ChatGPT-க்கு போட்டியாக Siri-ஐ மாற்றிய Apple.. விசுவல் அசிஸ்டன்ட் டு மல்டி டிவைஸ் இன்டிகிரேஷன்!
ஆப்பிள் நிறுவனமானது, ஐஓஎஸ் 27 (iOS 27) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மாற்றமாக சிரி ஏஐ (Siri AI) இருக்கிறது. நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) டெக்னாலஜியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சிரி ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற ஏஐ மாடல்களுக்கு போட்டியாக பீச்சர்களை பேக் செய்துள்ளது.
கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லும் விர்ச்சுவல் அசிஸ்டன்ட்டாக (Virtual Assistant) மட்டுமல்லாமல், ஆப்பிள் யூசர்களின் தேவையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. பர்சனல் கான்டெக்ஸ்ட் அண்டர்ஸ்டாண்டிங் (Personal Context Understanding), ஆன்ஸ்கிரீன் அவர்னஸ் (Onscreen Awareness), பிராட் வேர்ல்டு நாலெட்ஜ் (Broad World Knowledge) கொண்டுள்ளது.

பர்சனல் கான்டெக்ஸ்ட் அண்டர்ஸ்டாண்டிங்:
பர்சனல் கான்டெக்ஸ்ட் அண்டர்ஸ்டாண்டிங் ஆனது யூசர்கள் ஏற்கனவே ஸ்டோர் செய்து வைத்திருக்கும் டேட்டாக்கள் மற்றும் அதுதொடர்பாக டிவைஸில் இருக்கும் டேட்டாக்கள் ஆகியவற்றை அணுகி புரிந்துகொண்டு, அதற்கேற்ப பதில்களை வழங்கும் வகையில் பில்ட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மீண்டும் மீண்டும் ஒரே பதிலை கொடுக்காமல். யூசர்கள் கேட்கும் கேள்வியின் பேக்கிரவுண்ட் அடிப்படையில் பதிலளிக்கும்.
ஆன்ஸ்கிரீன் அவர்னஸ்:
சிரி ஏஐ அப்கிரேட்டில் முக்கியமாக இந்த ஆன்ஸ்கிரீன் அவர்னஸ் இருக்கிறது. ஐபோன் மட்டுமல்லாமல், ஒரே ஆப்பிள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யப்பட்டு இருக்கும் மற்ற டிவைஸ்களின் ஸ்கிரீனையும் அலசி ஆராய்ந்து பதில்களை கொடுக்க இந்த ஆன்ஸ்கிரீன் அவர்னஸ் பயன்படுகிறது. ஸ்கிரீனில் இருக்கும் போட்டோ, டெக்ஸ்ட் உள்ளிட்ட ஆப்ஜெக்ட்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆப்கள் இன்டிகிரேஷன்:
சிஸ்டம்வைடு ஆப் ஆக்சன்கள் (Systemwide App Actions) சப்போர்ட் கொடுக்கும்படி இந்த சிரி ஏஐ இருக்கிறது. ஆகவே, சிரி ஏஐ அசிஸ்டன்ட்டை பல்வேறு ஆப்கள் மற்றும் சிஸ்டம் பீச்சர்களுடன் (System Features) ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும். அதாவது, ஒரு கேள்விக்கு பதில் சொல்வதுடன் நிற்காமல், சிஸ்டம் லெவல் கமெண்ட்களையும் மேற்கொள்ள சிரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மல்டிபிள் டிவைஸ் இன்டிகிரேஷன்:
இந்த சிரி ஏஐ அசிஸ்டன்ட்டை ஐபோன்களில் மட்டுமல்லாமல், ஐபாட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் விஷன் ப்ரோ உள்ளிட்ட டிவைஸ்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, சிரி ஏஐ அனுபவம், அதனுடைய அனைத்து டிவைஸ்களிலும் ஒரே மாதிரியாகவும், நேர்த்தியாகவும் செயல்படும். ஒரே ஆப்பிள் அக்கவுண்ட்டை வைத்து மல்டிபிள் டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
பல மொழிகளில் சப்போர்ட்:
இப்போது, சிரி ஏஐ அசிஸ்டன்ட்டை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகவே, அமெரிக்கர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இதுபோக பிரெஞ்சு, ஜாப்னீஸ், கொரியன், போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் கிடைக்க இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து கிடைக்க இருக்கிறது. இதேபோல மற்ற மொழிகளிலும் வரும்காலங்களில் பயன்படுத்த முடியும்.
தினசரி லிமிட் இருக்குமா?
ஜெமினி, சாட்ஜிபிடி போன்ற அசிஸ்டன்ட்களில் விலைக்கு ஏற்ப லிமிட் இருக்கிறது. அதேபோல ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அடிப்படையாக கொண்ட இந்த சிரி ஏஐ அசிஸ்டன்ட்டுக்கும் லிமிட் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் லிமிட் இருக்கிறது. பயன்படுத்தப்படும் பீச்சர்கள், கேள்வியின் தன்மை, சிஸ்டம் டிமாண்ட், ஆப்பிள் பாலிசி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த லிமிட் நிர்ணயிக்கப்பட இருக்கிறது.
மொத்தத்தில் சிரி ஏஐ எப்படி?
இதுவரை பயன்படுத்தப்பட்ட சிரி அசிஸ்டன்ட்டில் ரீமைண்டர், அலாரம் செட் செய்வது, கால் அல்லது சில கமெண்ட்களை செய்ய சொல்வது உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே செய்ய முடிந்தது. இப்போது, கேள்வியை புரிந்து கொள்வது, ஸ்கிரீன் டேட்டாவை அனாலைசிஸ் செய்வது, நேச்சுரல் லேங்குவேஜ் அடாப்சன் உள்ளிட்ட அப்டேட்களுடன் பல்வேறு அணுகல்களை கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
