Google கிட்ட முடியுமா.. 70+ மொழிகள்.. ரியல்-டைம் டிரான்ஸ்லேஷன்.. Gemini 3.5 ஆடியோ மாடல் அறிமுகம்!
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் (Google) நிறுவனம் ஆனது 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரியல்-டைம் ஸ்பீச்-டு-ஸ்பீச் டிரான்ஸ்லேஷன் (Real-time Speech-to-speech Translation) கொடுக்கும்படியான ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட் (Gemini 3.5 Live Translate) ஆடியோ மாடலை களமிறக்கி இருக்கிறது.
முன்னதாக வெளியான மாடல்களைவிட மொழிகளை அதிகமாக பகுப்பாய்வு செய்து அவுட்புட் கொடுக்கும்படி இந்த ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட் மாடல் இருக்கப் போகிறது. ஏனென்றால், 70+ மொழிகளை தானாகவே கண்டறிந்து, பேசுபவரின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கம், வேகம் மற்றும் பிட்ச் (pitch) ஆகியவற்றின் அடிப்படையில் டிரான்ஸ்லேட் செய்து கொடுக்கிறது.

பேசுபவர், பேசி முடிக்கும் வரை காத்திருந்து பதிலளிக்கும் வழக்கமான மாடலை போலல்லாமல், ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட் மாடல் தொடர்ந்து டிரான்ஸ்லேட் செய்து கன்டென்ட்டை உருவாக்குகிறது. ரியல்-டைமில் டிரான்ஸ்லேட் செய்து கொடுப்பதால், இருவர் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் எந்தவித தாமதமும் இல்லாமல், உடனுக்குடன் டிரான்ஸ்லேட் செய்யலாம்.
குரல் மற்றும் உச்சரிப்பை மிக துல்லியமாக பகுப்பாய்வு செய்யும்படி இந்த ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட் மாடல் பில்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெவ்வேறு பகுதிகள், நகரங்கள், நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் குரல் மற்றும் உச்சரிப்பை சரியாக புரிந்துகொண்டு, டிரான்ஸ்லேட் செய்து கொடுக்கும். இதனால், துல்லியமான டிரான்ஸ்லேட் கிடைக்கும்.
ஆகவே, பேசும் சூழலுக்கு ஏற்பவும் டிரான்ஸ்லேட் இருக்கும். ஆப்லைன் சப்போர்ட் மற்றும் மல்டி-லேங்குவேஜ் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. லைவ் டிரான்ஸ்லேட்டில் பெரும்பாலும் இன்டர்நெட் முக்கியமாக இருக்கிறது. ஆனால், இந்த இந்த ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட் மாடல் ஆஃப்லைனிலும் டிரான்ஸ்லேட் செய்யும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட மொழியை டவுன்லோட் செய்து பயன்படுத்தும்படி இருக்கிறது. ஆகவே, லேங்குவேஜ் பேக்ஸ் (Language Packs) முன்கூட்டியே டவுன்லோட் செய்யப்பட வேண்டும். இதுவொரு சிஸ்டம் இன்டிகிரேஷன் மாடலாக இருக்கிறது. ஆகவே, வெறும் ஆப்பாக மட்டுமல்லாமல், டிவைஸ் முழுக்க பயன்படுத்தி கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் வைத்திருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் உள்பட மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்டிகிரேஷன் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், வீடியோ கால்கள் உள்ளிட்டவற்றை டிரான்ஸ்லேட் செய்து கொள்ள முடியும். இருப்பினும், இது படிப்படியாக டிவைஸ்களுக்கு கிடைக்க இருக்கிறது. முதலில், கூகுள் மீட்டில் (Google Meet) வர இருக்கிறது.
இந்த ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட் மாடலை முதலில் கூகுள் மீட் ஆப்பில் இன்டிகிரேஷன் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆகவே, வீடியோ கால்களில் எந்த மொழியில் இருந்தும் டிரான்ஸ்லேட் செய்து கொள்ள முடியும். அதாவது, வீடியோ காலின் போது, எதிரே இருக்கும் நபர் ஆங்கிலத்தில் பேசினால், அதை அப்படி தமிழில் கேட்கும்படி டிரான்ஸ்லேட் செய்யலாம்.
ஆகவே, கேட்பவருக்கு தமிழில் மட்டுமே கேட்கும். இது முன்பு 5 மொழிகளில் மட்டுமே கிடைத்து. இனிமேல் 70+ மொழிகளில் கிடைக்க இருக்கிறது. இது ஒன்-டு-ஒன் மொழியாக இருக்காது. கேட்பவர் தங்களுக்கு விருப்பான மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஆனால், தனியாக டிவைஸ் இருந்தால் போதும். இந்த கூகுள் மீட் இன்டிகிரேஷன் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் கிடைக்கும் கூகுள் டிரான்ஸ்லேட்டில் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு உள்ளது. கூகுள் லைவ் ஆப் (Gemini Live API) மற்றும் கூகுள் ஏஐ ஸ்டூடியோ (Google AI Studio) ஆகியவற்றில் இன்டிகிரேஷன் கிடைக்கும். இப்போதைக்கு டெவலப்பர்களுக்கு கிடைக்க இருக்கிறது. விரைவில் ஒட்டுமொத்த கூகுள் யூசர்களுக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications