வச்சான் பாரு ChatGPT.. சைலெண்ட்டா வந்த சீக்ரெட் பீச்சர்.. ஒரே டச் போதும்.. AI கொடுக்கும் பதில் மாறலாம்!
செயற்கை நுண்ணறிவு உலகில் முன்னணி நிறுவனமா இருக்கும் ஓப்பன்ஏஐ (OpenAI) ஆனது சாட்ஜிபிடி (ChatGPT) யூசர்களுக்கு புதிய மற்றும் சுவாரஸ்யமான பீச்சரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பீச்சர் வெளிப்படையாக எங்கும் காட்டப்படாததால், பல யூசர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சாட்ஜிபிடியை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பீச்சராக இருக்கும்.
சாட்ஜிபிடியில் பல்வேறு அப்டேட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது, புதிய அப்டேட்டின் கீழ், சாட்ஜிபிடி மொபைல் ஆப்பில் புதிய சீக்ரெட் பீச்சர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. செண்ட் (Send) பட்டனை லாங் பிரஸ் (Long Press) செய்தால் போதும், ஒரு சீக்ரெட் மெனு தோன்றும். இந்த மெனுவின் மூலம், யூசர்கள் அவர்களது ப்ராம்ப்ட்களில் தரத்தை மேம்படுத்த முடியும்.

அதாவது, ப்ராம்ப்ட்களுக்கு எவ்வளவு ஆழமாக சிந்தித்து சாட்ஜிபிடி பதிலளிக்க வேண்டும் என்பதை யூசர்கள் முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ள முடியும். இது யூசர்களின் சந்தாவுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதேபோல அப்டேட்டில் கொடுக்கப்பட்டு வருவதால், பல யூசர்களுக்கு கிடைக்காமலும் இருக்கலாம். கிடைக்கும் யூசர்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
ஆகவே, சந்தாவை (Subscription) பொறுத்து, இன்ஸ்டன்ட் (Instant), திங்கிங் (Thinking) மற்றும் எக்ஸ்டெண்டெட் (Extended) ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் இன்ஸ்டன்ட் ஆப்ஷனில் மிக வேகமாக பதில்கள் கிடைக்கும். எளிய கேள்விகள், உடனடியாக கிடைக்க கூடிய தகவல்கள் மற்றும் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் இதில் கிடைக்கும்
திங்கிங் ஆப்ஷனில் கேள்விகளுக்கு சற்று கூடுதலாக பகுப்பாய்வு செய்யப்பட்டு பதில்கள் வழங்கப்படும். சிக்கலான கேள்விகளுக்கு இது உதவியாக இருக்கும். மேலும், எக்ஸ்டெண்டெட் ஆப்ஷனில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு விரிவான விளக்கங்கள் மற்றும் பாகுப்பாய்வுகளுடன் பதில்கள் வழங்கப்படும். ஆராய்ச்சி, தொழில்நுட்ப விவரங்கள் ஆகியவற்றுக்கு இந்த விருப்பம் சரியாக இருக்கும்.
ஆகவே, மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையில் இந்த ஆப்ஷன்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த பீச்சரை எனபில் செய்து வைக்க யூசர்கள் செட்டிங்ஸ் செல்ல வேண்டியிருந்தது. இப்போது, செண்ட் (Send) பட்டனையே நீண்ட நேரம் அழுத்தி விரைவாக மாற்ற முடிகிறது. இதனால், யூசர் எக்ஸ்பிரீயன்ஸ் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இதனுடன், ஓப்பன்ஏஐ நிறுவனம் மற்றொரு புதிய அப்கிரேடையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது சாட்ஜிபிடியின் வெப் வெர்ஷனில் (Web Version) கிடைக்கிறது. இது ஒரே சாட்டில் பல்வேறு பதிகளை பெறும் யூசர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேபிள் ஆப் கன்டென்ட்கள் (Table of Contents) என்று இது அழைக்கப்படுகிறது. இது நேவிகேஷன் (Navigation) போல வேலை செய்கிறது.
அதாவது, ஒரு சாட்டில் குறைந்தபட்சம் ஐந்து பதில்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பதில்கள் இருந்தால், தானாகவே இந்த பீச்சர் தோன்றிவிடும். இதன் மூலம் யூசர்கள் முழு பதில்களையும் மேலிருந்து கீழே ஸ்க்ரோல் செய்து பார்க்க வேண்டியது கிடையாது. தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்லும்படி நேவிகேஷன் செய்து கொள்ள முடியும்.
இப்படி அதிக பதில்களை கொண்ட சாட்டின் வலது பக்கத்தில் நேவிகேஷன் ஐகான் தோன்றும். இதை கிளிக் செய்தால், சாட்டின் முக்கிய தலைப்புகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும். இதில் யூசர்கள் பார்க்க வேண்டிய தலைப்பை தேர்வு செய்து உடனடியாக அந்த பதில்கள் அல்லது பகுதிக்கு செல்ல முடியும். சாட்ஜிபிடியில் நீண்ட சாட்கள் செய்யப்படுவதால், இந்த பீச்சர் கொண்டுவரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications