Home
Artificial intelligence

வந்துடுச்சு 2.0.. ChatGPT யூஸ் பண்றவங்கள இனி கையில பிடிக்க முடியாதே.. என்னென்ன அப்டேட்?

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது தனது நெக்ஸ்ட் ஜென்ரேஷன் இமேஜ் ஜெனெரேஷன் மாடலை () அறிமுகம் செய்துள்ளது. சாட்ஜிபிடி இமேஜ்ஸ் 2.0 (ChatGPT Images 2.0) என்று அழைக்கப்படும் இது, பயனர் உள்ளிடும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், மிகவும் துல்லியமான, பயன்படுத்தக்கூடிய மற்றும் சூழலுக்கு ஏற்ற படங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய மாடல் - அறிவுறுத்தல்களை பின்பற்றுதல், பன்மொழி ரெண்டரிங் மற்றும் பட உருவாக்கம் ஆகியவற்றில் மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவை தளமாக கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தின் கூற்றுப்படி சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 ஆனது சாட்ஜிபிடி, கோடெக்ஸ் (Codex) மற்றும் ஏபிஐ (API) முழுவதும் வெளியிடப்படுகிறது.

வந்துடுச்சு 2.0.. ChatGPT யூஸ் பண்றவங்கள இனி கையில பிடிக்க முடியாதே!

சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 அம்சங்கள், திறன்கள்: ஓப்பன்ஏஐ-யின் கூற்றுப்படி, சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 ஆனது முந்தைய தலைமுறை மாடலை விட அதிக துல்லியத்தையும் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது, இது பயனர்கள் விரிவான அறிவுறுத்தல்களுடன் நெருக்கமாக பொருந்தக்கூடிய காட்சிகளை உருவாக்க அனுமதிக்கிறது.

இது சிக்கலான அமைப்புகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் யுஐ எலிமென்ட்ஸ், டென்ஸ் டெக்ஸ்ட் மற்றும் ஸ்ட்ரக்சர்டு லேஅவுட் ஆகியவைகளும் அடங்கும், முன்னதாக இவைகள் இமேஜ் ஜெனெரேஷன் சிஸ்டம்களுக்கு சவாலாக இருந்ததாக ஏஐ நிறுவனம் ஆன ஓப்பன்ஏஐ கூறுகிறது.

பன்மொழி ஆதரவை பொறுத்தவரை ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடு உள்ளது. இது இந்தி, பெங்காலி, சீனம், ஜப்பானியம் மற்றும் கொரியன் போன்ற மொழிகளை உள்ளடக்கி, ஆங்கிலம் அல்லாத உரையை மிகவும் துல்லியமாக ரெண்டர் செய்ய முடியும். இதன் விளைவாக, மேற்கூறிய மொழிகளில் பயனர்கள் போஸ்டர்கள், வரைபடங்கள் மற்றும் இன்ஃபோகிராஃபிக்ஸ் போன்ற காட்சிகளை உருவாக்க முடியும்.

மேலும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் கூற்றுப்படி, சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 ஆனது ஒளிப்பட யதார்த்த படங்கள், சினிமா காட்சிகள், பிக்சல் கலை மற்றும் மங்கா உள்ளிட்ட பல்வேறு பாணிகளில் சிறந்த சீரான தன்மையை வழங்குகிறது. ஒளி அமைப்பு, டெக்ஸ்சர் மற்றும் பட அமைப்பு ஆகியவற்றிலும் மேம்பாடுகள் உள்ளன. இந்த சமீபத்திய இமேஜ் ஜெனெரேஷன் மாடல் ஆனது மிக அகலமான வடிவங்கள் (3:1) முதல் உயரமான லேஅவுட்கள் (1:3) வரை நெகிழ்வான விகிதாச்சாரங்களையும் ஆதரிக்கிறது.

சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 மூலம், ஓப்பன்ஏஐ நிறுவனமானது சிந்திக்கும் திறன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஓப்பன்ஏஐ-யின் விளக்கத்தின்படி, இது முன்பை விட மேம்பட்ட பகுத்தறிவு பணிகளை செய்ய இந்த மாடலை அனுமதிக்கிறது. இதை பகுத்தறிவு திறன் கொண்ட சாட்ஜிபிடி மாடலுடன் இணைக்க முடியும். இதன் மூலம், ஒரே கட்டளையின் மூலம் நிகழ்நேர தகவல்களுக்காக இணையத்தில் தேடவும், வெளியீடுகளை சரிபார்க்கவும், படங்களை உருவாக்கவும் முடியும்.

மேலும் இந்த மாடல், எழுத்துக்கள், பொருள்கள் மற்றும் பிற கூறுகளில் சீரான தன்மையை பராமரிக்கும் அதே வேளையில், ஒரே நேரத்தில் எட்டு கோஹெரென்ட் அவுட்புட்களை (eight coherent outputs) உருவாக்க முடியும் என்று ஓப்பன்ஏஐ கூறுகிறது. மேலும் இந்நிறுவனம் சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0-ஐ பரந்த அளவிலான பயன்பாட்டு சூழல்களுக்காக நிலைநிறுத்தியுள்ளது.

இதில் வடிவமைப்பு முன்மாதிரி உருவாக்கம், சந்தைப்படுத்தல் படைப்புகள், கல்விசார் உள்ளடக்கம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும். இது தகவல்களை ஒருங்கிணைக்கவும், காட்சிகளை கட்டமைக்கவும், அவற்றை தெளிவான லேஅவுட்களுடன் வழங்கவும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0-வில் பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்தாலும், இதில் சில வரம்புகளும் உள்ளன என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது. சிக்கலான புதிர்கள், ஓரிகாமி வழிமுறைகள் அல்லது சிரமமான கோணங்களில் இருந்து பார்க்கப்படும் பொருள்கள் போன்ற, மிகவும் துல்லியமான பௌதீக புரிதல் தேவைப்படும் பணிகளில் இது சிரமப்படலாம்.

மிகவும் அடர்த்தியான அல்லது திரும்ப திரும்ப வரும் காட்சி விவரங்களிலும் இது சவால்களை எதிர்கொள்ளக்கூடும். மேலும், வரைபடங்கள் அல்லது பெயரிடப்பட்ட விளக்கப்படங்கள் போன்ற வெளியீடுகளின் துல்லியத்தை கைமுறையாக சரிபார்க்க வேண்டிய சூழல்களும் ஏற்படலாம்.

சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 கிடைக்கும்தன்மை: ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 ஆனது நேற்று (ஏப்ரல் 21) முதல் சாட்ஜிபிடி மற்றும் கோடெக்ஸ் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. பகுத்தறிவின் அடிப்படையிலான திங்கிங் அம்சங்கள் (Reasoning-backed thinking features) உள்ளிட்ட மேம்பட்ட திறன்கள் ஆனது சாட்ஜிபிடிபிளஸ் (ChatGPT Plus), ப்ரோ (Pro) மற்றும் பிஸ்னஸ் (Business) சந்தாதாரர்களுக்கு கிடைக்கின்றன.

டெவலப்பர்கள், ஜிபிடி-இமேஜ்-2 ஏபிஐ மூலம் இந்த மாடலை அணுகலாம். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தின் தரம் மற்றும் தெளிவுத்திறனை பொறுத்து விலை மாறுபடும். ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் புதிய மாடல் 2கே ரெசல்யூஷன் வரையிலான வெளியீடுகளை ஆதரிப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் ஹை-ரெசல்யூஷன் வெளியீடுகள் இன்னும் பீட்டா கட்டத்தில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OpenAI Released New ChatGPT Images 2.0 Check Out Features Capabilities Availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X