4ஜியை விட 20மடங்கு வேகமான 5ஜி! ஆனால் பாதுகாப்பானதா?

|

மொபைல் நெட்வொர்க்கின் ஐந்தாவது தலைமுறையான 5ஜி சேவை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அது நாம் உலகத்துடன் ஊடாடும் விதத்தில் முழுமையான புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. இது இணைய வேகத்தை சிறப்பானதாக மாற்றுவது மட்டுமின்றி, மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப சமுதாயத்திற்கு வழிவகுக்கும்.

20 மடங்கு வேகமாக இருக்கும்

20 மடங்கு வேகமாக இருக்கும்

ஐஓடி, சுகாதாரம், ஆட்டோமொபைல் துறைகள் மற்றும் இது போன்ற பிற துறைகளும் 5ஜி வருகையால் மிகவும் பயனடைவார்கள். மேலும் இந்த புதிய தலைமுறை கம்பியில்லா தொலைதொடர்பு வலையமைப்பானது அதன் முன்னோடியான 4ஜி உடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு வேகமாக இருக்கும். இது அதன் முந்தைய கட்டமைப்புகளின் மறுபதிப்பாக இருக்காமல், தொடக்கத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகும்.

 சில விமர்சனங்களும் இருக்கும்

சில விமர்சனங்களும் இருக்கும்

"பாராட்டுகளுடன் சில விமர்சனங்களும் இருக்கும்" என்பதற்கேற்ப, 5ஜி தொழில்நுட்பமும் சில குறைபாடுகளை கொண்டுள்ளது. நிறுவல், பாதுகாப்பு மற்றும் அதன் உருவாக்கம் என குறிப்பிட்டு கூறக்கூடிய சில தடைகளை தாண்டி தான், 5G மிகவும் மேம்பட்ட கம்பியில்லா தொலைதொடர்பு வலையமைப்புஆக தன்னை நிறுவ முடியும்.

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-விலைகுறைப்பு: அள்ளிக்கோங்க.!நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-விலைகுறைப்பு: அள்ளிக்கோங்க.!

டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ்

டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ்

இந்தியா போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் இன்னும் 4ஜி சேவையே இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வராத நிலையில், புதிய மற்றும் விலையுயர்ந்த நெட்வொர்க்-ஐ மேற்கொள்வது ஆபரேட்டர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது. தேசிய டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கொள்கையுடன்(NDCP) தொலைதொடர்புதுறை, 2022க்குள் இத்துறையில் $100 பில்லியன் முதலீட்டை உயர்த்துவை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கு ரூ 492 கோடி ரூபாய்

கு ரூ 492 கோடி ரூபாய்

இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 5ஜி சேவைகள் மற்றும் நொடிக்கு 50 மெகாபிட்கள் வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்குவதாகும். ஆனால் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ள அடிப்படை விலையின் காரணமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள் 5G ஸ்பெக்ட்ரம் வாங்க ஒப்புக் கொள்ளவதை நிறுத்திவைத்துள்ளன . 3,300-3,600MHz பேண்ட்-ல் 20 MHz 5G ஸ்பெக்ட்ரம் பட்டைகளில் , ஓர் அலகுக்கு ரூ 492 கோடி ரூபாய் என்ற விலையை டிராய் பரிந்துரைத்துள்ளது.

இது மற்ற நாடுகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளதால், உலகம் முழுதும் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் விகிதம் சரியலாம். எனவே இந்த அமைப்பை நிறுவ சில முக்கிய நடவடிக்கைள் எடுப்பதன் மூலம் அதை மலிவாக கிடைக்க செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப தடைகள்

தொழில்நுட்ப தடைகள்

இண்டர்-செல் குறுக்கீடு மிகவும் கவனத்தை ஈர்க்ககூடிய ஒரு பிரச்சினை ஆகும். ஒரே நேரத்தில் வெவ்வேறு அயல் செல்களின் பயனர்கள் ஒரே அலைவரிசையை பயன்படுத்தும் போது குறுக்கீடு ஏற்படுகிறது. ஏனெனில் செல்கள் தாங்கள் மட்டுமே வானொலி அலைகளை மட்டுமே அடையாளம் காண முடியும், மற்ற அண்டை செல்கள் என்ன பயன்படுத்துகின்றன என்பதை கண்டறிய முடியாது.

LTE / LTE-A போன்ற 4G நெட்வொர்க்குகளில் இது பேஸ் ஸ்டேசனுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் 5ஜியில் அது அவ்வளவு எளிதல்ல.

இந்தியா: ரூ.6,799-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!இந்தியா: ரூ.6,799-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

சக்தி வாய்ந்த உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது

சக்தி வாய்ந்த உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது

5G சேவையானது சிக்னல்கள் மற்றும் தரவுகளை பரிமாற்ற ரேடியோ ஸ்பெக்ட்ரத்தை வலுவாக நம்பியுள்ளது. இந்த தொழில்நுட்பம் நிறைய தரவுகளை ஒரே நேரத்தில் கையாள பல வலுவான கணக்கீட்டு சக்தி கொண்டிருந்தாலும், அதற்கு இன்னும் சக்தி வாய்ந்த உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.

