மிரர்லெஸ் கேமரா வரலாறு மற்றும் டி.எஸ்.எல்.ஆர். மாடல்களின் அவற்றின் ஆதிக்கமும்

|

மிரர்லெஸ் கேமராக்களின் வரலாறு, இவ்வகை கேமராக்கள் எவ்வாறு டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

மிரர்லெஸ் கேமராக்களின் வரலாறு, இவை டி.எஸ்.எல்.ஆர் ஆதிக்கம்

டி.எஸ்.எல்.ஆர். வகை கேமராக்கள் மற்றும் முதல் மிரர்லெஸ் கேமராக்களுக்கும் இடையேயான போட்டி சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் மிரர்லெஸ் கேமராக்களை எப்சன் நிறுவனம் வெளியிட்டது. இவை மிரர்லெஸ் கேமராக்கள் என விளம்பரப்படுத்தப்படவில்லை, எனினும் சதுரங்க வடிவில் இவற்றினுள் சென்சார் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு கேமராக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டன. இவை அனைத்திலும் மிரர்லெஸ் வடிவமைப்பே இடம்பெற்றிருந்தது. லெய்கா, ஒலிம்பஸ், புஜிஃபிலிம், பென்டேக்ஸ் மற்றும் பேனாசோனிக் என பல்வேறு நிறுவனங்களும் இவ்வை கேமராக்களை வெளியிட்டன. 2008-ம் ஆண்டில் மிரர்லெஸ் கேமராக்கள் லைஃப்ஸ்டைல் உபகரணமாக பார்க்கப்பட்டன.

மிரர்லெஸ் கேமராக்களின் வரலாறு, இவை டி.எஸ்.எல்.ஆர் ஆதிக்கம்

இந்த கேமராக்கள் மற்ற பாயின்ட் அன்ட் ஷூட் கேமராக்கள் வழங்க திணரும் புகைப்பட தரத்தை வழங்கின. இந்த காலத்தில் இந்திய கேமரா சந்தையில் அதிகப்படியான பாயின்ட் அண்ட் ஷூட் வகை கேமராக்கள் வெளியாகின.

2010-ம் ஆண்டு சோனி நிறுவனம் மிரர்லெஸ் மாற்றக்கூடிய லென்ஸ் கேமராக்களை வெளியிட்டது. சோனி NEX-3 மற்றும் NEX-5 MICL மீண்டும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து MICL-கள் டி.எஸ்.எல்.ஆர்.களை எதிர்காலத்தில் மாற்றாக இருக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

இதேபோன்று டி.எஸ்.எல்.ஆர். வகை கேமராக்கள் 2010-ம் ஆண்டு நல்ல வரவேற்பை பெற்றது. கேனான் EOS 5D மார்க் 2 வெளியிடப்பட்டது, இதைத் தொடர்ந்து கேனான் 7D சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இதேபோல் நிகான் மற்றும் கேனான் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

2017 ஆகஸ்ட் 3 : 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஹவாய் நோவா 2 பிளஸ்.!2017 ஆகஸ்ட் 3 : 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஹவாய் நோவா 2 பிளஸ்.!

2012-ம் ஆண்டு சோனியின் ஆல்ஃபா 7 MICL மற்றும் டி.எஸ்.எல்.ஆர். வகைகளுக்கு போட்டியாக அமைந்தது. ஆல்ஃபா 7 நல்ல வரவேற்பை பெற்ற போதும் பல்வேறு கோளாறுகளை கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மின்சாதன வியூ ஃபைன்டர் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளில் சீராக வேலை செய்யவில்லை. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருந்தாலும் டி.எஸ்.எல்.ஆர். போன்ற உறுதியாக இல்லை.

2012-ம் ஆண்டு சோனியின் மிரர்லெஸ் கேமராக்கள் டி.எஸ்.எல்.ஆர் வகைகளை முந்தும் வகையில் அமைந்தது. ஆல்ஃபா 7S, ஆல்ஃபா 7S 2 மற்றும் ஆல்ஃபா 7R2 மாடல்கள் அதிக மேம்படுத்தல்களுடன் வெளியிடப்பட்டு அதிக தரமுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதிகளை வழங்கியது. இவ்வாறு முதல்முறையாக மிரர்லெஸ் கேமராக்கள் டி.எஸ்.எல்.ஆர் வகைகளை முந்தியது.

பல்வேறு புகைப்பட கலைஞர்களும் மிரர்லெஸ் கேமராக்களை வாங்கி பயன்படுத்தத் துவங்கினர். சோனியின் உயர் ரக MICL வகை கேமராக்கள் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கின. இதன் பிரபலம் மற்றும் நம்பகத் தன்மை கேனான் மற்றும் நிகான் உள்ளிட்ட நிறுவனங்களும் இவ்வைக கேமராக்களை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து நிகான் MICL வகை கேமரா உருவாக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மிரர்லெஸ் கேமராக்கள் டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களை முந்தியுள்ள நிலையில் டி.எஸ்.எல்.ஆர். வகை கேமராக்கள் மேலும் ஒரு தசாப்தம் அளவு சந்தையில் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கம் என எதிர்பார்க்கலாம். சோனியின் மிரர்லெஸ் கேமராக்கள் விலை ரூ.1,70,000 முதல் ரூ.2,10,000 வரை கிடைக்கின்றன.

MICL ரக கேமராக்கள் அதிக உறுதியுடன் வெளிவரும் வரை விலங்குகளை புகைப்படம் எடுப்பவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் புகைப்படம் எடுப்பவர்கள் இவ்வகை கேமராக்களை வாங்குவது கடினமான ஒன்று தான். டி.எஸ்.எல்.ஆர். வகை கேமராக்கள் எவ்வித சூழல்களையும் தாங்கும் படி உறுதியாக இருக்கின்றன.

Best Mobiles in India

Read more about:
English summary
Mirrorless cameras have barely seen a decade and a half and are already replacing DSLRs since they offer great picture and video quality.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X