உஷார்: கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இடங்களில் ரகசிய கேமராக்கள்.!
யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். குறிப்பாக யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் இந்த ஸ்பை கேமரா இடம்பெறும்.
இப்போது வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனாலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப சாதனங்கள்
பலருக்கும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று தான் கூற வேண்டும். கேமரா தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக நிறையவே முன்னேறியுள்ளது.
குறிப்பாக இந்திய சந்தைக்கு மிகச்சிறய கேமராக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஸ்பை கேம் உற்பத்தியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ரிமோட் கண்ட்ரோல், எச்டி வீடியோ, சிறந்த மெமரி கார்டு வசதி ஆகியவற்றை கொண்டு முழுமையான முறையில் தயாரிக்கின்றனர். கீழ் வரும் ஸ்லைடர்களில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஸ்பை கேமராக்களின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இதை பார்த்து உஷாராகிடுங்க மக்களே.

யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் ஸ்பை கேமரா
யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். குறிப்பாக யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் இந்த
ஸ்பை கேமரா இடம்பெறும்.

ஷவர் ஜெல் ஸ்பை கேமரா:
நாம் பயன்படுத்தும் ஷவர் ஜெல் போன்றவற்றில் ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியுன் இந்த ஷவர் ஜெல் ஸ்பை கேமரா தயாரிக்கிப்படுகிறது.

WI-FI AC ADAPTER
WI-FI AC ADAPTER சாதனங்களிலும் ஸ்பை கேமரா இருக்கலாம். சட்டையில் அணியும் டைகளிலும் கேமரா இருக்கலாம்.
.

பாத்ரூம் டிஷ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா
பாத்ரூம் டிஷ்யூ பேப்பர் பாக்ஸில் ஸ்பை கேமரா இருக்கலாம். மேலும் எவ்வித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

கிளாக் ரேடியோ ஸ்பை கேமரா
சில கிளாக் ரேடியோ சாதனங்களில் ஸ்பை கேமரா பொறுத்த முடியும். கிளாக் ரேடியோக்கள் வழக்கமாக கைப்பிடிகள், லேபிள்கள் மற்றும் சென்சார்கள்போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

செல்போன் சார்ஜர் ஸ்பை கேமரா
இப்போது வரும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா இருக்கலாம். மேலும் இவற்றில் டிவிஆர் போன்று மினி
கேமராவாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா
குறிப்பாக அனைத்து நிறுவனங்களிலும் ஸ்மோக் டிடெக்டர் இருக்கும், இவற்றில் ஸ்பை கேமரா பொறுத்த முடியும்.

பேனா ஸ்பை கேமரா
இது அனைவரும் அறிந்ததே, பேனாவிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

பெல்ட் ஸ்பை கேமரா
பெல்ட் பக்கல்ஸ்களிலும் கேமராவை பொருத்த முடியும்.


ஸ்போர்ட்ஸ் ஷூ ஸ்பை கேமரா
சில நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் ஷூ-க்களில் இந்த ஸ்பை கேமரா இருக்கலாம், குறிப்பாக ஸ்பை கேமிரா மாடல்கள் இப்போது மிகவும் எதிர்பாராத வடிவங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications