கொலை செய்யும் ரோபோக்கள் பற்றி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்!

அதாவது, தன்னாட்சிப் ஆயுத அமைப்புகள் (ஆட்டானமஸ் வெப்பன் சிஸ்டம்) என்று கூறப்படும் இவ்வகை ரோபோட்கள் ஆனது யாரை தாக்க வேண்டும் மற்றும் எப்போது தாக்க வேண்டும் என்பதை சுயமாக தீர்மானிக்கும் திறனை கொண்டுள்ளன.

|

கில்லர் ரோபோட்கள் அதாவது போரில் கொலை செய்யக்கூடிய இயந்திரங்களில் இருக்கும் ஒரு பிரதான சிக்கலை பற்றி நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்புள்ளது.

அதாவது, தன்னாட்சிப் ஆயுத அமைப்புகள் (ஆட்டானமஸ் வெப்பன் சிஸ்டம்) என்று கூறப்படும் இவ்வகை ரோபோட்கள் ஆனது யாரை தாக்க வேண்டும் மற்றும் எப்போது தாக்க வேண்டும் என்பதை சுயமாக தீர்மானிக்கும் திறனை கொண்டுள்ளன. இதனாலேயே தான் உலகின் மிகப்பெரிய இராணுவ சக்திகளில் இதை சேர்க்கலாமா வேண்டாமா என்கிற பேரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதெல்லாம் தெரிந்த விடயம் தானே? தெரியாத சமாச்சாரங்கள் இருக்கிறதா?

01. என்ன பெயர்?

01. என்ன பெயர்?

இவ்வகை ரோபோட்களின் அதிகாரப்பூர்வ பெயர் "லெதல் ஆட்டானமஸ் சிஸ்டம்ஸ்" அல்லது லா (LAW) ஆகும். இவைகள் பெரும்பாலும் "போர் ரோபோக்கள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவை கள் பறக்கும் டிரோன்களாகவும், ஆளில்லா படகுகளாகவும் அல்லது வாகனங்களாகவும் கூட இருக்கும்.

02. இதற்கான சரியான விளக்கம் என்ன?

02. இதற்கான சரியான விளக்கம் என்ன?

இது போன்ற ஆயுதம் அமைப்புகளுக்கு பொது வரையறை ஏதும் இல்லை. செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) அனைத்துலகக் குழு, இவைகளை தானாகவே இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, தாக்குதலைத் தொடுக்கும் முக்கியமான செயல்பாடுகளை தன்னகத்தே கொண்ட ஆயுதங்களாக விவரிக்கிறது, அதாவது இவைகள் மனிதத் தலையீடு இல்லாமல் வேலை செய்யும் என்று அர்த்தம்

03. இந்த ஆயுதங்கள் ஏற்கனவே

03. இந்த ஆயுதங்கள் ஏற்கனவே "பயன்பாட்டில்" உள்ளனவா?

மனிதர்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் முழுமையான சுயாட்சிமிக்க ஆயுதம் அமைப்புகள் இன்னமும் இல்லை. எனினும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் நிகழும் விரைவான முன்னேற்றம் அவற்றின் பயன்பாட்டை கூடிய விரைவில் சாத்தியமாக் கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

04. இந்த தொழில்நுட்பத்தின் முன்னோடி எது?

04. இந்த தொழில்நுட்பத்தின் முன்னோடி எது?

ஏற்கனவே தன்னியக்க செயல்பாடுகளை கொண்ட பல ஆயுதங்கள் உள்ளன. குறிப்பாக, தங்கள் இலக்குகளை அடையாளம் கண்டு, தேர்ந்து எடுத்து மற்றும் தாக்கும் ராக்கெட்டுகள். ஆயுதங்களை தூர்வாறும் ஆளில்லாத யூ-படகுகள். நெட்வொர்க்கிங் திறன் கொண்ட மற்றும் தன்னியக்கமாக பெரும்பாலான பணிகளைச் செய்து வரும் ட்ரோன்கள் ஆகியவைகளை இந்த தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று கூறலாம்.

05. தானாக இயங்கும் என்றால், எப்படி?

05. தானாக இயங்கும் என்றால், எப்படி?

