Home
Artificial intelligence

கில்லாடி Google.. இனி Mobile லாக் செய்தாலும், Laptop க்ளோஸ் செய்தாலும் நோ ப்ராப்ளம்.. இது தான் அப்டேட்!

ஜெமினி (Gemini) குறித்த கூகுள் (Google) நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை மிகவும் லட்சியம் மிக்கதாக மாறி வருகிறது. ஏனென்றால் ஜெமினிக்கான லேட்டஸ்ட் ரிலீஸ் ஆனது, கூகுள் நிறுவனமானது சாட்பாட்களை தாண்டி, உங்களுக்காகவே நேரடியாக சில காரியங்களை செய்யக்கூடிய ஏஐ-ஐ (AI) நோக்கி நகர்கிறது என்பதை காட்டுகிறது.

அந்த லேட்டஸ்ட் ரிலீஸ் - ஜெமினி ஸ்பார்க் (Gemini Spark) ஆகும். கூகுள் ஐ/ஓ 2026 நிகழ்வில் (Google I/0 2026 event) அறிவித்த சில நாட்களுக்கு பிறகு, கூகுள் தனது ஜெமினி ஸ்பார்க்கை அமெரிக்காவில் உள்ள கூகுள் ஏஐ அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு (Google AI Ultra subscribers) வெளியிட்டுள்ளது.

இனி Mobile லாக் செய்தாலும், Laptop க்ளோஸ் செய்தாலும் நோ ப்ராப்ளம்!

கடந்த சில ஆண்டுகளாக ஜெமினி பெரும்பாலும் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும், கன்டென்ட்டை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஜெமினி ஸ்பார்க் ஆனது முழுவதுமாக தன்னியக்க செயல்பாடுகளை பற்றியதாக இருக்கிறது. அதாவது, ஜெமினி ஸ்பார்க் எப்போதும் பின்னணியில் இயங்கிக்கொண்டே இருக்கும், மேலும் நீங்கள் கட்டளையிடுவதற்காக காத்திருக்காமல், உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையில் உள்ள விஷயங்களை அது கவனித்து கொள்ளும்.

கூகுள் நிறுவனமானது ஜெமினி ஸ்பார்க்கை, பயனரின் சார்பாக செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு முகவர் (AI agent) என்று விவரிக்கிறது. ஆனால் அது எப்போதும் பயனரின் கட்டுப்பாட்டில், 24/7 இயங்கிக்கொண்டிருக்கும். இந்த அம்சம் இப்போது ஜெமினி வெப்பில், வழக்கமான சாட் செயல்பாட்டுடன் ஒரு பிரத்யேக டேப் (tab) ஆக உள்ளது.

ஜெமினி ஸ்பார்க் ஆனது கூகுள் ஈகோசிஸ்டம் உடன் (Google ecosystem) நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதால், மற்ற ஏஐ அசிஸ்டென்ட்டிடம் (AI Assitant) இருந்து தனித்து நிற்கிறது. இதன்கீழ் நீங்கள் பல ஆப்களுக்கு இடையில் மாறி மாறி செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்கு - இதை ஜிமெயில் (Gmail), காலண்டர் (Calender), டிரைவ் (Drive), டாக்ஸ் (Docs), ஷீட்ஸ் (Sheets) மற்றும் ஸ்லைட்ஸ் (Slides) போன்ற கூகுள் ஒர்க்பேஸ் (Google Workspace) ஆப்களுடன் இணைக்கவும் முடியும்.

பயனர்கள், மீட்டிங்களை (Meeting) திட்டமிடவும், இன்வைட்களை நிர்வகிக்கவும், இமெயில்களை (emails) தேடவும், சாட்களை (Chats) சம்மரைஸ் செய்யவும், டாக்குமெண்ட் (Document) உருவாக்கவும், ஸ்ப்ரெட்ஷீட்களை (Spreadsheets) உருவாக்கவும், ஸ்லைடர்களை (Slider) உருவாக்கவும், மற்றும் பைல்களை (Files) ஒழுங்கமைக்கவும் ஜெமினி ஸ்பார்க்கிடம் கேட்கலாம்.

இதோடு கூகுள் நிறுவனமானது - இணைக்கப்பட்ட சேவைகள், தனிப்பட்ட நுண்ணறிவு அம்சங்கள், பயனர்கள் லாக்-இன் (Log-in) செய்த வலைத்தளங்கள், மற்றும் அவர்களின் சார்பாக வலைப்பக்கங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ரிமோட் ப்ரவுஸர் டூல்களுக்கான அணுகலையும் ஜெமினி ஸ்பார்க்கிற்கு வழங்குகிறது. சில நேரங்களில், பயனர் ஒவ்வொரு படியையும் தாங்களாகவே கிளிக் செய்ய வேண்டிய அவசியமின்றி, ஸ்பார்க்கால் வலைத்தளங்களை பிரவுஸ் செய்யவும், தகவல்களை நிரப்பவும், மற்றும் செயல்களை செய்யவும் முடியும்.

கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஸ்பார்க் ஜெமினி 3.5 இல் இயங்கும் கிளவுட் அடிப்படையிலான விர்ச்சுவல் மெஷின்களை (Virtual Machines) பயன்படுத்துகிறது, எனவே ஒரு பயனர் தனது லேப்டாப்பை க்ளோஸ் (Close) செய்தாலும் அல்லது ஸ்மார்ட்போனை லாக் (Lock) செய்தாலும் கூட பணிகள் தொடர்ந்து இயங்கும். இந்த பேக்கிரவுண்ட் செயலாக்கம், ஜெமினிக்கான கூகுளின் முக்கிய அம்சமாகும், இது உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் திறக்கும் ஒரு சாட்பாட்டை விட, ஒரு நிலையான டிஜிட்டல் உதவியாளராக வேலை செய்கிறது.

முன்னரே குறிப்பிட்டப்படி தற்போது, ​​ஜெமினி ஸ்பார்க் அமெரிக்காவில் உள்ள கூகுள் ஏஐ அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது கூகுளின் மிகவும் பிரத்யேகமான ஏஐ அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால், இதன் வெளியீடு சுமுகமாக நடந்தால், ஜெமினியின் அடுத்தகட்ட நகர்வுக்கு ஸ்பார்க் ஒரு முன்மாதிரியாக மாறுவதை கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Google Gemini Spark Launched in US can keep running even if user closes laptop or locks phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X