Google தந்த பரிசு: ஸ்டூடண்ட்களின் கையெழுத்து குறிப்புகளை இனி 'ஸ்டடி கைடு' ஆக மாற்றலாம்!
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதை எளிதாக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தனது ஜெமினி (Gemini) ஏஐ சாட்பாட் வழியாக புதிய பீச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கையால் எழுதிய குறிப்புகளை இனி டிஜிட்டல் முறையில் மாற்றி கொள்ள முடியும். ஸ்டடி கைடை (Study Guide) உருவாக்க முடியும்.
மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு முன்பாக பல்வேறு வகுப்புகளில் குறிப்புகளை எடுத்திருப்பார்கள் அல்லது புத்தகத்தில் படித்தில் முக்கியமானவற்றை குறித்து வைத்திருப்பர்கள். ஆனால், இதை எல்லாம் தேடி எடுத்து படிப்பதற்குள் சிரமாக இருக்கலாம். அதே நேரத்தில் குறிப்புகள் அடங்கிய நோட் தொலைந்தாலோ அல்லது தேவைப்படும் நேரத்தில் இல்லாமல் போனாலோ, இன்னும் சிரமமாக இருக்கும்.

இதையெல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ சாட்பாட் எளிதாக மாற்றி இருக்கிறது. கையெழுத்து குறிப்புகளை இனி ஸ்டடி கைடாக மாற்றி கொடுக்கிறது. இது டிஜிட்டலாக இருப்பதால், ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும்போது, ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்கள் வழியாக படித்து கொள்ளலாம். இல்லையென்றால், பிரிண்ட்அவுட் எடுத்தும் வைத்து கொள்ளலாம்.
1. போட்டோ எடுக்க வேண்டும்:
கையால் எழுதிய குறிப்புகளை போட்டோ எடுக்க வேண்டும். மாணவர்கள் தங்களது நோட்டுகளில் கையால் எழுதிய குறிப்புகளை போட்டோ எடுத்து அதை ஜெமினி ஆப்பில் பதிவேற்ற வேண்டும்.
2. ஸ்டடி கைடு (Study Guide):
பதிவேற்றப்பட்ட போட்டோக்களை ஆய்வு செய்து, ஜெமினி தானாகவே ஒரு முறையான ஸ்டடி கைடு அல்லது பாட சுருக்கத்தை உருவாக்கி கொடுக்கும். தேவைப்பட்டால், கூடுதல் விவரங்களையும் சேர்த்து கொடுக்கும்.
3. ஃபிளாஷ் கார்டுகள் (Flashcards):
கடினமான பாடங்களை எளிதில் நினைவில் கொள்ள உதவும் வகையில் ஃபிளாஷ் கார்டுகளையும் ஜெமினி சாட்பாட் உருவாக்கி கொடுக்கிறது. இதிலும் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
4. தேவையான மாற்றங்கள்:
நீங்கள் எடுத்த குறிப்புகளில் எதை சேர்க்க வேண்டும். எதை நீக்க வேண்டும். எதை விரிவாக சொல்ல வேண்டும் உள்ளிட்டவையை ப்ராம்ப்ட் (Prompt) வழியாக மாணவர்கள் தெரிவித்து கொள்ளலாம்.
பயன்படுத்துவது எப்படி?
உங்கள் குறிப்புகளை போட்டோ எடுத்து ஜெமினியில் பதிவேற்றம் செய்யுங்கள், எனது பாட குறிப்புகளின் அடிப்படையில் ஒரு ஸ்டடி கைடை உருவாக்கு (Create a study guide based on my course materials) என்று ப்ராம்ப்ட் செய்தால் போதும். உங்களுக்கு தேவையான ஸ்டடி கைடு உருவாக்கி கொடுக்கப்படும்.
இதை காப்பி செய்து வைத்து கொள்ளலாம் அல்லது பிரிண்ட்அவுட் எடுக்கலாம். மேலும், ஜெமினியில் கஸ்டம் ப்ராம்ப்ட்களை (Custom Prompts) பயன்படுத்த முடியும். அதாவது, ஃபிளாஷ் கார்டுகளை உருவாக்குவது போல பயிற்சி வினாக்களையும் (Practice Quizzes) உருவாக்கலாம். நீங்கள் எடுத்த குறிப்பிகளை வைத்து கேள்வி பதில்களை தயாரிக்க முடியும்.
ஆடியோ மற்றும் வீடியோ:
படித்து பழகுவதை விட, கேட்டு பழகுவது சில மாணவர்களுக்கு பிடிக்கும் என்பதால், குறிப்புகளைப் பாட்காஸ்ட் (Podcast) போல மாற்றும் வசதியும் இதில் உள்ளது. ஜெமினியின் ஆடியோ ஓவர்வியூ (Audio Overviews) பீச்சர் மூலம், உரையாடுவது போன்ற ஆடியோவாக மாற்றி அதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
இந்த வசதி 18 வயதுக்கு மேற்பட்ட, தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் யூசர்களுக்கு கிடைக்கிறது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஜிட்டல் ஆசிரியராகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இது, மாணவர்கள் தகவல் சேகரிப்பதில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பாடங்களைப் புரிந்து கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த உதவும்.


Click it and Unblock the Notifications