இனி வீட்டுக்கு 1 செக்யூரிட்டி கேமரா.. வெறும் ரூ.1099 க்கு 360 டிகிரி.. நைட் விஷன்.. அள்ளி தரும் பிளிப்கார்ட்..
இந்தியாவில் முக்கிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை செக்யூரிட்டி கேமரா (Security cameras) இல்லாத வீடுகளை எளிதாக விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக எங்கு பார்த்தாலும் வீட்டின் முன் ஒரு கேமரா தொங்கி கொண்டிருக்கிறது. வீட்டில் யாராவது ஒரு இருந்து பார்த்துக் கொள்ளும் நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த சிசிடிவி செக்யூரிட்டி கேமராக்கள்.
முன்பு செக்யூரிட்டி கேமராக்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வரவில்லை. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அதாவது கொட்டும் மழை, வெயில் மற்றும் குளிர் காலங்களை தங்கும் வகையில் செக்யூரிட்டி கேமராக்கள் வருகின்றன. தற்போது இதுபோன்ற செக்யூரிட்டி கேமராகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் சிசிடிவி செக்யூரிட்டி கேமரா மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த சிசிடிவி கேமராக்களை பார்க்கலாம்.
செக்யூரிட்டி கேமரா ஆஃபர்
1. டிபி-லிங்க் டேப்போ சி200 360 டிகிரி பான்-டில்ட் வைஃபை செக்யூரிட்டி கேமரா (TP-Link Tapo C200 360 degree Pan/Tilt Wi-Fi Security Camera) ஆனது முன்பு ரூ.3999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த செக்யூரிட்டி கேமராவை ரூ.1099 விலையில் வாங்கிவிட முடியும்.
2. Qubo ஸ்மார்ட் 360 கியூ100 (Qubo Smart 360 Q100) செக்யூரிட்டி கேமரா ஆனது முன்பு ரூ.3,790 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த கேமராவை ரூ.1690 விலையில் வாங்க முடியும். வைஃபை, கிளவுட் மற்றும் எஸ்டி ஸ்டோரேஜ். 2எம்பி கேமரா, 2 வே டால்க் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.
3.மைஜிக் ஸ்மார்ட்ஹோம் 5+5எம்பி வைஃபை ஃபுல் எச்டி சிசிடிவி கேமரா (Maizic Smarthome 5+5MP CCTV Camera) ஆனது முன்பு ரூ.6,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த சிசிடிவி கேமரா ரூ.1682 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இது 360-டிகிரி கவரேஜ் வழங்கும் சிசிடிசி கேமரா ஆகும்.
4.ட்ரூவியூ வைஃபை 3எம்பி மினி பான்-டில்ட் ஜூம் சிசிடிவி கேமரா (Trueview WiFi 3mp Mini Pan-Tilt Zoom Cctv Camera) ஆனது முன்பு ரூ.10,500 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த இந்த சிசிடிவி கேமராவை ரூ.3,097 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இது ஒரு சிறந்த அவுட்டோர் சிசிடிவி கேமா ஆகும். நைட் விஷன் ஆதரவும் இதில் உள்ளது.
5.சிபி பிளஸ் சிபி- இ35கியூ 3எம்பி வைஃபை ஸ்மார்ட் சிசிடிவி கேமரா (CP PLUS CP-E35Q 3MP Wifi Smart CCTV Camera) ஆனது முன்பு ரூ.3000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த சிசிடிவி கேமரா ரூ.1999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 256ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு, ஐஆர் நைட் விஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.
6.டிடிஎல்சி டூயல் லென்ஸ் ஃபுல் எச்டி 3எம்பி ஏஐ சிசிடிவி கேமரா (DDLC Dual Lens Full HD 3mp AI CCTV Camera)ஆனது முன்பு ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1699 விலையில் வாங்க கிடைக்கிறது.

7.சியோமி எம்ஐ 360 டிகிரி ஹோம் 1080பிக்சல் 2ஐ செக்யூரிட்டி கேமரா (Mi 360 degree Home 1080p 2i Security Camera) முன்பு ரூ.4,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த கேமராவை ரூ.2499 விலையில் வாங்கிவிட முடியும். நைட்விஷன் ஆதரவு சிசிடிவி கேமராவில் உள்ளது.
8.மோன்ரிக்ஸ் மினி டூயல் லென்ஸ் 2-இன்-1 செக்யூரிட்டி கேமரா (Monrix Mini Dual Lens 2-in-1 Security Camera)ஆனது முன்பு ரூ3,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த செக்யூரிட்டி கேமராவை ரூ.1447 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








