வாஷிங்டன் போஸ்ட் போட்டு உடைச்ச சீக்ரெட்.. ChatGPT, Gemini, Claude AI கிட்ட நீங்க கொடுக்குற Prompt-கள் எல்லாம்?
சாட்ஜிபிடி (ChatGPT), கிளாட் (Claude), ஜெமினி (Gemini) அல்லது க்ரூக் (Grok) போன்ற ஏஐ சாட்பாட்களிடம், நீங்கள் ஒரு கேள்வியை டைப் செய்து கேட்கும் போது, அந்த சாட்பாட் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது உண்மை அல்ல.
ஏஐ சாட்பாட்கள் உங்களுக்கு வழங்கும் ஒவ்வொரு பதிலுக்கு பின்னாலும் பெரும்பாலான பயனர்கள் ஒருபோதும் காணாத, கண்ணுக்கு தெரியாத பல வழிமுறைகள் உள்ளன. வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று - இது குறித்த விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது. ஏஐ உடனான உரையாடல்களுக்கு பின்னால் சில மறைக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள் (Hidden Rules and Instructions) இருப்பதை கண்டறிந்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டின் இந்த ஆய்வானது - முக்கியமான செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள், சாட்பாட்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றன? எதற்கு பதிலளிக்க மறுக்கின்றன? உணர்திறன் மிக்க தலைப்புகளுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன? ஏன் பயனர்களுடன் பேசும்போது அவை கையாளும் தொனியை கூட கட்டுப்படுத்த - சில சமயங்களில் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை கொண்ட - மறைக்கப்பட்ட "சிஸ்டம் ப்ராம்ப்ட்களை" (Hidden System Prompts) எவ்வாறு சார்ந்துள்ளன? என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஏஐ உடனான உரையாடல்களுக்கு பின்னால் உள்ள மறைக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள் யாவை? பெரும்பாலான பயனர்கள், ஒரு சாட்பாட் தங்களின் ப்ராம்ப்ட்களுக்கு (Prompts) நேரடியாக பதிலளிக்கும் என்று கருதுகின்றனர். உண்மையில், பயனர் ஒரு மெசேஜை டைப் செய்வதற்கு முன்பே, செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மற்றொரு தொகுதி அறிவுறுத்தல்களுடன் தான், ஒவ்வொரு உரையாடலும் தொடங்குகிறது.
இவைகள் 'சிஸ்டம் ப்ராம்ப்ட்ஸ்' (System prompts) என்று அழைக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு நிறுவனமான டெட்ரேட் (Tetrate) கருத்துப்படி, சிஸ்டம் ப்ராம்ப்ட்ஸ் என்பவை, எந்தவொரு பயனர் தொடர்பும் தொடங்குவதற்கு முன்பே, லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களுக்கு (LLMs) வழங்கப்படும் சிறப்பு அறிவுறுத்தல்கள் ஆகும் .
இவைகள் அவற்றின் ரோல், பிஹேவியர் மற்றும் ரெஸ்பான்ஸ் ஆகிய பண்புகளை வரையறுக்கின்றன. ஒரு முழு உரையாடல் முழுவதும் சாட்பாட்டை வழிநடத்தும் அடிப்படை சூழலை அவைகள் உருவாக்குகின்றன. அடையாளம், தொனி, பாதுகாப்பு எல்லைகள், வடிவமைப்பு, கருவி பயன்பாடு மற்றும் கொள்கை பாதுகாப்பு வரம்புகளையும் அவைகள் வரையறுக்கின்றன.
சுருக்கமாக - சிஸ்டம் ப்ராம்ப்ட்கள் ஆனது, சாட்பாட்கள் ஒட்டுமொத்தமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திறம்பட தெரிவிக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பயனர்கள், கான்வர்ஷேஷன் இன்டர்பேஸை மட்டுமே காணும் அதே வேளையில், அந்த சாட்பாட் ஆனது, அதை உருவாக்கியவர்களால் நிறுவப்பட்ட எல்லைகளுக்குள் தொடர்ந்து இயங்குகிறது.
வாஷிங்டன் போஸ்ட் ஆய்வில் கண்டறியப்பட்ட மற்ற விஷயங்கள்: முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பயன்படுத்தும், லீக் ஆன, எக்ஸ்ரராக்ட் செய்யப்பட்ட மற்றும் பொதுவில் கிடைக்கக்கூடிய சிஸ்டம் ப்ராம்ப்ட்களை ஆய்வு செய்வதன் மூலம், இந்த மறைக்கப்பட்ட வழிமுறைகள் குறித்த ஒரு பார்வையை வாஷிங்டன் போஸ்ட்டின் ஆய்வு வழங்கியது.
அரசியல் விவாதங்கள் மற்றும் பதிப்புரிமை பெற்ற கன்டென்ட்கள் முதல் உணர்ச்சிப்பூர்வமான தொனி மற்றும் பயனர் ஈடுபாடு வரை அனைத்தையும் நிர்வகிக்கும் விரிவான விதிகளை நிறுவனங்கள் உட்பொதித்துள்ளன என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டின. சில வழிமுறைகள் மிகவும் நடைமுறைக்கு உகந்ததாக தோன்றுகின்றன. மற்றவை வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்டவையாக தோன்றலாம் என்றும் இந்த ஆய்வின் முடிவு கூறுகிறது
இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்பட்ட உதாரணங்களின் படி, ஆந்த்ரோபிக்கின் கிளாட் (Claude) மென்பொருளானது, பதிப்புரிமை பெற்ற பாடல் வரிகளை மீண்டும் உருவாக்குவதை தடுப்பதை நோக்கமாக கொண்ட கடுமையான வழிமுறைகளை கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஓப்பன்ஏஐ-யின் கோடிங் அசிஸ்டென்ட் ஆனது கோடெக்ஸ் (Codex) ஆனது பயனரின் கோரிக்கைக்கு முற்றிலும் பொருத்தமானதாக இருந்தாலன்றி, கோப்லின்ஸ், ட்ரோல்கள், ரக்கூன்கள் அல்லது அதுபோன்ற உயிரினங்களை பற்றி விவாதிக்க வேண்டாம் என்று கூறும் வழிமுறைகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications