அட்டகாசமான ஐபோன் 5 கேமரா

இரண்டு நாள்களுக்கு முன் ஆப்பிள் அறிமுகம் செய்து வைத்த ஐபோன் 5 எந்த அளவிற்கு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதோ அதே அளவிற்கு அந்த போனில் உள்ள கேமராவைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆப்பிள் ஐபோன் 5ஐ அறிமுகப்படுத்திய நிகழ்வில் அதன் கேமராவைப் பற்றிய முக்கிய கேமராக்களை ஆப்பிள் வழங்கியது.
ஆப்பிளின் முந்தைய தயாரிப்பான ஐபோன் 4எஸ்ஸில் உள்ள கேமரா சூப்பராக உள்ளது. எனவே ஐபோன் 5ல் உள்ள கேமரா அதைவிட சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது ஐபோன் 5வின் பின்பக்கம் உயர்தர ஐஆர் பில்டர், 5 எலிமன்ட்ஸ் லென்ஸ் மற்றும் எப்/2.4 அபர்சர் வசதிகள் கொண்ட 8எம்பி இல்லுமினேட்டட் சென்சார் கொண்ட கேமரா உள்ளது. அதனால் மங்கிய வெளிச்சத்திலும் இந்த கேமரா மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கேமராவில் ஒரு புதிய இமேஜ் சிக்னல் ப்ராசஸர் உள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் இந்த கேமரா பலமடங்கு வேகத்துடன் இயங்கும் என்று நம்பலாம்.
அதோடு ஐபோன் 5ல் பனோரோமா மோடும் உள்ளது. இந்த பனோரோமா மோடில் 28எம்பி கொண்ட போட்டோக்களை ஐபோன் 5 எடுக்க வல்லது. அதாவது இதன் தரம் பாயின்ட் சூட் கேமராக்கள் அளவிற்கு இருக்கும்.
இறுதியாக இந்த கேமராவில் உள்ள 1080பி வீடியோ ரிக்கார்டிங் வசதி சூப்பரான வீடியோ பதிவிற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications