Google ஒரே போடு.. இனி வீடியோ எடிட்டிங் ஈஸி.. புது Omni மாடல் அறிமுகம்.. சும்மா சொன்ன போதும்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணியில் இருக்கும் கூகுள் (Google) நிறுவனம், தனது புதிய தொழில்நுட்ப புரட்சியாக ஜெமினி ஓம்னி (Gemini Omni) என்ற ஏஐ மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுளின் டீப்மைண்ட் (DeepMind) பிரிவால் உருவாக்கப்பட்ட இந்த மாடல், யூசர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓம்னி ஃபேமிலியில் முதல் மாடலாக இந்த ஜெமினி ஓம்னி ஃபிளாஷ் (Gemini Omni Flash) களமிறங்கி இருக்கிறது. ஜெமினி ஆப் (Gemini App), கூகுள் ஃப்ளோவ் (Google Flow) மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) ஆகியவற்றில் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு உள்ளது. வீடியோ ஜெனரேஷன் மாடலாக இருந்தாலும், எந்தவொரு இன்புட் வழியாகவும் வீடியோக்களை ஜெனரேட் செய்ய முடியும்.

எதையும் எதிலிருந்தும் உருவாக்கலாம்:
ஜெமினி ஓம்னி மாடலானது, மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், டெக்ஸ்ட் (Text), இமேஜ்கள் (Images), ஆடியோ (Audio) மற்றும் வீடியோ (Video) போன்ற எந்தவொரு உள்ளீடு (Input) வழியாகவும், உயர்தரமான வீடியோக்களை உருவாக்க முடியும். கூகுளின் உலகளாவிய அறிவுத்திறனுடன் (Real world knowledge), இயற்பியல் விதிகள் (Physics) ஒருகிணைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக கலாச்சார பின்னணிகளை புரிந்து கொண்டு துல்லியமான வீடியோக்களை இது உருவாக்குகிறது. ஒவ்வொரு நாடுகளின் கலாச்சார பின்னணிகளுக்கு ஏற்ப வீடியோக்களை ஜெனரேஷன் செய்ய முடியும். ஆகவே, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களை ஜெனரேஷன் செய்வதில் இருந்து ஓம்னி மாடல் விலகி இருக்கும் என்பது தெரிகிறது.
உரையாடல் மூலமாகவே வீடியோக்களை எடிட் செய்யலாம்:
எளிதில் புரிந்து கொள்ள முடியாத வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்களுக்கு (Software) மாற்றாக, இந்த ஓம்னி மாடல் இருக்கிறது. இயல்பாக பேசுவது போன்ற உரையாடல்கள் (Natural Language) மூலமாகவே வீடியோக்களை எடிட் செய்யும் பீச்சரும் இதில் இருக்கிறது. யூசர்கள் கொடுக்கும் ஒவ்வொரு அறிவுறுத்தலையும் (Instruction) புரிந்து கொண்டு வீடியோ ஜெனரேஷன் (Video Generation) செய்கிறது.
ஆகவே, வீடியோக்களின் தொடர்ச்சி மாறாமல், கதாபாத்திரங்களின் வடிவம் மாறாமல், பேக்கிரவுண்ட் மாறாமல் துல்லியமாக ஒரு வீடியோவை எடிட் செய்து கொடுக்கும். உதாரணமாக, நாம் எடுத்த ஒரு சாதாரண வீடியோவில் புதிய கதாபாத்திரங்களை சேர்க்கவோ அல்லது ஒட்டுமொத்த சூழலையே மாற்றவோ இதனிடம் எளிதாக உரையாடல் போல சொல்லி ஜெனரேட் செய்யலாம்.
ஸ்டைல், மோஷன் & எபெக்ட்கள்: யூசர்கள் ஜெனரேட் செய்ய இருக்கும் வீடியோக்களின் ஸ்டைல், மோஷன் அல்லது என்னென்ன எபெக்ட்கள் வேண்டும் என்பதை சாதாரணமாக வாய் மொழியில் பேசினால் போதும், இதை டீகோடிங் செய்து, யூசர்களின் எண்ணத்தில் இருப்பதை அவுட்புட்டாக கொண்டுவரும்படி இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஜெமினி ஓம்னி ஃப்ளாஷ் (Gemini Omni Flash) மாடலை ஜெமினி ஆப் (Gemini App), கூகுள் ஃப்ளோவ் (Google Flow) மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) ஆகிய ஆப்களில் பயன்படுததி கொள்ள முடியும். ஆனால், கூகுள் ஏஐ பிளஸ் (Google AI Plus), ப்ரோ (Pro) மற்றும் அல்ட்ரா (Ultra) சந்தாவை வைத்துள்ள யூசர்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்க இருக்கிறது. இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். வீடியோ ஜெனரேஷனில் அடுத்த லெவலுக்கு கூகுள் நிறுவனம் சென்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications