தண்ணீருக்குள்ளும் துல்லியமாக படமெடுக்கும் புதிய கேமரா!

Posted By: Karthikeyan
தண்ணீருக்குள்ளும் துல்லியமாக படமெடுக்கும் புதிய கேமரா!

சிறந்த கேமராக்களை தயாரித்து வரும் பிஜிபில்ம் நிறுவனம் ஒரு புதிய கேமராவைக் களமிறக்க இருக்கிறது. தண்ணீரினால் பாதிப்படையாத இந்த கேமராவிற்கு பைன்பிக்ஸ் எப்பி170 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு வயர்லஸ் கேமராவாகும். மேலும் இது ஒரு அடுத்த தலைமுறைக்கான புதிய கேமராவாகும். குறிப்பாக இளையோரை வெகுவாக இந்த கேமரா கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 14 எம்பி கேமரா தண்ணீருக்குள் 33 ஆழத்திற்குள் விழுந்தாலும் பாதிப்பு அடையாது. அதோடு பெரிய அதிர்ச்சியைக்கூட தாங்கு சக்தி கொண்டது. அதுபோல் கொடுமையான குளிரிலும் இந்த கேமரா உறுதியாக நிற்கும். மேலும் இந்த கேமராவில் வீடியோ பதிவு செய்யும் வசதியும் உண்டு. மேலும் இதில் எடுக்கும் போட்டோக்களை மிக எளிதாக வயர்லஸ் மூலமாக பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்த பிஜிபில்ம் கேமரா மிகத் துல்லியமான போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும். தண்ணீருக்கு அடியிலும் இந்த கேமரா மிகத் துல்லியமான போட்டோக்களை எடுக்கும். வெளிப்புறங்களில் போட்டோ எடுப்பதற்கு இந்த கேமரா ஒரு சிறந்த கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இந்த கேமரா தூசு தடுப்பு வசதியும் கொண்டிருப்பதால் வெளிப்புறத்திலிருந்து வரும் எந்த தூசும் இந்த கேமராவை பாதிப்பதில்லை.

வயர்லஸ் வசதி கொண்டிருப்பதால் இந்த கேமராவில் எடுக்கப்பட்ட கேமராக்களை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகளுக்கு வயர்லஸ் மூலம் மிக எளிதாக அனுப்ப முடியும். மேலும் சோஷியில் நெட்வொர்க்குகளில் படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்வதற்கு இந்த கேமரா உதவியாக இருப்பதால் பேஸ்புக், பின்ட்ரெஸ்ட், இன்ஸ்டாக்ராம் மற்றும் டிவிட்டர் போன்ற சோஷியில் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த பிஜிபில்ம் கேமராவின் விலை ரூ.15000 ஆகும். இந்த கேமரா ஊதா மற்றும் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்