Home
Artificial intelligence

மாதம் ரூ.1950-ஐ யாரு விடுவா? அடுத்த 1.5 ஆண்டுக்கு FREE.. ரூ.349 மற்றும் அதுக்கு மேல உள்ள Jio ரீசார்ஜ் ஆபர்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.1950 மதிப்பிலான மற்றும் ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கும் ஒரு சிறந்த இலவச சலுகையை (Best Free Offer) வழங்குகிறது.

என்ன சலுகை? அது - ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வீடியோக்கள், இமேஜ் ஜெனரேஷன் மற்றும் இதர விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா (Google Gemini AI Pro subscription) ஆகும். இது மிகவும் விலை உயர்ந்த ஏஐ சந்தாக்களில் (மாதம் ரூ.1,950) ஒன்றாகும். பட்ஜெட் வாசிகள் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு இது விலை அதிகம்.

மாதம் ரூ.1950-ஐ யாரு விடுவா? ரூ.349 மற்றும் அதுக்கு மேல Jio ஆபர்!

இருப்பினும், ஜியோ நிறுவனம், கூகுளுடன் இணைந்து இதை அனைவருக்கும் எளிமையாக கிடைக்க செய்துள்ளது. ஒருவர் தனியாக (ஜியோ ரீசார்ஜ் உதவி இல்லாமல்) கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவை வாங்கினால், மாதத்திற்கு ரூ.1950 செலவாகும். இருப்பினும், நீங்கள் இதை ஜியோவிலிருந்து பெற்றால், முற்றிலும் இலவசமாக பெறுவீர்கள்.

மேலும், ஜியோ இந்த சந்தாவை 18 மாதங்களுக்கு வழங்குகிறது. இது எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கியதிலேயே மிக சிறந்த கூடுதல் பலன் (Add-on benefit) என்று கூறலாம். 18 மாதங்கள் என்றால் - நுகர்வோருக்கு இதன் மொத்த மதிப்பு ரூ.35,100 ஆகும். இதன்கீழ் கூகுள் ஜெமினியின் சிறந்த அம்சங்களை நீங்கள் கிட்டத்தட்ட இலவசமாக பெறுகிறீர்கள். இருப்பினும், ஒவ்வொரு ஜியோ வாடிக்கையாளரும் இதை பெற தகுதியுடையவர்கள் அல்ல.

ஜியோவிலிருந்து இலவச கூகுள் ஜெமினி சந்தாவை யார் எல்லாம் பெறலாம்? தொடர்ச்சியாக 18 மாதங்களுக்கு ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்கள் மட்டுமே கூகுள் ஜெமினி சந்தாவை பெறுவார்கள். இதனுடன், தினசரி 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் திட்டங்களுடன் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி நன்மையையும் கிடைக்கிறது. இந்த சலுகை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கான கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா: பெறுவது எப்படி மற்றும் இதன்கீழ் பயனர்கள் பெறும் நன்மைகள் என்ன? ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவுடன் பயனர்களுக்கு கூகுள் ஜெமினி 3 மாடல் வழங்கப்படும். இது கூகுளின் "இதுவரை இல்லாத" மிகவும் திறன் வாய்ந்த மாடல் ஆகும். இதனுடன், ஏஐ வீடியோ டூல் ஆன வியோ 3.1 (Veo 3.1), Notebook LM (நோட்புக் எல்எம், கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) மற்றும் நானோ பனானா (Nano Banana) ஆகியவற்றுக்கான அணுகலையும் கூகுள் வழங்கும்.

இந்த சலுகையின் கீழ் ஜியோ பயனர்களுக்கு 5டிபி கிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கிறது. பயனர்களின் உற்பத்தித்திறனுக்காக இன்னும் பல அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு நபர் இந்த சலுகையை ஒரு முறை மட்டுமே பெற முடியும். இந்த சந்தாவை செயல்படுத்த, மைஜியோவிற்கு (MyJio) சென்று, பேனர் வழியாக சலுகையை தேர்ந்தெடுத்து, உங்கள் ஜிமெயில் ஐடியை உள்ளிட்டு சலுகையைப் பெறலாம்.

ரூ.199 அறிமுகம்.. ரூ.209 நீக்கம்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.199 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வேகத்தில், தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கி வந்த திட்டம் ஒன்றை அமைதியான முறையில் நீக்கியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் தனது ஆப்-ஒன்லி ரீசார்ஜ் ஆன ரூ.209 ப்ரீபெய்ட் பிளானை நீக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜியோ நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், மைஜியோ (MyJio) ஆப்பின் 'மலிவு விலை பேக்குகள்' (Affordable Packs) பிரிவில் உள்ள 'மதிப்பு திட்டங்கள்' (Value Plans) என்ற வகையின் கீழ் முன்பு கிடைத்த ரூ.209 திட்டமானது, இப்போது காணப்படவில்லை. ஆக தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோவின் ஒரே ப்ரீபெய்ட் திட்டமான ரூ.209 பேக்கை பயனர்கள் இப்போது இழந்துள்ளன.

Best Mobiles in India

English summary
Rs 1950 Month Worth Google Gemini AI Pro Subscription For Free Why Jio Users Should not Ignore this Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X