iOS 27 அப்டேட் செப்டம்பர் 14-ல் வெளியீடு: Siri AI முதல் புதிய பீச்சர்கள் வரை என்னென்ன கிடைக்கும்?
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் (iPhone 18 Pro) மாடல்களின் அறிமுக நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக ஆப்பிள் யூசர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஐஓஎஸ் 27 (iOS 27), ஐபாட்ஓஎஸ் 27 (iPadOS 27) மற்றும் வாட்ச்ஓஎஸ் 17 (watchOS 27) வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்கள் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் யூசர்களுக்கு கிடைக்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற WWDC 2026 நிகழ்வில் ஐஓஎஸ் 27 மற்றும் ஐபாட்ஓஎஸ் 27 ஆகியவற்றை முதன்முதலில் அறிமுகம் செய்தது. இதன் முக்கிய பீச்சர்கள் அதில் குறிப்பிடப்பட்டது. பிறகு பல மாதங்களாக பீட்டா டெஸ்டிங் (Beta Testing) செய்யப்பட்டு வந்தது.

இப்போது, யூசர்களுக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த ஐஓஎஸ் 27 வெர்ஷனில் மிகப்பெரிய அப்கிரேடாக சிரி ஏஐ (Siri AI) அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஆப்பிளின் டிஜிட்டல் அசிஸ்டென்ட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய அப்கிரேட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சிரி ஏஐ மூலம் யூசர்கள் மிகவும் சிக்கலான கேள்விகளையும் கேட்க முடியும்.
சிரி ஏஐ-க்கு தேவையான ஏஐ மாடல்களை ரன் செய்வதற்கான தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளது. குறிப்பாக ஜெமின் போன்ற மாடல்களை பயன்படுத்தி சிரி ஏஐ-க்கு தேவையான அல்காரிதம்கள் டெஸ்டிங் செய்யப்ப்பட்டு உள்ளன. இதனால், ஜெமினியில் பார்த்த அப்கிரேட்கள் சிரியிலும் கிடைக்கலாம்.
Siri AI கிடைக்கும் மாடல்கள்?
இந்த சிரி ஏஐ மாடலை பழைய மாடல்களில் பெற முடியாது. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆகிய மாடல்களில் இருந்து சிரி ஏஐ வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் ஐபோன் ஏர் (iPhone Air) ஆகிய புதிய மாடல்களிலும் இந்த சிரி ஏஐ கிடைக்கும்.
மேலும், சமீபத்தில் வெழியான ஐபேட் மினி (iPad Mini) மாடலில் பெறலாம். எம்1 சிப் அல்லது அதற்கு மேற்பட்ட சிப் கொண்ட ஐபேட் ஏர் (iPad Air) மற்றும் ஐபேட் ப்ரோ (iPad Pro) மாடல்களிலும் Siri AI வழங்கப்பட உள்ளது. புதிய iPhone மாடல்களில் அதிக சக்தி வாய்ந்த On-Device AI மாடல் பயன்படுத்தப்படுவதால், Speech Recognition மற்றும் Dictation போன்ற பீச்சர்கள் கிடைக்கும்.
iOS 27-ல் என்னென்ன மாற்றங்கள்?
ஆப்பிள் அறிமுகப்படுத்திய Liquid Glass Design Language அணுகல் கிடைக்கும். புதிய Child Safety Features அறிமுகப்படுத்தப்படுகின்றன. iPhone மற்றும் iPad சாதனங்களுக்கு மட்டுமின்றி Apple Watch யூசர்களுக்கும் புதிய watchOS 27 அப்டேட் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. மேக் மாடல்களுக்கான macOS 27 Golden Gate அப்டேட்டும் வெளியிடப்படுகிறது.
செப்டம்பர் 14 முதல் அப்டேட் செய்யலாம்?
iOS 27, iPadOS 27, watchOS 27 மற்றும் macOS 27 Golden Gate ஆகிய ஓஎஸ் அப்டேட்களும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் கிடைக்கும். புதிய Software Update Notification வந்ததும் யூசர்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் ஐபோன் டியோ போன்ற புதிய மாடல்களில் எந்த அப்டேட்டும் தேவையில்லை.


Click it and Unblock the Notifications
