Home
Artificial intelligence

ரயில் டிக்கெட் புக்கிங்.. இனி அந்த பிரச்சினையே இருக்காது.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்!

இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் நவீனத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குத் தகுந்தபடி இந்திய ரயில்வே துறை பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது.

அந்த வகையில் 40 ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் PRS - Passenger Reservation System எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பினை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரயில் டிக்கெட் புக்கிங்.. இனி அந்த பிரச்சினையே இருக்காது..

செயற்கை நுண்ணறிவு (AI)

அதன்படி பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்ட பழைய பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) இப்போது முழுமையாக மேம்படுத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட உள்ளது. ஆகவே இனி இந்த முன்பதிவு வசதி வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் முன்பதிவு அனுபவமே புதிய பரிமாணத்தை எட்டும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

குறிப்பாக 1986-ம் ஆண்டு அறிமுகமான இந்த முன்பதிவு முறை, இடைப்பட்ட காலங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப முழுமையான மாற்றம் அவசியமான நிலை ஏற்பட்டது. அதுவும் ஆன்லைன் முன்பதிவின் அதிகரிப்பு இந்த அமைப்பின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதாவது தற்போது நாட்டில் சுமார் 88 சதவீதம் டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாக தான் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் பீக் ஹவர் நேரங்களில் சர்வர் மெதுவாக செயல்படுவது, பயணிகளுக்கு நேரடி தகவல் கிடைக்காதது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

எனவே இந்த சவால்களுக்கு தீர்வாக புதிய ஏஐ (AI) அடிப்படையிலான முன்பதிவு முறை அறிமுகமாக உள்ளது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், டிக்கெட் கன்ஃபர்மேஷன் கணிப்பு வசதி தான். அதாவது முந்தைய முன்பதிவு தரவுகள் மற்றும் பயணப் பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உறுதியாகும் வாய்ப்பை ஏஐ (AI) கணிக்கும். அதுவும் இந்த கனிப்பின் துல்லியம் 94 சதவீதம் வரை இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுதவிர டிக்கெட் முன்பதிவின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் சர்வர் அழுத்தம் குறைந்து, டிக்கெட் மோசடிகள் மற்றும் சட்டவிரோத மென்பொருள் பயன்பாடுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். மேலும் இந்த புதிய மாற்றம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் புக்கிங்.. இனி அந்த பிரச்சினையே இருக்காது..

அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Rail one செயலியை பயன்படுத்தி தான் மக்கள் அதிகம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதுவரை 3.5 கோடி பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரயில்வே துறை சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் இந்த செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

அதுவும் ரயில் ஒன் செயலியை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது, டிக்கெட் ரத்து செய்வது, ரயில் லைவ் ஸ்டேட்டஸ் தகவல்கள், புகார் தருவது, உணவு ஆர்டர் செய்வது என அனைத்தும் செய்து கொள்ள முடியும். . எனவே தான் அதிக மக்கள் தற்போது இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.

Best Mobiles in India

English summary
Indian Railways Revamps 40-Year-Old Reservation System With AI Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X