Home
Camera

3டி-ல் பிரிண்ட் செய்த ஸ்பைடர் உடை! ஆபத்தில் உதவும்..!

இந்த நவீன ஆடையில் உள்ள ஏராளமான சென்சார்கள் ஆடைய அணிந்ததிருப்பவரின் அருகாமையையும், அவர்களின் மனஅழுத்த நிலைகளையும் கண்காணிக்கின்றன.

வடிவமைப்பாளரான அனுக் விப்ரிச்ட், தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் உள்ள பேஷன் மற்றும் தொழில்நுட்பம் என்ற இரண்டு துறைகளிலும் பணியாற்றி வரும் நிலையில்,அவர் இந்த இரு துறைகளும் ஒன்றுக்கொன்று கற்று பயனடையும் வழிகளை ஆராய்ந்து சோதனை செய்துவருகிறார்.

3டி-ல் பிரிண்ட் செய்த ஸ்பைடர் உடை! ஆபத்தில் உதவும்..!

அவரது சமீபத்திய ப்ராஜெக்ட் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட வெளி உடற்கூடு (Exoskeleton) கொண்ட அதிர்ச்சி தரும் ரோபோட்டிக் உடை ஆகும். அணிந்துகொண்டிருப்பவரின் சுற்றுப்புறத்துடன் ஊடாடி அதற்கேற்ற எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடையானது, ஃபேஷன் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் என்ன செய்யமுடியும் என்பதற்கான வரம்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஏராளமான சென்சார்கள்

ஏராளமான சென்சார்கள்

இந்த நவீன ஆடையில் உள்ள ஏராளமான சென்சார்கள் ஆடைய அணிந்ததிருப்பவரின் அருகாமையையும், அவர்களின் மனஅழுத்த நிலைகளையும் கண்காணிக்கின்றன. " இந்த ஆடையை அணிந்திருப்பவரை யாரேனும் மிகவும் தீவிரமாக அணுகமுயன்றால், இதிலுள்ள இயந்திர மூட்டு எலும்புகள் அவர்களை தாக்குவதற்கு ஏதுவாக மேல் நோக்கி எழும்.

பாவனைகள் மூலம் சைகை காட்டும்

பாவனைகள் மூலம் சைகை காட்டும்

இவ்வமைப்பை அமைதியாக பொறுமையாக அணுகும் போது, இந்த உடையானது அருகில் வருமாறு மென்மையாக தெரிவிக்கின்றன பாவனைகள் மூலம் சைகை காட்டும் " என்கிறார் இந்த உடைய வடிவமைத்த வடிவமைப்பாளரான அனுக்.

இயந்திர கட்டுப்பாட்டு எலும்புகள்

இயந்திர கட்டுப்பாட்டு எலும்புகள்

இதிலுள்ள சென்சார்கள் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டு எலும்புகள் இன்டெல் எடிசன் ப்ளாட்பார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இது போன்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப செயலிகளுக்காக (integrated technological applications) வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய செயலி "இன்டெல் எடிசன் ப்ளாட்பார்ம்" ஆகும்.

வீடியோ

இந்த ஸ்பைடர் உடையானது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கீழேயுள்ள வீடியோவின் மூலம் பாருங்கள்! உங்களது கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்...

Best Mobiles in India

English summary
3d-printing-exoskeleton-robot-spider-dress-anouk-wipprecht: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X