குழந்தைகளைக் கவரும் புதிய நிக்கன் கேமரா!

Posted By: Karthikeyan
குழந்தைகளைக் கவரும் புதிய நிக்கன் கேமரா!

நிக்கன் தற்போது குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த கேமராவிற்கு கூல்பிக்ஸ் எஸ்30 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. குழந்தைகள் இந்த கேமராவை நன்றாக இயக்க வேண்டும் என்பதற்காக இந்த கேமராவில் உள்ள பட்டன்கள் எல்லாம் மிகப் பெரியதாக உள்ளன.

குழந்தைகளைக் கவரும் விதத்தில் வந்திருக்கும் இந்த கேமரா ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது. அதாவது இந்த கேமரா 2.7 இன்ச் அளவில் வண்ண எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. 32 அடி ஆழத்தில் இந்த கேமராவைப் போட்டாலும் உயரமான இடத்திலிருந்து இந்த கேமரா கீழே விழுந்தாலும் பாதிப்பு அடைவதில்லை.

இந்த குழந்தைகள் கேமராவில் 10.1 மெகா பிக்சல் சிசிடி இமேஜ் சென்சார், 720பி மூவி பதிவு செய்யும் வசதி, யுஎஸ்பி இணைப்பு, 3எக்ஸ் ஆப்டிக்கல் சூம், நிக்கன் எக்ஸ்பீடு சி2 இமேஜ் ப்ராசஸிங் என்ஜின் மற்றும் ஆட்டோ சென்சிட்டிவிட்டி ஐஎஸ்ஐ 80-1600 போன்ற பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.

இந்த கேமராவின் உச்சியில் இயக்கு பட்டன், மூவி பதிவு செய்யும் பட்டன் மற்றும் ஷட்டர் ரிலீஸ் செய்யும் பட்டன் ஆகிய மூன்று பெரிய பட்டன்கள் உள்ளன. இதன் மூலம் இந்த கேமராவை குழந்தைகள் மிக எளிதாக இயக்க முடியும். மேலும் இந்த கேமரா எஸ்டிஎச்சி, அல்லது எஸ்டி அல்லது எஸ்டிஎக்ஸ்சி மெமரி கார்டுகள் போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது.

இந்த கேமரா மூலம் எடுக்கும் படங்களை குழந்தைகள் மிக எளிதாக ஸ்லைடுகளாக மற்றும் ஸ்க்ராப்புக்குகளாக மாற்ற முடியும். மேலும் குழந்தைகள் தங்கள் குரலையும் இந்த கேமராவில் பதிவு செய்ய முடியும்.

இந்த கேமராவைப் பயன்படுத்துவோர் ஆல்கலைன் அல்லது லித்தியம் ஐயன் அல்லது நி-எம்எச் போன்ற பேட்டரிகளை இந்த கேமராவில் பயன்படுத்தலாம்.

இந்த கேமரா பிங், கருப்பு, ஊதா மற்றும் வெள்ளை என 4 வண்ணங்களில் வருகிறது. குழந்தைகள் இந்த கேமராவை வாங்க வேண்டும் என்பதற்காக இதன் விலையும் குறைவாக இருக்கிறது. அதாவது இந்த கேமராவ ரூ.6000க்கு வாங்கலாம். இந்த கேமரா இந்த மார்ச் மாத இறுதியில் சந்தைக்கு வந்துவிடும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்