ஆபத்தில் தனியுரிமை

ஆபத்தில் தனியுரிமை

5ஜி சேவையானது உயர் பாதுகாப்பு ஆபத்துகளை கொண்டிருக்கும் என்ற கவலை நிலவுகிறது. ஐரோப்பிய சைபர் தொழில்நுட்ப நிறுவனமான ENISA 5G தொழில்நுட்பம் கொண்டுவரும் ஆபத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் ஏற்கனவே 4 ஜி நெட்வொர்க்குகளில் இருந்தாலும், அலைவரிசை மற்றும் பயனர்கள் அதிகரிப்பதால், இந்த அச்சுறுத்தல்கள் தீவிரமாக இருக்கும்.

5 ஜி நெட்வொர்க்குகளின் குறைந்த செயலற்ற தன்மை காரணமாக, சைபர் தாக்குதல்களில் ஒரு எழுச்சி பார்க்க முடியும். கிட்டத்தட்ட எல்லா சாதனங்களையும் இணையத்தின் மூலம் தொலைதூரத்திலிருந்து பயன்படுத்தலாம். எனவே சைபர் கிரிமினல்கள் தங்களது தீய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இதை பயன்படுத்தலாம். ஐஓடி சாதனங்கள் மற்றும் சென்சார்கள், ஹேக்கர்களிடம் இந்த தங்களை பாதுகாக்க அதிக சிக்கலான அங்கீகார அமைப்பு தேவைப்படும்.

சைபர் சட்டம்

சைபர் சட்டம்

இந்த புதிய நெட்வொர்க், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தனியுரிமை, சைபர் உட்பட பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகளை வரையறுக்க வேண்டும். இது சைபர் சட்டம் உருவாக்குவதை முக்கியமான பிரச்சனையாக உருவாக்குகிறது. இது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் என்பதால், அந்தந்த நாடுகள் சில சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வகுத்து இந்த அச்சுறுத்தல்களைத் தடுக்கவேண்டும்.

5ஜி-ஆல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?

5ஜி-ஆல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?

5G நெட்வொர்க் மூலம் தொலைதூர அறுவை சிகிச்சை, அதிக நோயாளிகளுக்கு தொலைதூர கண்காணிப்பு வழங்குவது, நிகழ்நேர தகவல்களை மருந்துவர்களுக்கு அனுப்புவது போன்றவற்றின் மூலம் சுகாதார துறையில் உதவ வாய்ப்புள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி மையம் (IARC) ஆகியவை ஏற்கனவே மின்காந்த கதிர்வீச்சு (EMF) "சாத்தியமாக மனிதர்களுக்கு பாதிப்பு
ஏற்படுத்தும் "என்று கூறியுள்ளது.

அந்த உண்மை ஒருபுறம் இருந்த போதிலும் இன்னும் அலட்சியம் நிலவுகிறது மற்றும் மின்காந்த அலைகள் (EMF), ரேடியோ அலைவரிசை (RF) மற்றும் மனித ஆரோக்கியத்தின் மீதான அதன் விளைவுகள் ஆகியவற்றைப் ஆய்வுசெய்ய தேவையான முதலீடுகள் இல்லை . 5Gயை அமல்படுத்தும்போது, குறைந்த அலைவரிசையுள்ள அணுகல் புள்ளிகள் மற்றும் மொபைல் போன்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

வேகமான பதிவிறக்கங்களுக்கான வேண்டுகோள்கள் பரவலாக இருந்தாலும், EMF கதிர்வீச்சு, RF பரிமாற்றங்கள் மற்றும் Wi-Fi சமிக்ஞைகளின் நிலையான ஓட்டம் போன்வற்றின் பாதிப்புகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படாது.

சூரியனுக்கு செல்லும் இஸ்ரோ! அடுத்த ஆராய்ச்சி திட்டம் ரெடி!சூரியனுக்கு செல்லும் இஸ்ரோ! அடுத்த ஆராய்ச்சி திட்டம் ரெடி!

உண்மையில் 5ஜி தான் எதிர்காலமா?

உண்மையில் 5ஜி தான் எதிர்காலமா?

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசாங்கங்கள் மற்றும் ஆபரேட்டர்கள் ஆகியோர் மத்தியில், 5ஜி சேவை அதன் நிறுவல், விலை, நம்பகத்தன்மை மற்றும் மிக முக்கியமாக பாதுகாப்பு போன்வற்றில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே கணித்தபடி, 5ஜி தொழில்நுட்பம் ஒரு தனிநபரை உலகத்துடன் இணைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும் மற்றும் ஒரு 4G நெட்வொர்க்கில் கனவாக இருந்த விஷயங்களை நிறைவேற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் உலகின் பல பகுதிகளில் முந்தைய தொழில்நுட்பங்கள் (5G மற்றும் 3G) இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் 5ஜியை செயல்படுத்த இது சரியான நேரமா என்ற பெரிய கேள்வி எழுகிறது.

சூப்பர் கம்ப்யூட்டர்கள்

சூப்பர் கம்ப்யூட்டர்கள்

இணையத்தில் இணைந்துள்ள ஸ்மார்ட்போன்கள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்லெட்கள் ஆகியவற்றிற்கு அப்பால் உலகிற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை 5ஜி வழங்குகிறது.இந்த புதிய நெட்வொர்க் சேவைகளை வழங்கும் தொழில்கள், ஐஓடி சுற்றுச்சூழல் அமைப்புகளை நிர்வகிப்பதற்கான செயலிகள்,தரவுகளை ஸ்மார்ட் நுண்ணறிவாக மாற்றும் செயலிகள் போன்ற பல புதிய வாய்ப்புகளை கொண்டு வருகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5G Might Be 20 Times Faster Than 4G Is It 20 Times Safer Too : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X