Android Auto-வில் முரட்டு அப்டேட்.. உங்கள் ஜிமெயில், மேப்ஸ் இன்டிகிரேஷனுடன் Gemini பெர்சனல் இன்டெலிஜென்ஸ்!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google), தனது ஜெமினி (Gemini) அசிஸ்டன்ட்டை ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் கூகுள் பில்ட்-இன் (Google built-in) கொண்ட கார்களில் உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், பெர்சனல் இன்டெலிஜென்ஸ் (Personal Intelligence) தொழில்நுட்பத்தையும் கார் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக நிறுவனம் வெளியிட தொடங்கியுள்ளது.
இந்த பெர்சனல் இன்டெலிஜென்ஸ் வசதியானது முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) யூசர்களுக்கு இன்றிலிருந்து பயன்பாட்டிற்கு வருகிறது. மேலும், வரும் மாதங்களில் கூகுள் பில்ட்-இன் (Google built-in) வசதி கொண்ட நவீன கார்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. யூசர்களின் அனுமதியுடன் மட்டுமே இந்த பெர்சனல் இன்டெலிஜென்ஸ்

இது கூகுள் ஒர்க்ஸ்பேஸ் (Google Workspace) சேவைகளான ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் காலண்டர் (Google Calendar) ஆகியவற்றுடன், கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் மேப்ஸ் (Google Maps), யூடியூப் (YouTube) மற்றும் சர்ச் (Search) ஆகிய ஆப்களில் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைக்கிறது. ஆகவே, இந்த தகவல்களை அணுக அனுமதி கொடுக்கப்பட்டால் மட்டுமே அது செயல்படும்படி பில்ட் செய்யப்பட்டு உள்ளது.
யூசர்களின் இமெயில் (Email), போட்டோஸ் (Photos) மற்றும் கூகுள் மேப்ஸ் (Google Maps) ஆப்களில் சேமிக்கப்பட்ட இடங்களிலிருந்து துல்லியமான விவரங்களை இதனால் எளிதில் கண்டறிய முடியும். வாகன ஓட்டிகள் அதிக விளக்கங்களை கொடுக்காமலேயே, இயல்பான வாய்ஸ் இன்டராக்ஷன் (Voice Interaction) எனப்படும் குரல் வழி உரையாடல் மூலம் பயணத்தின்போதே சந்தேகங்களுக்கான பதில்களையும் பெற்று கொள்ளலாம்.
வாகன ஓட்டிகள் இந்த பெர்சனல் இன்டெலிஜென்ஸ் வசதியை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கும் கூகுள் நிறுவனமானது, சில உதாரணங்களை வழங்கியுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் பிளைட் கேட் (Flight Gate) எண் மற்றும் விமானம் சரியான நேரத்திற்கு வருகிறதா என்பதை இமெயிலுக்கு செல்லாமலேயே ஜெமினியிடம் மட்டுமே கேட்டு நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.

புதிய ஊர்களுக்கு பயணம் செய்யும்போது, வழியில் நமது உணவு விருப்பத்திற்கு ஏற்ற சைவ ரெஸ்டாரண்ட் (Restaurant) போன்ற உணவகங்களை கண்டறிய ஜெமினி (Gemini) உதவுகிறது. மேலும், மருத்துவரின் அப்பாயின்ட்மென்ட் (Appointment) முகவரியை நினைவில் வைத்து தேட வேண்டிய அவசியமின்றி, நேரடியாக அந்த இடத்திற்கு நேவிகேஷன் (Navigation) வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டு கொள்ள முடியும்.
கடந்த வாரம் எடுத்த போட்டோவில் உள்ள கார் வாஷ் (Car Wash) நிலையத்தை கண்டறிந்து, அங்குச் செல்ல வழியை கேட்டு பெற்று கொள்ளலாம். இதற்காக போட்டோ கேலரிக்கு சென்று அதை தேட வேண்டிய அவசியமில்லை. அதேபோல, முந்தைய நாள் சாட்டிங்கில் பேசிய காபி ஷாப் (Coffee Shop) குறித்த தகவல்களை மீட்டெடுத்து, ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மூலம் வழிகாட்டவும் சொல்லலாம்.
பிரைவசி (Privacy) எனப்படும் தனியுரிமையை பாதுகாக்க, ஜெமினி செட்டிங்ஸ் (Gemini Settings) வழியாக இந்த வசதியை எப்போது வேண்டுமானாலும் எளிதாக ஆஃப் (Off) செய்துகொள்ளும் முழு கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூகுள் பில்ட்-இன் (Google built-in) கார்களில் யூசர்களின் ஸ்மார்ட்போன் (Smartphone) காருடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும்.
இந்த பெர்சனல் இன்டெலிஜென்ஸ் வசதியை இயக்காமல் இருந்தாலும், காரில் நேவிகேஷன் பயன்படுத்துவது, மியூசிக் கேட்பது, கேள்விகள் கேட்பது மற்றும் போன் கால்ஸ் செய்வது போன்ற அடிப்படைச் சேவைகளைத் தடையின்றி எப்போதும்போல பயன்படுத்தலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால், ஆண்ட்ராய்டு ஆட்டோ வழங்கும் பதில்கள் தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்காது.
18 வயது நிரம்பிய தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட் (Google Account) வைத்திருக்கும் யூசர்களுக்கு மட்டுமே இந்த புதிய வசதி கிடைக்கும். பிசினஸ் (Business), என்டர்பிரைஸ் (Enterprise) மற்றும் எஜுகேஷன் (Education) அக்கவுண்ட்களுக்கு கிடைக்காது. யுனைடெட் கிங்டம் (United Kingdom), சுவிட்சர்லாந்து (Switzerland), நைஜீரியா (Nigeria) மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படவில்லை.
ஆகவே, தங்களது ஜெமினி ஆப்பில் பெர்சனல் இன்டெலிஜென்ஸ் வசதியை செயல்படுத்தியவர்கள், காரில் அதனை உடனடியாக பயன்படுத்த தொடங்கலாம். இது புதிதாக ஒன்றும் இல்லை. ஸ்மார்ட்போனின் ஈமெயில், போட்டோஸ் போன்ற ஆப்களை திறக்காமல், ஜெமினி மூலமே அதை அணுகுவதை போல காரில் இருக்கும் ஆண்ட்ராய்டு ஆட்டோ டிஸ்பிளேவில் அதை செய்ய அனுமதி கொடுக்கும் வசதியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
