கெனான் வழங்கும் புதிய மிரர்லெஸ் கேமராக்கள்

Posted By: Karthikeyan
கெனான் வழங்கும் புதிய மிரர்லெஸ் கேமராக்கள்

கேமரா உலகில் கொடிகட்டி பறக்கும் கெனான் நிறுவனம் ஒரு புதிய கையடக்க மிரர்லெஸ் கேமராவைக் களமிறக்க இருக்கிறது. நீண்ட நாள்களாக இந்த கேமராவைப் பற்றி பல வதந்திகள் வந்தாலும் இந்த கேமரா மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மேலும் கெனான் 1 கேமரா மாடலை களமிறக்கப் போவதில்லை. மாறாக 2 கேமரா மாடல்களை களமிறக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு கேமரா மாடல் 14 எம்பி வெர்சனுடனும், மற்றொரு கேமரா 24 எம்பி உயர் ரிசலூசனுடனும் வர இருக்கிறது. இரண்டுமே இதுவரை கெனான களமிறக்காத உயர்தரம் கொண்ட டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் ஆகும்.

இந்த இரண்டு கேமராக்களும் மிரர்லெஸ் கேமராக்களாகும். உயர் ரிசலூசன் கொண்ட இந்த கேமராக்கள் இஎப் - லென்ஸ் வசதியைக் கொண்டுள்ளன. மேலும் இவை 3 முதல் 5 லென்சுகளைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த கேமராக்களில் உள்ள மற்ற தொழில் நுட்பங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை.

இந்த கேமராக்கள் மிக விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கெனான் கேமராக்கள் சாம்சங் மற்றும் நிக்கன் போன்ற நிறுவனங்களின் புதிய கேமராக்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot