Home
Camera

நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பானசோனிக் கேமரா!

By Karthikeyan
நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பானசோனிக் கேமரா!

எலக்ட்ரானிக் தொழில் நுட்பத் துறையில் முன்னனியில் இருக்கும் பனோசோனிக் நிறுவனம் சமீபத்தில் பனோசோனிக் லுமிக்ஸ் ஜிஎப்5 என்ற ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய கேமரா ஜிஎப்3 கேமராவிற்கு அடுத்து வரும் கேமரா ஆகும்.

இந்த புதிய கேமராவின் படங்களை பல இணையதளங்கள் வெளியிட்டிருக்கின்றன. அதன்படி இந்த கேமரா ஜிஎப்3 கேமராவைப் போல் இருந்தாலும் இதில் எக்ஸ்ட்ராவாக ஒரு கைபிடி உள்ளது. அதனால் இதைக் கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும். இது ஒரு அடக்கமான கேமராவாகும். அதோடு இதன் லென்சை அகற்ற முடியும். குறிப்பாக பனோசோனிக்கின் புகழை உயர்த்தும் வகையில் இந்த கேமரா மிகத் தெளிவான துல்லியமான படங்கள் மற்றும் வீடியோவை எடுக்கும்.

இந்த ஜிஎப்5 கேமரா பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது இது 12 மெகா பிக்சல் இமேஜ் சென்சாரைக் கொண்டிருக்கிறது. இதன் ஐஎஸ்ஒ லிமிட் 12800 ஆகும். மேலும் இது 920கே டாட் எல்சிடி மற்றும் சத்த ரேசியோவிற்காக சிறந்த சிக்னலையும் இந்த கேமரா வழங்குகிறது.

இது ஒரு மைக்ரோ போர் தேர்ட் கேமரா ஆகும். அதனால் இந்த கேமரா டிஎஸ்எல்ஆர் தொழில் நுட்பத்தின் அத்தனை வசதிகளையும் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் ஆப்டிக்கல் வியூவ் பைன்டர் கிடையாது. மேலும் குறைந்த வெளிச்சத்திலும் இந்த கேமரா மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் சக்தி கொண்டது. அதுபோல் இது எடுக்கு வீடியோவில் அதிக இறைச்சல் இருக்காது.

இந்த புதிய பனோசோனிக் கேமராவின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது களமிறங்கும் தேதியும் இன்னும் தெரியவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X