தாக்கப்பட அல்லது கொல்லப்பட வேண்டிய நபரின் பயோமெட்ரிக் தரவுகளுடன் சலித்துப்போன தானியங்கி கில்லர் ரோபோட்கள் ஆனது தற்போது, ரேடார் அல்லது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் எந்தவிதமான ரிமோட் கண்ட்ரோலும் இல்லாமல், தானாகவே குறிப்பிட்ட நபரை தேடி கண்டுபிடித்து, இலக்கை நிர்ணயம் செய்து (குறிப்பாக ஆளில்லா ட்ரோன்கள் மூலம்) தாக்குதலை நடத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் இவைகளை கட்டுப்படுத்தவோ அல்லது தாக்குதலைநடத்த ஆரம்பிக்கலாம் என்கிற கட்டளைகளை வழங்கவோ யாரும் தேவை இல்லை. இவைகள் எப்போது தாக்கும் என்பது யாருக்குமே தெரியாது

06. போரில் இவைகள் ஒரு முன்னுதாரணமான செயல்படும் என்று ஏன் வல்லுனர்கள் கருதுகிறார்கள்?

06. போரில் இவைகள் ஒரு முன்னுதாரணமான செயல்படும் என்று ஏன் வல்லுனர்கள் கருதுகிறார்கள்?

ஏனென்றால், போரின் இடையே, வாழ்க்கையா அல்லது மரணமா என்கிற ஒரு முடிவு மனிதனால் செய்ய முடியாது. ஆனால் அதை ஒரு இயந்திரம் எந்தவிதமான தயக்கமும் இன்றி செய்யும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் மற்றும் திட்டமிடப்பட்டது என்பதால் எடுக்கப்படும் முடிவுகளில் எந்த வித்தியாசமும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

07. ஏன் சர்வதேச மனிதாபிமான சட்டத்துடன் தன்னாட்சி ஆயுதங்கள் மோதல் செய்கின்றன?

07. ஏன் சர்வதேச மனிதாபிமான சட்டத்துடன் தன்னாட்சி ஆயுதங்கள் மோதல் செய்கின்றன?

இந்த சட்டத்தின் மிக முக்கிய கூறுபொருளில் ஒன்று என்னவென்றால், எந்த ஒரு தாக்குதலிலும், படைவீரர்கள்மற்றும் பொதுமக்களுக்கும் இடையே தெளிவாக வேறுபாடுகள் இருக்க வேண்டும். குடிமக்கள் மற்றும் பொது கட்டிடங்கள் சாத்தியமான முறைகளின் கீழ், தாக்கப்படக்கூடாது. ஆனால் இதை ஒரு தன்னியக்க ஏவுகணை அமைப்பால் செய்ய முடியாது. எனவேதான் சர்வதேச சட்டத்தின் கீழ் வல்லுநர்கள்., தாக்குதலின் இறுதி முடிவானது ஒரு மனிதனுக்கு தான் இருக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

08. வேண்டுமா? வேண்டாமா என்கிற சர்வதேச பேரம் நடைபெறுகின்றனவா?

08. வேண்டுமா? வேண்டாமா என்கிற சர்வதேச பேரம் நடைபெறுகின்றனவா?

நிச்சயமாக. சில வழக்கமான ஆயுதங்களுக்கான (CCW) பேரம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் (ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையில்) நடைபெற்று வருகிறது. ஆரம்பகால முறைசாரா விவாதங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளாக ஆனது, அதில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளாலும், அரசு சாரா நிறுவனங்களும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத் தக்கது.

09. பேச்சுவார்த்தைகள் எப்படி நடக்கிறது?

09. பேச்சுவார்த்தைகள் எப்படி நடக்கிறது?

மிகவும் மெதுவாக நடக்கிறது. பல்வேறு நாடுகளின் நிலைப்பாடுகள் மிகவும் தொலைவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய இராணுவ சக்திகள் கூட இந்த ஆயுதங்களை தடை செய்வதற்கு எதிராக இருக்கின்றன, ஏனெனில் அவற்றின் மேலாதிக்கத்தை பாதுகாக்க இவைகளை பயன்படுத்த விரும்புகின்றனர்.

10. ஜெர்மனியின் நிலைப்பாடு என்ன?

10. ஜெர்மனியின் நிலைப்பாடு என்ன?

"மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சுயாதீன ஆயுதம் கொண்ட ரோபோக்களை நிராகரிக்கிறோம், இவைகள் உலகெங்கிலும் தடை செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." - என்கிறது ஜெர்மனி. ஆயினும் கூட, சுயாதீன ஆயுத அமைப்பு முறைகளைத் தடை செய்வதைக் கோருகின்ற நாடுகளின் குழுவில் ஜெர்மனி இன்னும் இணையவில்லை என்பதும், மாறாக இவைகளை தடை செய்யக்கோரும் தடையற்ற உடன்படிக்கைக்காக வாதிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
10 things to know about killer robots: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X