத்துக்காட்டாக, இன்றுவரை குறைந்தபட்சம் 460அடிஅகலமுள்ள மூன்றில் ஒரு பங்கு விண்கற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது என்கின்றனர் நாசா அதிகாரிகள்.

அது போன்ற ஒரு மிகப்பெரிய விண்கல் அல்லது சிறுகோள் அடுத்த 100 ஆண்டுகளில் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு 1% உள்ளதாகவும், அந்த விபத்தில் நாம் அனைவரும் இறப்பதற்தான வாய்ப்பும் அதே அளவு இருப்பதாகவும் கூறுகிறார் டன்ஹம்.

ஆனால் அந்த விண்கற்கள் நம்மை தாக்கி அழிக்கும் வரை நாம் ஆற அமர்ந்து வேடிக்கை பார்க்க முடியாது அல்லவா. மாறாக, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் பொறியாளர்களும், பூமியை விண்கற்களிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த வழிமுறைகளில் மிகவும் பரபரப்பான ஒன்றுஅணுகுண்டு. 1998ல் வெளியான 'ஆர்மகெட்டன்' என்ற திரைப்படத்திற்கு பின் இம்முறை பிரபலமானது. ஆனால் நிஜத்தில் இந்த உத்தியை பயன்படுத்த ரோபோடிக் விண்கலத்தை சார்ந்திருக்க வேண்டும்.

ஆஸ்ட்ராய்டு பில்லியர்ட்ஸ்

ஆஸ்ட்ராய்டு பில்லியர்ட்ஸ்

மிகப்பெரிய விண்கற்களை கடைசி நேரத்தில் கண்டுபிடித்தால், அழிவை தடுக்க அணு ஆயுதங்கள் தவிர்த்து வேறு வழியில்லை என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆனால் நமக்கு தேவையான காலம் இருந்தால், அதாவது சில ஆண்டுகள் அல்லது தசாப்தங்கள் இருந்தால், 'கைனடிக் இம்பேக்டர்' என்ற முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விண்கலங்களை அந்த விண்கல்லின் மீது தாக்கிஅழிக்கலாம். 'கிராவிடி டிராக்டர்' என்ற முறையிலும், விண்கலத்தை அந்த விண்கல் மீது இடித்து தீங்கில்லாமல் பாதையை மாற்றலாம்.

ஆஸ்ட்ராய்டு பில்லியர்ட்ஸ் என்ற மற்றொரு முறையும் உள்ளது.

கல்லுக்கும் கல்லுக்கும் சண்டை!

கல்லுக்கும் கல்லுக்கும் சண்டை!

"கைனடிக் இம்பேக்டர்" முறையின் மேம்படுத்தப்பட்ட முறையான இதை, FISO மாநாட்டில் டன்ஹம் முன்மொழிந்தார்.

இம்முறையில் 33அடி அல்லது அதற்கு மேல் உள்ள விண்கல் மீது ரோபோடிக் விண்கலம் ஏவப்படும். அது அங்கு தரையிறங்கி, ஈர்ப்பு விசையை உறுதிசெய்ய ட்ரஸ்டர்களை செலுத்தும்.

இந்த விண்கலம் மற்றும் தீங்குவிளைவிக்காத விண்கல் இரண்டும் கூட்டு சேர்ந்து, தீங்குவிளைவிக்கக்கூடிய விண்கல்/பொருளை நோக்கி செலுத்தப்படும்.


இரண்டு மோதிக்கொள்ளும் போது, விண்கலன் மூலம் நடைபெறும் கைனடிக் இம்பேக்டர் முறையை விட அதிக சக்திவாய்ந்த மற்றும் திறன்மிகு பல

Best Mobiles in India

English summary
Asteroid Billiards This Wild Idea to Protect Earth Just Might Work: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X