Home
Artificial intelligence

ChatGPT ஒரே போடு.. 100 கோடி இமேஜ்கள்.. கூரையை பிச்சிக்கும் ChatGPT Images 2.0 மாடல்.. அப்படி என்ன இருக்கு?

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 (ChatGPT Images 2.0) ஆனது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இமேஜ் ஜெனரேஷன் மாடலானது அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே, இந்திய பயனர்கள் இதன் மூலம் 100 கோடிக்கும் (1 Billion) அதிகமான இமேஜ்களை உருவாக்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இந்த அசாத்திய வெற்றியை ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். அதில், "சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 இந்தியா. அங்கு ஏற்கனவே 100 கோடிக்கும் அதிகமான இமேஜ்கள் உருவாக்கப்பட்டுள்ளன; இதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ChatGPT ஒரே போடு! 100 கோடி இமேஜ்கள்.. பிச்சிக்கும் ChatGPT Images 2.0!

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 ஆனது, சீம்லெஸ் எடிட்டிங் கேபபலிட்டி, மல்டி-லேங்குவேஜ் டெக்ஸ்ட் ஜெனரேஷன் (பல மொழிகளை புரிந்து, இமேஜ் ஜெனரேஷன் செய்து கொடுக்கும்) மற்றும் ப்ராம்ட்களை (Prompts) துல்லியமாக டீகோட் செய்து புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் தொழில்நுட்ப வல்லுநர்கள் (Techies) மட்டுமல்லாமல், சாதாரண சோஷியல் மீடியா யூசர்களும் அன்றாட தேவைகளுக்கு இந்த இமேஜ் ஜெனரேஷன் மாடலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனாலேயே 100 கோடிக்கும் அதிகமாக இமேஜ்கள் ஜெனரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

ஓப்பன்ஏஐ (OpenAI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 (ChatGPT Images 2.0) குறித்த விவரங்களை பார்க்கையில், வெறும் இமேஜ் ஜெனரேஷனோடு நின்றுவிடாமல், தொழில்முறை தேவைகளை (Professional Needs) பூர்த்தி செய்யும் வகையில் முற்றிலும் புதிய தொழில்நுட்ப கட்டமைப்போடு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

1. சிந்திக்கும் திறன் ஒருங்கிணைப்பு (Thinking Mode Integration)
இதற்கு முந்தைய ஏஐ இமேஜ் மாடல்கள் நாம் கொடுக்கும் ப்ராம்ப்ட்களை (Prompts) அப்படியே நேரடியாக இமேஜ்களாக மாற்றும். ஆனால், இமேஜஸ் 2.0 மாடலில் திங்கிங் மோட் (Thinking Mode) இணைக்கப்பட்டுள்ளது. ஒரு இமேஜை உருவாக்குவதற்கு முன்பாக, அது ப்ராம்ப்ட்டில் உள்ள விவரங்களை அலசி ஆராய்ந்து உருவாக்குவதற்கு முன்னதாகவே திட்டமிடுகிறது.

ChatGPT ஒரே போடு! 100 கோடி இமேஜ்கள்.. பிச்சிக்கும் ChatGPT Images 2.0!

மேலும், இதில் நேரடி இணைய தேடல் (Live Web Search Data) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய உலக நிகழ்வுகள் அல்லது துல்லியமான தரவுகளின் அடிப்படையில் விளக்கப்படங்களை (Infographics) கூட இதனால் உருவாக்க முடிகிறது. ஆகவே, ப்ராம்ப்ட்கள் துல்லியமாக இருந்தால் போதும், எளிதாக மனதில் நினைத்த அவுட்புட்டை இதில் எதிர்பார்க்க முடியும்.

2. ஒரே ப்ராம்ப்ட்டில் பல இமேஜ்கள் (Multi-Image Output)
யூசர்கள் ஒருமுறை கொடுக்கும் ப்ராம்ப்ட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை (Multi-image) இந்த மாடல் வழங்கும். உதாரணமாக, ஒரு கதையின் வெவ்வேறு பக்கங்கள் (Manga sequences), ஒரு பிராண்டின் லோகோ மற்றும் வண்ணங்களின் கலவை (Mood boards), அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வெவ்வேறு முகபாவனைகள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் இதனால் துல்லியமாக வடிவமைக்க முடியும்.

3. மேம்பட்ட எழுத்து வடிவமைப்பு (Advanced Text Rendering)
ஏஐ இமேஜ்கள் உருவாக்கத்தில் நீண்ட காலமாக இருந்த மிகப்பெரிய சவால், படங்களுக்குள் இருக்கும் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் சிதைந்து போவதாகும். சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 இந்த தவறை பெருமளவு சரிசெய்துள்ளது. விளம்பர பலகைகள், லேபிள்கள் மற்றும் போஸ்டர்களில் உள்ள சிறிய உரை வடிவங்களை (Short text) பிழையின்றி மிக தெளிவாக இது உருவாக்குகிறது.

மேலும், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, ஜப்பானிய, சீன மொழிகளின் எழுத்து வடிவங்களையும் இது சிறப்பாகக் கையாள்கிறது. ஆகவே, இந்த மாடலை பல்வேறு மொழிகளில் பயன்படுத்த முடியும். இதனால், ப்ராம்ப்ட்களில் தெளிவு கிடைக்கும். ஆகவே, அதன் அவுட்புட்டும் நினைத்தபடி இருக்கும். மாற்றங்களையும் செய்து கொள்ளலாம்.

4. 4 மடங்கு வேகமான செயல்பாடு மற்றும் எடிட்டிங்
இந்த புதிய மாடல் முந்தைய வெர்ஷன்களை விட 4 மடங்கு வேகமாக இமேஜ்களை உருவாக்கும் திறன் கொண்டது. அத்துடன், இன்-பெயிண்டிங் (In-painting) தொழில்நுட்பம் மூலம் ஒரு படத்தின் பின்னணியை மாற்றுவதோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை நகர்த்துவதோ போன்ற மாற்றங்களை உரையாடல் மூலமாகவே (Conversational Editing) மிக எளிதாக செய்ய முடியும்.

5. பாதுகாப்பு அம்சங்கள் (Safety Features)
டீப்பேக்குகள் (Deepfakes) மற்றும் அரசியல், சினிமா பிரபலங்களின் படங்களை தவறாக உருவாக்குவது உள்ளிட்டவையை தடுப்பதற்காக ஓப்பன்ஏஐ இதில் கடுமையான பாதுகாப்பு விதிகளை (Safety Stack) அமல்படுத்தியுள்ளது. நாம் ப்ராம்ப்ட்கள் இன்புட் பிளாக்கிங் (Input blocking) செய்யப்படும். ஜெனரேட் செய்யப்படும் இமேஜ்கள் அவுட்புட் பிளாக்கிங் (Output blocking) செய்யப்படும்.

இதில், விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக இமேஜ் ஜெனரேஷன் தடுக்கப்படும். சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 மாடலானது சாட்ஜிபிடியின் இலவச யூசர்கள் (Free Tier) உட்பட அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கிறது. இணையதளம் (Web), ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆப்களாக கிடைக்கிறது. இருப்பினும், ப்ரோ, பிளஸ் போன்ற பிரீமியம் யூசர்களுக்கு கூடுதல் அணுகல் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
What is ChatGPT Images 2.0 The Next-Gen Image Generation Model Behind the 1 Billion Images Milestone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X