Home
Artificial intelligence

Gmail இன்பாக்ஸ்-ல் முக்கிய மாற்றம்.. இனி எடுத்ததும் இமெயில் படிக்க முடியாது.. Google-ன் அடேங்கப்பா AI அப்டேட்!

கூகுள் (Google) நிறுவனம் ஆனது தனது ஜிமெயில் ஆப்பில் (Gmail App) உள்ள நேவிகேஷன் பாரில் (Navigation Bar) ஒரு புதிய ஏஐ இன்பாக்ஸை (AI Inbox) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

9டூ5கூகுள் (9to5Google) வழியாக கிடைத்துள்ள அறிக்கையின்படி, இந்த புதிய அம்சம் ஏஐ-பவர்டு டாஸ்க் மேனேஜ்மென்ட்டிற்கு (AI-powered task management) நேரடி அணுகலை வழங்குகிறது. இந்த அம்சம், ஜிமெயிலின் கவனத்தை பாரம்பரியமான மெசேஜ்-பர்ஸ்ட் அமைப்பிலிருந்து டாஸ்க்-பர்ஸ்ட் அணுகுமுறைக்கு மாற்றுகிறது, இது பயனர்கள் இமெயில்களை அதிகம் பார்ப்பதை விட, அவர்கள் செய்ய வேண்டிய செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க அனுமதிக்கிறது.

Gmail-ல் இனி எடுத்ததும் இமெயில் படிக்க முடியாது.. Google AI அப்டேட்!

ஏஐ இன்பாக்ஸ் ஆனது பாட்டம் பாரில் உள்ள மெயில் (Mail), சாட் (Chat) மற்றும் மீட் (Meet) ஆகியவற்றுடன் வைக்கப்பட்டுள்ளது. இதை திறக்கும்போது, ​​டெஸ்க்டாப் அனுபவத்தை போலவே, செய்ய வேண்டியவை மற்றும் தெரிந்துகொள்ள வேண்டியவை என்கிற தலைப்புகளின் சுருக்கத்தை பார்க்க முடியும். அதாவது இமெயில்களின் பட்டியலை காண்பிப்பதற்கு பதிலாக, ஜிமெயில் இன்பாக்ஸ் ஆனது பயனர்கள் செய்யக்கூடிய பணிகள் மற்றும் அது தொடர்பான சுருக்கங்களை (Summaries) முன்னிலைப்படுத்துகிறது; தேவையற்றவற்றை நீக்கி, உற்பத்தித்திறனையும் சீரமைக்கிறது.

ஏஐ இன்பாக்ஸ்-ன் முக்கிய அம்சங்கள்:
- பரிந்துரைக்கப்பட்ட செய்ய வேண்டியவைகள் (Suggested To-Dos): ஏஐ ஆனது இமெயில்களில் இருந்து நேரடியாக பணிகளை வெளிக்கொணர்வதால், அவைகளை கைமுறையாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
- தெரிந்துகொள்ள வேண்டிய தலைப்புகள் (Topics to Catch Up On): உரையாடல்கள் மற்றும் பல்வேறு த்ரெட்களில் உள்ள அப்டேட்களை சுருக்கமாக காட்டும்.

- எனக்ஹெல்ப் மீ டூ ரைட் ஒருங்கிணைப்பு (Help Me Write Integration): டிராஃப்ட்கள் இப்போது கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயிலிலிருந்து விவரங்களை பெற்று, தொடர்புடைய தகவல்களை தானாகவே சேர்க்கும்
- டோன் மேட்சிங் (Tone Matching): முந்தைய இமெயில்களின் பாணியுடன் பொருந்துமாறு டிராஃப்ட்களை திருத்தியமைக்கலாம், இது நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.

பொதுவான வொர்க்ஃப்ளோவை (common workflow) எளிதாக்குவதற்காகவே ஏஐ இன்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூறுகிறது: அதாவது
- வாடிக்கையாளர் விசாரணைகளுக்கு பதிலளித்தல்
- திட்டத்தின் முக்கிய மைல்கற்களை தலைமையுடன் பகிர்ந்துகொள்ளுதல்
- கூட்டாளிகளுக்கு ஆவணங்களை விநியோகித்தல்
- குழு அறிவிப்புகள் அல்லது முன்மொழிவுகளை வரைதல் போன்றவைகளுக்கு உதவும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்? ஏஐ இன்பாக்ஸ் அம்சம் தற்போது கூகுள் ஏஐ அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு பீட்டா சோதனையில் உள்ளது. அதே நேரத்தில் மேம்படுத்தப்பட்ட 'ஹெல்ப் மீ ரைட்' அம்சங்கள் கூகுள் ஏஐ பிளஸ், ப்ரோ மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கும், அத்துடன் பிசினஸ் மற்றும் எஜுகேஷன் ஆட்-ஆன்களுக்கும் கிடைக்கின்றன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது பரவலாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OPINION: கூகுள் நிறுவனத்தின் இந்த மாற்றம் - ஜிமெயிலின் மொபைல் எக்ஸ்பீரியன்ஸில் ஏஐ-ஐ உட்பொதிப்பதன் மூலம், இமெயில் சேவையை வெறுமனே மெசேஜ்களை, இமெயில்களை நிர்வகிப்பதை விட, அந்தந்த மெசேஜ்களுக்கான மற்றும் இமெயில்களுக்கான விளைவுகளை நிர்வகிப்பதாக மாற்ற முயற்சிக்கிறது என்றே கூறலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் நிறுவனமானது ஜெமினிக்கான பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சத்தை (Gemini Personal Intelligence) இந்தியாவில் அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம், சூழலுக்கு ஏற்ற பதில்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப் ஒருங்கிணைப்பு உடன், ஏஐ அசிஸ்டென்ட்டின் திறன்களை இன்னும் விரிவுபடுத்துகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த அம்சம் - இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சத்தின் வழியாக ஜெமினியை தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் ஆப்களுடன் இணைக்க முடியும். இப்படி செய்வதன் வழியாக கிடைக்கும் டேட்டாவை கொண்டு - அது உங்களுடைய கேள்விகளுக்கு மிகவும் துல்லியமான மற்றும் விரிவான பதில்களை வழங்கும். அதாவது பர்சனல் இன்டெலிஜென்ஸ் மூலம், பயனர்கள் ஜெமினியை ஜிமெயில், கூகுள் போட்டோஸ், யூட்யூப் மற்றும் சேர்ச் போன்ற ஆப்களுடன் இணைக்க முடியும்.

இந்த அம்சம் இயக்கப்பட்டவுடன், கூகுளின் ஏஐ அசிஸ்டென்ட் ஆனது, கூகுளின் கீழ் உள்ள மேற்கூறிய சோர்ஸ்களில் இருந்து தகவல்களை பெற்று ஒருங்கிணைத்து, பல ஆப்களில் இருந்து கிடைத்த தரவுகளை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சரியான மற்றும் இன்னும் துல்லியமான பதில்களை வழங்கும்

Best Mobiles in India

English summary
Google introduced new AI Inbox in Gmail bottom navigation bar To Helps Users to Focus on Tasks first
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X