Home
Artificial intelligence

சல்யூட் சுந்தர் சார்.. 2GB ரேம் என்ட்ரி-லெவல் போனிற்கும் கூட இனி AI அம்சங்கள்.. Google Gemini ஆட்டமே இனிதான்!

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் ஆனது ஏஐ (AI) அம்சங்கள் ஆனது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம், ஆண்ட்ராய்டு கோ (Android Go) ஸ்மார்ட்போன்களில் ஜெமினி கோ-வை (Gemini Go) அதிகாரப்பூர்வமாக வெளியிட தொடங்கியுள்ளது.

என்ட்ரி லெவல் போன்களில் ஜெமினி ஏஐ: ஜெமினி கோ வெளியீட்டின் மூலம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான என்ட்ரி லெவல் போன்களுக்கு (Entry Level Phones), கூகுள் நிறுவனம் அதன் ஏஐ அசிஸ்டென்ட்டை கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை கூகுளின் செயற்கை நுண்ணறிவு உத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.

2GB ரேம் என்ட்ரி-லெவல் போனிற்கும் கூட இனி AI அம்சங்கள்!

சமீப காலம் வரை, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அனுபவங்கள், சக்திவாய்ந்த சிப்கள் மற்றும் அதிக அளவு ஸ்டோரேஜ் கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் ஜெமினி கோ அறிமுகத்தின் மூலம், பட்ஜெட் விலை ஆண்ட்ராய்டு பயனர்கள் கூட இப்போது கூகுளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏஐ அசிஸ்டென்ட்டை பயன்படுத்த முடியும்.

குறைந்தபட்சம் 2ஜிபி ரேம்: கூகுளின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் 2ஜிபி ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு கோ போன்களில் ஜெமினி கோ இப்போது கிடைக்க தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு கோ என்பது கூகுளின் லைட்வெயிட் ஆன ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Lightweight version of Android) ஆகும்.

இது குறிப்பாக மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இவை வளரும் சந்தைகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஜெமினி கோ வழியாக முக்கிய ஏஐ அசிஸ்டென்ட் செயல்பாடுகள் அணுக கிடைத்தாலும் கூட, குறைந்த திறன் கொண்ட ஹார்ட்வேர்களில் சீரான செயல்திறனை உறுதி செய்வதற்காக கூகுள் சில சமரசங்களையும் செய்துள்ளது. அதாவது ஜெமினி கோ சில அம்சங்களை ஆதரிக்கிறது மற்றும் சில அம்சங்களை ஆதரிக்கவில்லை:

ஜெமினி கோ என்னென்ன அம்சங்களை ஆதரிக்கிறது?
1. ஏஐ அடிப்படையிலான டெக்ஸ்ட் அசிஸ்டென்ஸ்
2. கேள்விகளுக்கு பதிலளித்தல்
3. எழுதுவதற்கான உதவி
4. அடிப்படை உற்பத்தித்திறன் அம்சங்கள்
5. ஜெமினி வழியாக கான்வர்ஷேஷனல் இன்டராசக்ஷன்கள்

ஜெமினி கோ என்னென்ன அம்சங்களை ஆதரிக்கவில்லை?
- ஜெமினி லைவ் இல்லை
- ஏஐ இமேஜ் ஜெனரேஷன் இல்லை
- மேம்பட்ட பல்வகை திறன்கள் இல்லை (advanced multimodal capabilities)
- பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் பிரீமியம் செயற்கை நுண்ணறிவு அனுபவங்கள் இல்லை

கிஸ்பாட்டின் கருத்து: ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் போன்களுக்கு ஜெமினி கோ ஏன் முக்கியம்? ஜெமினி கோவின் அறிமுகம், மேலோட்டமாக பார்ப்பதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்கு, குறிப்பாக மலிவு விலை ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்களுக்கு, கூகுளின் ஜெமினி ஏஐ சூழலுடன் இதுவே அவர்களின் முதல் நேரடி அனுபவமாக இருக்கும்.

வளரும் சந்தைகளில் உள்ள பல பயனர்கள், மலிவு விலை காரணமாக ஆண்ட்ராய்டு கோ போன்களையே நம்பியுள்ளனர். இதனால், ஜெமினி கோ வெளியீடு ஆனது ஏஐ அணுகலுக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. ஏஐ-ஐ விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, கூகுள் நிறுவனமானது பயனர்களின் ஸ்மார்ட்போனை பொருட்படுத்தாமல், அத்தியாவசியமான ஏஐ டூல்களை அவர்களுக்கு கொண்டு வந்துள்ளது - உண்மையிலேயே சல்யூட் அடிக்கக்கூடிய ஒரு காரியம் தான்!

குறிப்பாக - கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஏஐ திறன்களை பிரீமியம் விற்பனை அம்சங்களாக பெரிதும் முன்னிறுத்தி வரும் இந்த நேரத்தில் ஜெமினி கோ வருவது இன்னும் சிறப்பு. சுருக்கமாக ஜெமினி கோ-வை அறிமுகப்படுத்துவதன் மூலம், கூகுள்நிறுவனமானது ஏஐ அணுகலை ஜனநாயகப்படுத்ததும் முதல் படியை எடுத்துவைத்துள்ளது!

Best Mobiles in India

English summary
oogle Launched Gemini Go For Android Go Entry Level Phones What You Will get Why Its Matters
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X